கோலி சோடா 2 விமர்சனம்

கோலி சோடா 2 விமர்சனம்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, சுபிக்ஷா, செம்பன் வினோத், பரத் சீனி, இசக்கி பரத், வினோத், க்ருஷா, கௌதம் மேனன், ரோகினி, ரேகா மற்றும் பலர்
இயக்குனர்: விஜய் மில்டன்
இசையமைப்பாளர்: அச்சு ராஜமணி
ஒளிப்பதிவாளர்: ஸ்ரீதர்
எடிட்டர் : தீபக்
சண்டைப் பயிற்சி: சுப்ரீம் சுந்தர்
தயாரிப்பாளர்: பரத் சீனி
பிஆர்ஓ. : சுரேஷ் சந்திரா ரேகா

கதைக்களம்…

படத்தில் 3 ஹீரோஸ், 3 ஹீரோயின்ஸ், 3 வில்லன்ஸ். எனவே கொஞ்சம் விரிவாகவே சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கிறோம்.

மாறன் (பரத் சீனி) (இவர்தான் படத்தயாரிப்பாளர், இயக்குனர் விஜய் மில்டனின் தம்பி).

இவர் ஒரு ரவுடி கும்பலிடம் வேலை செய்கிறார். ரோகினியின் மகள் சுபிக்ஷாவை (படத்தில் இன்பா) காதலிக்கிறார். காதலியின் கட்டாயத்தால் ரவுடி கும்பலிடம் இருந்து விலகி நல்ல வேலைக்கு செல்ல நினைக்கிறார்.

ஹோட்டலில் பரோட்டா போடும் மாஸ்டர். ஆனாலும் பேஸ்கட் பால் விளையாடி சாதிக்க நினைக்கிறார்.

இவர் இசக்கி பரத் (ஒலி) இவரின் காதலி க்ருஷா (படத்தில் மதி)

ரேகாவின் மகன் ஆட்டோ சிவா. சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸிக்கு ஓட்ட ஆசைப்படுகிறார். இவர் ஒரு பெரியவருக்கு உதவ அவரின் பேத்தி இவருக்கு காதலியாகிறார்.

இவர்கள் மூவருக்கும் மற்றொருவரை தெரியாது. ஆனால் இந்த 3 பேரை தெரிந்த ஒரே நபர் சமுத்திரக்கனி.

ஏதோ ஒரு சூழ்நிலையில் இவர்களை சந்திக்கும் முன்னாள் போலீஸ்காரர் சமுத்திரக்கனி இந்த இளைஞர்களுக்கு உதவுகிறார்.

மூவரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்கையில் மூவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வில்லன்கள் குறுக்கிடுகின்றனர்.

இதனால் அந்த இளைஞர்களின் வாழ்க்கையே நாசமாகிறது.

ஒரு சூழ்நிலையில் இந்த 3 வில்லன்களுக்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வருகிறது.

அதன் பின்னர் ஒரு புள்ளியில் இணையும் இவர்கள் மூவரும் எப்படி அந்த வில்லன்களை பழிவாங்குகிறார்கள்? என்பதே இந்த கோலி சோடா 2.

கேரக்டர்கள்…

3 ஹீரோக்களுக்கும் சரி சமமான கேரக்டர்களை கொடுத்துள்ளார் விஜய் மில்டன். போட்டி அதிகமாக இருப்பதால் அவர்களே போட்டி போட்டு நடித்துள்ளனர்.

அதுபோல் 3 வில்லன்களும் செம. அதிலும் தில்லை கேரக்டரில் வரும் செம்பன் மிரட்டல் வில்லன்.

காலாவில் குடிகாரராக வரும் சமுத்திரக்கனிக்கு இதிலும் அதே கேரக்டர்தான். ஆனால் பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார்.

முதலில் இவரது கேரக்டர் ஓவர் அட்வைஸ் செய்வது போல தோன்றினாலும் பின்னர் அதுவே அந்த இளைஞர்களுக்கு வழிகாட்டுவது நச்.

அம்மாக்களாக வரும் ரோகினி மற்றும் ரேகா கேரக்டர்களில் கச்சிதம். ரோகினி தனது பிளாஷ்பேக்கை ஓவியங்கள் மூலம் தன் மருமகனிடம் சொல்வது ரசிக்கும் ரகம்.

நாயகிகளில் சுபிக்ஷாவின் அழகு சுகம். கிருஷாவும் நம்மை கவனிக்க வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் சில காட்சிகளில் வந்தாலும் பார்வையாலே மிரட்டுகிறார்.

பார்வையிழந்த அந்த சிறுமியும் பாராட்டுக்குரியவர்தான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கௌம்பு பாடல் நிச்சயம் பட்டைய கிளப்பும். பொண்டாட்டி பாடலும் காட்சி அமைப்புகளும் அருமை.

அச்சு ராஜமணி பின்னணி இசை பேசப்படும். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளார்.

சண்டைக் காட்சிகளை கமர்சியலாக கொடுக்காமல் படு யதார்த்தமாக கொடுத்துள்ளார். ஆனால் அந்த காட்சிகளின் நடுவே 3 இளைஞர்களும் வசனம் பேசுவதால் எதை கவனிப்பது என்றே தெரியவில்லை. அதிலும் சண்டைப் போட்டுக் கொண்டே பேசுவது புரியவில்லை.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு பலம்.

ஒருவரின் காட்சியை முடித்துவிட்டு மற்றொருவரின் காட்சியை காட்டாமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் காட்டி காட்டி காட்சிகளை நகர்த்தியுள்ளார். இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டலாம்.

இது ரசிகர்களுக்கு முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் எல்லாவற்றையும் இணைத்துவிடுகிறார் டைரக்டர்.

முதல் பாகத்தில் சிறுவர்களாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த 2ஆம் பாகத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்.

கோலி சோடா 2… இந்த ஜிஎஸ்டி-யை மக்கள் ஏற்பார்கள்

Comments are closed.

Related News

மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன்…
...Read More
பல படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர்…
...Read More
ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்…
...Read More