கேணி விமர்சனம்

கேணி விமர்சனம்

ஜெயப்ரதாவின் கணவர் கேரளாவில் உயர் பதவியில் உள்ளார். அவருக்கு தமிழ் நாட்டின் எல்லையில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் உள்ள கிணற்றில் வற்றாத அளவுக்கு எப்போதுமே தண்ணீர் இருக்கும்.

அந்த கிணற்றை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் இருமாநில சில அரசியல்வாதிகள், அவர் மீது ஒரு பழியை சுமத்தி சிறையில் அடைக்கின்றனர்.

சிறையில் மாரடைப்பால் அவர் இறந்துவிடுகிறார்.

எனவே அவருடைய கடைசி ஆசையின் படி அந்த கிராமத்து வருகிறார் ஜெயப்ரதா.

Keni-movie-stills-15

 

அப்போது அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் அந்த மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவ நினைக்கிறார்.

இதற்கு ஊர் தலைவர் பார்த்திபன், அனுஹாசன், ரேவதி, நாசர் உள்ளிட்ட பலரும் உதவ வருகின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகளால் இந்த பிரச்சினை கோர்ட் வரை செல்கிறது.

எனவே கோர்ட் வரை தனியாக சென்று போராடுகிறார் ஜெயப்ரதா.

இறுதியில் அவரின் ஆசை நிறைவேறியதா? இரு மாநில பிரச்சினைகள் என்னானது? ஊர் மக்கள் என்ன செய்தார்கள்? கோர்ட் தீர்ப்பு என்ன? என்பதே நீதி மன்றம் சொல்லும் மீதிக்கதை.

DWX4uT_U8AAXFJZ

 

கேரக்டர்கள்..

படம் முழுக்க ஜெயப்ரதா போராட்டம்தான். முகத்தில் வயது தெரிந்தாலும் நடிப்பில் இளமையில் பார்த்த அதே முதிர்ச்சி தெரிகிறது.

ஊர்த்தலைவர் பார்த்திபன் நக்கல் கலந்த பேச்சு ரசிக்க வைக்கிறது. இவர் சாம்ஸ், பிளாக் பாண்டி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

நாசர், ரேவதி, ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், அனுஹாசன், தலைவாசல் விஜய், ஆகியோர் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

Keni-movie-stills-61

 

தொழில்நுட்ப கேரக்டர்கள்..

சாம் சி.எஸ் இசையில் எஸ்பிபி, ஜேசுதாஸ் பாடும் அய்யாச்சாமி பாடல் அருமை.

படத்தை முழுவதும் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரது கேமரா கண்களில் காட்சிகள் அனைத்தும் இயற்கையை வியக்க வைக்கிறது.

முதல்பாதியில் சொல்லப்பட்ட தீவிரவாதிகள் கதை, இரண்டாம் பாதியில் என்ன ஆனது? என்று காட்டவில்லை.

கோர்ட் தீர்ப்பில் இயக்குனர் நிஷாத் உயர்ந்து நிற்கிறார்.

அனுஹாசன் கிராமத்து பெண் போல பேச முயற்சித்தாலும் அவரின் முதிர்ச்சியான பேச்சு சிட்டி பெண் போல தோன்ற வைக்கிறது.

படத்தில் வரும் கேரக்டர்கள் ஜெயப்ரதாவுக்கு நிறைய பில்டப் கொடுகிறார்கள். ஆனால் இறுதியில் அந்த காட்சிகள் இல்லை என்பது வருத்தம்தான்.

தண்ணீர் அவசியத்தை இந்த தலைமுறை தெரிந்துக் கொள்ள நிச்சயம் படம் பார்க்கலாம்.

கவர்ச்சி, காதல், இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு என எதுவும் இல்லாமல் இருந்தாலும் தண்ணீருக்காக இந்த படத்தை பார்க்கலாம்.

கேணி.. தண்ணீருக்காக கண்ணீர் போராட்டம்

Comments are closed.

Related News

பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா,…
...Read More
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது…
...Read More
ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக…
...Read More
ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக…
...Read More