FIRST ON NET யசோதா விமர்சனம்..3.5/5.; சபாஷ் சமந்தா

FIRST ON NET யசோதா விமர்சனம்..3.5/5.; சபாஷ் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யசோதா படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ளது. சமந்தா, வரலட்சுமி சரத்குமார், முகுந்தன், சம்பத்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் என இரண்டு பேர் இயக்கி உள்ளனர்.

கதைக்களம்…

பெற்றோர் இல்லாத காரணத்தால் தன் தங்கை ஆபரேசனுக்காக போராடுகிறார் சமந்தா.

எனவே வாடகை தாயாக மாறி லட்சக்கணக்கில் பணம் பெற சமந்தா மருத்துவமனைக்கு செல்கிறார்.

அங்கு மிகப்பெரிய நிறுவனத்தில் பலத்த பாதுகாப்புடன் சமந்தாவை போலவே பல கர்ப்பிணி பெண்களும் பிரசவத்திற்காக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க தயாராகி வருகின்றனர்.

ஒரு சில கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன்னே இறக்கின்றனர். இதில் ஏதோ ஒரு சதித்திட்டம் இருப்பதாக நினைக்கிறார் சமந்தா.

சதி திட்டங்களை முறியடித்து அங்குள்ள பெண்களை காப்பாற்ற போராடுகிறார். அந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது? கர்ப்பிணிகளின் நிலை என்ன? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

முதலில் சாந்தமாக காணப்படும் சமந்த இடைவேளைக்குப் பிறகு ஆக்சனில் அதிரடி காட்டியுள்ளார் படத்தின் நாயகியாக தன் கேரக்டரை உணர்ந்து படம் முழுவதையும் தாங்கி நிற்கிறார்… சபாஷ் சமந்தா.

‘சர்கார்’ படத்தை தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் வரலட்சுமி… கோலிவுட் சினிமாவிற்கு கிடைத்துள்ள ஸ்டைலிஷான அழகான வில்லி வரலட்சுமி.

இதர நட்சத்திரங்களும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு.

டெக்னீஷியன்கள்….

பின்னணி இசை, விஷுவல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் பலம் சேர்த்துள்ளன.

மணிஷர்மாவின் பின்னணி இசையும் சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

படத்தின் வித்தியாசமான கான்செப்டும் அருமை. இதுவரை சொல்லப்படாத வாடகைத்தாய் & சிசு குழந்தை & அழகு சாதனங்கள் என சிறப்பாக கையாண்டுள்ளனர்.

இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கியுள்ளனர். யசோதா க்ளைமாக்ஸில் டுவிஸ்ட் மற்றும் அதிரடி திருப்பங்கள் நிறைந்துள்ளன. அதே சமயம் பெண்களுக்கான எமோஷனல் திரில்லரும் கலந்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆனால் பாதாள குகை… பிரம்மாண்ட செட் ஆகியவை செயற்கையாக உள்ளது. VFX – யில் கவனம் செலுத்தி இருக்கலாம்… அதுபோல ஆக்சன் காட்சிகளில் சமந்தா நார்மாலாகவே இருக்கிறார். கர்ப்பிணி என்பதை மறந்துட்டாரோ.??

ஆக சபாஷ் போட வைக்கிறார் சமந்தா..

Yashoda movie review and rating in tamil

காஃபி வித் காதல் விமர்சனம்..; கன்ஃப்யூசன் வித் காதல்

காஃபி வித் காதல் விமர்சனம்..; கன்ஃப்யூசன் வித் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஒன்லைன்…

சுந்தர் சி-யின் வழக்கமான குடும்ப சென்டிமெண்ட் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ளது இந்த காஃபி வித் காதல்.

கதைக்களம்…

பிரதாப் போத்தன் தம்பதிக்கு 3 மகன்கள்.. 1 மகள் (டிடி).. மூத்தவர் அண்ணன் ஸ்ரீகாந்த்.. முதல் தம்பி ஜீவா… இளையவர் ஜெய்.்

ஸ்ரீகாந்த்துக்கு சம்யுக்தாவுடன் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

ஜீவா தன் காதலி ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு-கெதர் உறவில் 3 வருடங்கள் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் ஏற்பாடுகளை பெற்றோர் செய்கின்றனர்.

ஜெய்யின் நெருங்கிய தோழி அம்ரிதா அவரை காதலிக்கிறார். ஆனால் முதலில் மறுக்கும் ஜெய் மெல்ல மெல்ல அம்ரிதாவுடன் காதல் கொள்கிறார்.

ஆனால் அம்ரித்தாவோ வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.

இந்த நிலையில் சொத்துக்காக ஆசைப்படும் ஜெய் ஒரு பணக்கார பெண்ணுக்கு ஓகே சொல்கிறார். (ஆனாலும் அம்ரித்தாவே வேண்டும் என அடம் பிடிக்கிறார்.)

ஆனால் அந்த பணக்கார பெண்ணுக்கோ ஜீவா மீது காதல் வருகிறது. ஜீவாவும் காதலிக்கிறார். ஆனால் ஒரு தன் தம்பி ஜெயிக்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் ஜீவாவுக்கு ரைசாவை பெண் பார்க்கின்றார் பெற்றோர். ஆனால் ரைசா ஸ்ரீகாந்த் உடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார்.

இது போன்ற கன்ப்யூஷனான காதல் கதைகளை கொண்டது இந்த படம். இறுதியில் யார் யாரோடு இணைந்தார்கள்? திருமணம் என்ன ஆனது? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்

கேரக்டர்கள்….

என்னதான் அண்ணன் வேடம் ஏற்று இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு பெரிதாக இடமில்லை.. தன் கள்ளக்காதலியே தன் தம்பியின் வருங்கால மனைவியா? என்ன பதறும்போது தவிக்கிறார். இதனையும் காமெடியாகவே சொல்லிவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.

ஜெயிக்கும் ஜீவாவுக்கும் அதிகப்படியான காட்சிகள் உள்ளன.. மனதுக்குப் பிடித்த பெண்ணா? அல்லது பணக்கார பெண்ணா? என அதிகமாகவே தடுமாறி இருக்கிறார் ஜெய்.

நிச்சயிக்கப்பட்ட ஜெய் தன் காதலை வேறு ஒரு பெண்ணிடம் (அம்ரிதா) சொல்லும் போது..”நீ நினைத்தால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி இருக்கலாம்.. ஆனால் என்னை விட வசதியான பெண்ணை ஏற்றுக் கொள்ள நினைத்தாயே.. இதான் உன் காதலா? என கேட்பது நெத்தியடி.

ஐஸ்வர்யா தத்தாவுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

இந்த மழைக்காலத்தில் ரசிகர்களுக்கு சூடேற்றிச் செல்கிறார் ரைசா வில்சன்.

யோகி பாபு & ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. கவுண்டமணி – செந்தில் போல கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

படம் முழுவதுமே கர்ப்பிணியாகவே வருகிறார் டிடி. ஆனால் படம் முடிந்த பிறகு கிளைமாக்சில் வரும் ரம்பம் ரம்பம் பாடலுக்குள் குழந்தை பெற்று ஆட்டம் போடுகிறார்.

ஸ்ரீகாந்தின் மகள் பள்ளி விழாவில் ஆட்டம் போடும்போது சைனிங் ஸ்டார் கோபப்படுவது ஏன்? சிறுமி செய்யும் நையாண்டியை கூட ஒரு நட்சத்திரம் ஏற்றுக் கொள்ள மாட்டாரா?

ஐஸ்வர்யா தன்னால் கர்ப்பமாக இருக்கிறார் என சொல்கிறார் ஜீவா. ஆனால் அதன் பின்னர் கிளைமாக்ஸ் காட்சியில்.. “நல்ல வேளை யார் புள்ளைக்கோ நீ அப்பாவாகி இருப்ப..” என டிடி சொல்வதெல்லாம் திணிக்கப்பட்ட சீன்.

டெக்னீஷியன்கள்…

ரம்பம் ரம்பம் பம்.. பாடலை தவிர மற்ற பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன்.

ஒளிப்பதிவு பாராட்டும்படியாக இருக்கிறது. ஸ்மார்ட்டான ஹீரோக்கள்.. அழகு அழகான ஹீரோயின்கள்.. என கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் கேமராமேன். ஆனால் எடிட்டர் தன் பணியை இன்னும் கொஞ்சம் கண்டிப்பாக செய்து இருக்கலாம்.

மற்றபடி எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே காதலை இடியாப்ப சிக்கலில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

ஆக.. காபி வித் காதல்… கன்ஃபியூஷன் வித் காதல் என்றே சொல்லலாம்

Coffee with kadhal movie review and rating in tamil

’லவ் டுடே’ LOVE TODAY விமர்சனம் 4.25/5.; அலைபேசியில் காதல் அலை

’லவ் டுடே’ LOVE TODAY விமர்சனம் 4.25/5.; அலைபேசியில் காதல் அலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவரது அடுத்த படத்தில் இவரே நாயகனாகவும் நடித்து இயக்கியுள்ளார்.

இந்த ‘லவ் டுடே’ படம் 2K கிட்ஸ் மற்றும் செல்போனில் வளர்ந்த காதலை சொல்லும் படமாக அமைந்துள்ளது.

கதைக்களம்…

ஹீரோ பிரதீப்.. ஹீரோயின் இவானா இருவரும் காதலிக்கின்றனர். ஹீரோயின் அப்பா சத்யராஜ்.

ஹீரோவின் அம்மா ராதிகா… அக்கா ரவீனா.. அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை யோகிபாபு.

ஒரு கட்டத்தில் சத்யராஜுக்கு பிரதீப் – இவானா காதல் தெரிய வருகிறது. எனவே கல்யாணத்திற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

பிரதீப்பின் செல்போனை இவானாவிடம் கொடுக்க… இவாவின் செல்போனை பிரதீப்பிடம் கொடுக்கிறார்.

24 மணி நேரம் இருவரும் போனை மாற்றிக் கொள்ள வைத்துக் கொள்ளுங்கள்.்அடுத்த நாள் வரை உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் இருந்தால்.. ஒளிவு மறைவு எதுவும் இல்லாமல் இருந்தால்.. உங்கள் காதலை நான் ஏற்கிறேன் என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? காதல் என்ன ஆச்சு? செல்போனால் ஏதாச்சும் பிரச்சனை வந்ததா? என்பதே கதை.

கேரக்டர்கள்…

90s கிட்ஸ் காதலை இன்றைய ட்ரெண்டிங்குக்கு ஏற்ப செமயாய் சொல்லிட்டார் பிரதீப். அதுவும் இன்ஸ்டாகிராம் இவர் டிராவல் செய்யும் வரும் வசனங்கள் வேற லெவல்.

இடைவேளை வரை.. முதல்பாதி செல்வதே தெரியவில்லை. பிரதீப் – இவானா பேசும் ரொமான்டிக் டயலாக்ஸ் ரசிக்க வைக்கிறது.

இவானா செம க்யூட்.. தன் லீலை காதலனுக்கு தெரிந்த பின்னும்.. காதலனின் லீலை இவருக்கு தெரிந்த பின்னும் இவானா காட்டும் ரியாக்சன் செம.

சத்யராஜ் அவரது பாணியில் பின்னி எடுத்துள்ளார். அவரது கேரக்டரில் வேறு யாரையும் நினைக்க முடியல. ராதிகாவும் கண்டிப்பான அம்மாவாக கவர்கிறார்.

யோகிபாபு காமெடி செய்யவில்லை என்றாலும் கண் கலங்க வைத்துவிட்டார்.

அக்கா ரவீனாரவி தன் கேரக்டரில் பக்கா. வருங்கால கணவரை நம்புவதும் பின்னர் சந்தேகப்படுவதும் என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

இவானாவின் பெஸ்ட்டி ரெவியும் (ஆஜித்) சிறப்பு.. இவர்களுடன் பிரதீப் ப்ரெண்ட்ஸ் கதிர் & டீம் கலக்கல்.

டெக்னீஷியன்கள்…

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு ஏக பொருத்தம்.

காதல் என்பது என்ன என்பதை அழகாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார். முக்கியமாக யோகிபாபு தன்னை உதாசீனப்படுத்தும் வசனங்களை பேசும்போது தேர்ந்த நடிகராக நிரூபித்துவிட்டார்.

கடைசியாக ராதிகா & சத்யராஜ் பேசும் வசனங்கள் சூப்பர் நெத்தியடி. ஒரு செடி நட்டு வச்சா தினம் தினம் நோண்டி பார்க்க கூடாது. அது வளரும் என நம்பனும்..

செல்போன் & சோஷியல் மீடியா போன்று எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கனும்.. உள்ளிட்ட வசனங்கள் அப்ளாஸ் பெறும்.

ஆக இந்த ‘லவ் டுடே’… அலைபேசியில் காதல் அலை

நித்தம் ஒரு வானம் 4.25/5.; நித்தம் ஒரு வானவில்

நித்தம் ஒரு வானம் 4.25/5.; நித்தம் ஒரு வானவில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் அசோக் செல்வன். எதிலும் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர். தன் வீட்டு மெத்தையில் படுத்தால் மட்டுமே உறக்கம் வரும். வேறு எங்கேயும் தங்க கூட யோசிப்பவர்.

வீட்டில் வளர்க்கப்படும் நாயை கூட தொட மாட்டார். இப்படியாக வாழும் இவருக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர் ப
பெற்றோர். பெண்ணும் பார்த்தாச்சு.

நாளை காலை திருமணம். இன்று இரவு ரிசப்ஷனும் நடக்கிறது. அப்போது வருங்கால மனைவியின் காதல் விவகாரம் தெரிய வருகிறது. இதனால் அசோக்கின் திருமணம் நின்று விடுகிறது.

விரக்தியில் இருக்கும் அசோக் செல்வன் வேறு வழி இல்லாமல் டாக்டரிடம் கவுன்சிலிங் செல்கிறார்.

அசோக் செல்வனின் மனநிலையை மாற்ற டாக்டர் அபிராமி தான் எழுதிய 2 புத்தகத்தை கொடுக்கிறார்.

அதில் இரண்டு காதல் கதைகள் இருக்கிறது.. இரண்டு கதைகளுமே நிறைவு பெறாத நிலையில் இருக்கிறது. இதனால் கடுப்பான அசோக் செல்வன் டாக்டரிடம் சண்டை போட்டு கதையின் முடிவை கேட்கிறார்.

இது கதையல்ல.. இது இருவரின் வாழ்வில் நடந்த சம்பவம்.. அவர்களை நேரில் சந்தித்து நீ அந்தக் கதையின் முடிவை தெரிந்துக் கொள் என சொல்கிறார்.

அதன்படி கொல்கத்தா மற்றும் சண்டிகர் செல்கிறார். அந்த நபர்களை சந்தித்தாரா.? அதன் பிறகு அசோக் செல்வன் வாழ்வில் என்ன மாற்றம் நடந்தது? அவர்கள் யார்? என்பத படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

ஒரு ஹீரோ ஐந்து ஹீரோயின்கள் என ஒரு அழகான காதல் காவியத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்.

சாக்லேட் பாய்… துடிப்பான இளைஞன்.. கம்பீரமான போலீஸ்… என அனைத்திலும் வெரைட்டி காட்டி அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன்.

கதைகளை படித்துவிட்டு கதை மாந்தர்களை தேடும் போது ரசிக்க வைக்கிறார்.. அதுபோல ஒரு கதைக்குள் அந்த கேரக்டராகவே அவர் பயணிப்பதும் சிறப்பான கற்பனை.

படத்தில் மூன்று நாயகிகள் முக்கியமானவர்கள். பயண தோழியாக வரும் ரித்து வர்மா ஜாலியான கேரக்டர்.

மென்மையான காதலியாக வந்து நம்மை சிலிர்க்க வைக்கிறார் ஷிவாத்மிகா. குண்டு விழிகளால் பேசி சுண்டி இழுக்கிறார். இனி இவருக்கு வாய்ப்புகள் குவியும்.

தன் துருதுறு நடிப்பால் அபர்ண பாலமுரளி அசத்தல். அப்பா பார்க்கும் பையன் வேண்டாம்.. நான் காதலித்து தான் திருமணம் செய்வேன் என அடம் பிடிக்கும் அபர்ணாவின் கேரக்டர் செம.

சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜீவாவும் சிறப்பு. கொஞ்சமே வந்தாலும் நடிகை அபிராமி, ஷிவதா, ஈஷா ரெப்பா ஆகியோர் அழகு. கேரக்டரை அழகாக செய்துள்ளனர்.

அழகம் பெருமாள், படவா கோபி, காளி வெங்கட், சௌந்தர்யா நஞ்சுண்டன் உட்பட பலரும் சூப்பர்.

டெக்னீஷியன்கள்…

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு கொல்கத்தா சண்டிகருக்கு நாம் ஒருமுறை சென்று வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.. அது போல் பனிமழை பொழியும் காட்சிகளை அவ்வளவு அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் கேமரா மேன் விது ஐயன்னா. இவரின் ஒளிப்பதிவு ஒரு விஷுவல் ட்ரீட் எனலாம்.

கோபி சுந்தர் இசையில் மென்மையான பாடல்கள் மனதை வருடும். தரண் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.

அழகான காதலிகளையும் அழகான காதலையும் காட்டி நம்மை படத்துடன் ஒன்ற வைத்து விட்டார் இயக்குனர் ரா கார்த்திக்.

மசாலா படத்திற்கு தேவையான காட்சிகள் என எதையும் வைக்காமல் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளது கூடுதல் சிறப்பு.

இரண்டாம் பாதியில் நீளத்தை கொஞ்சம் வெட்டி இருக்கலாம். ஆனாலும் எதிர்பாராத திருப்புமுனைகளை கொடுத்து நம் மனதை தேற்றி விட்டார் இயக்குனர்.

மற்றபடி.. நித்தம் ஒரு வானம்.. நித்தம் ஒரு வானவில்..

Nitham Oru Vaanam movie review and rating in tamil

அசோக் நடித்த 4554 விமர்சனம்.; டிரைவரின் சவாரியும் சவால்களும்..

அசோக் நடித்த 4554 விமர்சனம்.; டிரைவரின் சவாரியும் சவால்களும்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

டாக்ஸி டிரைவரின் வாழ்வியலையும் அவர்களின் போராட்டத்தையும் சொல்லும் 4554.

அறிமுக இயக்குனர் கர்ணன் மாரியப்பன் இயக்கத்தில் அசோக், ஷீலா, ஜாக்குவார் தங்கம், பெஞ்சமின், கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

முருகா படத்தில் நடித்த அசோக் இதில் நாயகன்.

இவர் ஜாக்குவார் தங்கம் வைத்திருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிகிறார். இவரது சொந்த வண்டியை அந்த நிறுவனத்திற்கு ஓட்டுகிறார்.

அசோக்கும் நாயகி ஷீலா நாயரும் காதலிக்கின்றனர். பெற்றோர் சம்மதத்துடன் நாளை மறுநாள் திருமணம்.. நாளை திருமண நிச்சயதார்த்தம் என்று இருக்கும் நிலையில் இவருக்கு திடீரென பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டி சவாரி வருகிறது..

முதலில் மறுக்கும் அசோக் வேறு வழியில்லாமல் சவாரிக்கு செல்கிறார்.

அந்த பயணத்தில் நான்கு பயணிகள் பயணிக்கின்றனர். (அவர்கள் துபாய் செல்ல சென்னை ஏர்போர்ட் செல்கின்றனர்) அதில் கோதண்டம் டிரைவர் அசோக்கை வெறுப்பேற்றிக் கொண்டே வருகிறார். பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு அவர்களை இறக்கிவிட்டு தன் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வேகமாக திரும்பி வருகிறார் அசோக்.

அப்போதுதான் கோதண்டம் தவறவிட்ட பாஸ்போர்ட் இவரது காரில் கிடப்பதை பார்க்கிறார். இந்த தகவலை கோதண்டத்திற்கு அசோக் தெரியப்படுத்த.. “தம்பி என்னுடைய வாழ்க்கையே அதில் தான் இருக்கிறது. நான் வெளிநாடு செல்ல வேண்டும்.. தயவு செய்து வந்து கொடுத்து விடு” என சொல்கிறார் கோதண்டம்.

தன்னை வெறுப்பேற்றிய கோதண்டத்தின் வாழ்வை பார்ப்பதா.? தன் காதல் திருமணத்தை பார்ப்பதா? என தவிக்கிறார்.

என்ன செய்தார் அசோக்.? என்பதே கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

நாயகன் அசோக் – நாயகி ஷீலா நாயர். இருவரும் கொடுத்த வேலையை செய்ய தங்களால் முடிந்த வரை முயற்சித்துள்ளனர்.

இவர்களது ரொமான்ஸ் பெரிதாக இல்லை.. காதலில் நெருக்கம் கூடியிருந்தால் நமக்கும் க்ளைமாக்ஸில் அடுத்தது என்ன நடக்குமோ? என்று எதிர்பார்ப்பு இருந்திருக்கும். ஆனால் அது மிஸ்ஸிங்.

காரில் பயணிக்கும் சக பயணிகளாக காமெடி நடிகர்கள் பெஞ்சமின் கோதண்டம் உள்ளனர். காமெடி ரசிக்கும் படி இல்லை.

இயக்குனர் தன் குடும்பத்தில் உள்ளவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளை வைத்துள்ளார். அது தவறில்லை.

ஆனால் அவர்களிடம் அதற்கு ஏற்ப வேலையை வாங்கி இருக்கலாம். அவர்களும் ஏனோ தானோ என வசனம் பேசி செல்வதாகவே உள்ளது.

பாடல்கள் கவனம் பெறவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. படத்தின் டைட்டிலை அடிக்கடி காட்ட வேண்டும் என்பதற்காகவே.. கார் நம்பர் பிளட்டை காட்டிக் கொண்டே இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுவும் அடிக்கடி ஒரே ஆங்கிளில் காட்டிக் கொண்டிருப்பது ஏனோ.? தெரியல.

கர்ணன் மாரியப்பன் என்போர் இயக்கியிருக்கிறார்.. இதுவரை காட்டப்படாத டாக்ஸி டிரைவரின் வாழ்க்கையையும் போராட்ட களத்தையும் காட்டி இருப்பது சிறப்பு.

முக்கியமாக உடன் பயணிப்பவர்கள் டிரைவரை வெறுப்பேற்றுவதாலும் அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும் எத்தகைய விளைவுகளை சந்திப்போம் என்பதை காட்டி இருக்கின்றார்.

க்ளைமாக்ஸில் பேசப்படும் வசனங்களும் காட்டப்படும் காட்சிகளும் செயற்கை தனமாக உள்ளது. அதை இன்னும் உணர்வுப்பூர்வமாக காட்டிருந்தால் இந்த கார் பயணம் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஆக இந்த 4554…. ஒரு டிரைவரின் சவாரிகளையும் சவால்களையும் சொல்ல முயற்சிக்கிறது…

பனாரஸ் விமர்சனம் 3.5/5.; சேலையில் சிக்கிய சேவகன்

பனாரஸ் விமர்சனம் 3.5/5.; சேலையில் சிக்கிய சேவகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Zaid Khan, Sonal Monteiro, Sujay Shastry, Devaraj, Achyuth Kumar
Directed By : Jayatheertha
Music By : B. Ajaneesh Loknath
Produced By : Tilakraj Ballal, Muzammil Ahmed Khan

ஒன்லைன்…

எங்கும் காதல்.. என்றென்றும் காதல்… எப்போதும் காதல்…

கதைக்களம்…

அறிமுகங்கள்.. நாயகன் – ஜையீத் கான்..
நாயகி – சோனல் மோண்டோரியோ

நண்பர்களுக்குள் ஒரு சேலஞ்ச் (போட்டி) நடக்கிறது. அதன்படி நாயகியை ஒரு வாரத்திற்குள் தன் காதல் வலையில் விழ வைப்பேன் என சவால் விடுகிறார் நாயகன்.

அதன்படியே… டைம் ட்ராவல் கதைகளை சொல்லி மூன்றே நாட்களில் நாயகியின் படுக்கையறை வரை செல்கிறார். அப்போது விளையாட்டாக எடுக்கும் ஒரு செஃல்பியை நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

அதை மற்றொரு நண்பர் சமூக வலைத்தளத்தில் பகிர நாயகிக்கு பிரச்சனை வருகிறது..

இதனால் எவரிடமும் சொல்லாமல் பனாரஸ் செல்கிறார். நாயகியை தேடி அங்கு செல்லும் நாயகன் காதலியை சந்தித்தாரா.? காதல் கைகூடியதா? என்பதே கதை.

இதனிடையில் நாயகன் டைம் லூப்பில் சிக்கி கொள்கிறார். அவர் அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பதே க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்….

நாயகன் ஜையீத் கான் அறிமுகம் என்றாலும் அசத்தல்.. செம ஸ்மார்ட்டாக வருகிறார்.. ரொமான்ஸில் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் ஓகே.

(ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. ஒரு சண்டைக் காட்சியில் தெறிக்கும் கடற்கரை மணலும்.. வில்லன் வாயில் இருந்து வரும் ரத்தமும்… கலந்த காட்சியை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்.)

நாயகி சோனல் மோண்டோரியோ.. பான் இந்தியா படம் என்றாலும் சுடிதார் மட்டுமே வந்து ரசிகர்களை தன் அழகால் கவர்கிறார். “என்னய்யா படம் முழுவதும் இப்படியா? என நினைக்கும் போது ஒரு டூயட் காட்சியில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி சூடேற்றிவிட்டார்.

நாயகியின் சித்தப்பாவாக அச்யுத் குமார் மெச்சூரிட்டி ஆக்டிங். ( அண்மையில் வெளியான காந்தாரா படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருந்தார்)

நாயகியின் சித்தியாக நடித்தவரும் சிறப்பு. இவர்கள் (நாயகி & சித்தி) இருவருக்கும் ஒரே முக ஜாடை என்பதால் குடும்பம் பொருத்தம் செம.. என்னை ஏன் இப்படி அழகா படைச்ச ஆண்டவா? என இவர் சொல்லும் போதும் ரசிக்க வைக்கிறார்.

ரஜினி ரசிகராக வரும் சாம்பு என்ற சுஜய் சாஸ்திரி கவனிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் காமெடியாக பேசி தான் இறந்தவர்களை மட்டுமே போட்டோ எடுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது கலங்க வைக்கிறார்.

டெக்னீஷியன்கள்….

காதல் படங்கள் என்றாலே கண்களுக்கு குளிர்ச்சியான விஷயங்கள் வேண்டும்.. அதுவும் பனாரஸ் போன்ற இடத்தை இதுவரை யாரும் காட்டிடாத கோணத்தில் காட்டி இருக்கிற ஒளிப்பதிவாளர்.

பொதுவாகவே காசி வாரணாசி பனாரஸ் ஆகிய இடங்களை காட்டினால் கங்கை நதி.. அகோரிகள்.. மக்கள் கூட்டம்.. ஆகியவையே நம் கண்களில் தென்படும்.

ஆனால் இதில் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் முறைகளையும் காட்டி இருப்பது கூடுதல் சிறப்பு. இவற்றுக்கு காரணமானவர் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி.

அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை கூடுதல் சிறப்பு.. “இலக்கண கவிதை எழுதிய அழகே…” என்ற பாடல் அழகு.

கே.எம்.பிரகாஷின் படத்தொகுப்பு சிறு தொய்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் காதல்.. மோதல்.. என படம் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் டைம் லூப் என படத்தின் வேகத்தை குறைத்து விட்டது.

இதில் என்னதான் சொல்லப்போகிறார்கள்? என்ற குழப்பமான மனநிலையில் ரசிகர்கள்.

தமிழுக்கு ஏற்றபடி நிறைய லிப்சிங் காட்சிகள் உள்ளது பாராட்டுக்குரியது. வசனங்களும் காதலர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

ஒரு வார்த்தை பேசி விட்டால் அது புரிந்துவிடும்.. ஆனால் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள்.. போன்ற வசனங்கள் சிறப்பு.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயதீர்த்தா. காதல் கதையை வித்தியாசமான இடத்தில் சொல்ல முயற்சித்துள்ளார்.

படம் ஆரம்பிக்கும் போது டைம் டிராவல் கதையாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.. ஆனால் அதன் பிறகு சாதாரண காதல் கதையாக உருவெடுத்து அதை குடும்ப செண்டிமெண்டில் முடித்திருப்பது நல்ல கற்பனை.

ஆக பனாரஸ்.. சேலையில் சிக்கிய சேவகன்

More Articles
Follows