சஞ்ஜீவன் விமர்சனம்.; ஜீவனுள்ள ஸ்னூக்கர்

சஞ்ஜீவன் விமர்சனம்.; ஜீவனுள்ள ஸ்னூக்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் மணி சேகர் இயக்கியிருக்கும் ‘சஞ்ஜீவன்’ படத்தில் வினோத், நிஷாந்த், சத்யா, யாசின் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசின் இவர்கள் ஐவர் நெருங்கிய நண்பர்கள்

குடி கும்மாளம் என ஜாலியாக வாழும் நண்பர்கள் மத்தியில் நல்ல பையனாக இருக்கிறார் நாயகன் வினோத். மேலும் ஸ்னூக்கர் போட்டிகளில் இவரே முதலிடம்.

நாயகனின் கேரக்டர் நாயகி திவ்யாவுக்கு பிடித்துப்போகவே இருவரும் காதலிக்கிறார்கள்.

ஒரு நாள் ஸ்னூக்கர் போட்டியில் வென்றதை கொண்டாட நண்பர்களுடன் காரில் ஏற்காடு பயணிக்கின்றனர்.

அங்கு என்ன நடக்கிறது.. அங்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக வினோத், நிஷாந்த், சத்யா, விமல், யாசின் இவர்கள் அனைவரும் நடிப்புக்காகவும் நட்புக்காகவும் ஒன்றிணைந்துள்ளனர்.

சினிமாவை தாண்டியும் இவர்கள் நட்புடன் இருப்பதாகவே தெரிகிறது. அந்த ரியல் லைஃப் கெமிஸ்ட்ரி தான் படத்தின் கதை ஓட்டத்திற்கும் பெரும் பலமாக இருந்தது.

நாயகியாக திவ்யா துரைசாமி. கண்களும் கூந்தலும் இவருக்கு கூடுதல் அழகு. நடிப்பிலும் குறையில்லை. (இவர் முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்)

டெக்னீஷியன்கள்..

ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் சொர்ண குமார் நேர்த்தியாக கொடுத்து ஸ்னூக்கர் விளையாட்டையும் கேமராவில் விளையாடி இருக்கிறார்.

அதுபோல கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னர் நடக்கும் சேசிங் காட்சிகளை தத்ரூபமாக காட்டியுள்ளனர்.

தனுஷ் மேனனின் பின்னணி இசையும் ஓகே.

படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி கதைக்கு ஏற்ப வேகம் பிடித்து விறுவிறுப்பை கூட்டியுள்ளது சிறப்பு.

திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குனர் பாராட்டைப் பெறுகிறார். படத்தில் தொய்வு என்பதே இல்லாமல் கதையோட்டத்தை சிதறாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி சேகர்.

ஆக.. சஞ்ஜீவன்… ஜீவனுள்ள ஸ்னூக்கர்

Sanjeevan movie review and rating in tamil

ஆற்றல் விமர்சனம்..: கார் கனவு

ஆற்றல் விமர்சனம்..: கார் கனவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே எல் கண்ணன் இயக்கத்தில் செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக ஜே மைக்கேல் தயாரித்துள்ள படம் ‘ஆற்றல்’.

இதில் விதார்த், ஷிரிதா ராவ், வம்சி கிருஷ்ணா, வித்யூ ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம் :

மெக்கானிக்கல் இன்ஜினியர் விதார்த். இவரின் அப்பா சார்லி.

ஓர் தானியங்கி கார் (ஆட்டோமேட்டிக் கார்) ஒன்றை உருவாக்க ஆசைப்படுகிறார் விதார்த். அதற்கு ரூபாய் 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

மகனுக்காக 10 லட்ச ரூபாய் திரட்டி கொண்டு வருகிறார் சார்லி. அப்போது திடீரென சாலை விபத்தில் இறக்கிறார்.

இது நடந்த சில தினங்களில் இதே போன்ற ஒரு சாலை விபத்து நடக்கிறது. அப்படி என்றால் தன் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்கிறார் விதார்த்.

பணத்தை பறிக்கும் மர்ம நபர்கள் யார்.? அப்பாவின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? ஆட்டோமேட்டிக் கார் கனவு நனவானதா? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள் :

வழக்கம்போல விதார்த் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். குடும்ப பாசம்.. காதல் என வலம் வருகிறார். ஆனால் எப்போதுமே எதையோ பறி கொடுத்தவர் போலவே இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

நாயகியாக ஷிரிதா ராவ். அழகான கண்கள்.. காதல் காட்சிகளில் வெட்கப்படும் அழகே தனி.

அப்பாவாக சார்லி அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.

ரமா, விக்னேஷ்காந்த், வித்யூலேகா, வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

வம்சி கேங்க்கை பார்த்தால்… இனி உணவு டெலிவரி செய்ய வருபவர்களை வீட்டிற்கு வெளியே நிற்க வைப்பதே நல்லது என மக்கள் நினைப்பார்கள்.

டெக்னீஷியன்கள்…

அஸ்வின் ஹேமந்த் இசையும் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கே எல் கண்ணன் திரைக்கதையை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார்.

ஆனால், அதை இன்னும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

ஆக ஆற்றல்.: விவேகம் இல்லை.. கொஞ்சம் குறைவுதான்..

காந்தாரா விமர்சனம் 4.5/5.; கன்னட சினிமா காலரை தூக்கி விட்டுக்கலாம்

காந்தாரா விமர்சனம் 4.5/5.; கன்னட சினிமா காலரை தூக்கி விட்டுக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் கிஷோர் (கறாரான வனத்துறை அதிகாரியாக..) நாயகியாக சப்தமி கவுடா நடித்துள்ளார்.

KGF படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

நில அரசியல்.. அரசு நிர்வாகம்.. பழங்குடியின மக்கள் என முக்கோண கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடியின மக்களுக்குமான நிலப் பிரச்சினையை தோலுரிக்கும் படம்.

ரிஷப் ஷெட்டி நடித்து அவரது இயக்கத்தில் உருவான ‘காந்தாரா’ படம் கடந்த வாரம் வெளியானது. இன்று அக்டோபர் 15ல் தமிழில் டப்பிங் வெர்சன் வெளியாகி உள்ளது.

அண்மையில் வெளியாகி கன்னடர்களை மட்டுமல்லாமல் இந்திய மக்களை கவர்ந்த படங்கள் ‘கேஜி எஃப்’ மற்றும் ‘சார்லி 777’.. அந்த வரிசையில் இந்த ‘காந்தாரா’ படமும் நிச்சயம் இணைந்து விட்டது.

காந்தாரா

கதைக்களம்…

1880களில் பெரும் செல்வாக்கு கொண்ட அரசர் நிம்மதி தேடி அலைகிறார். அப்போது பழங்குடியின மக்கள் வழிபடும் கடவுளை தனக்கு தருமாறு கேட்கிறார்.

காரணம் அந்த கடவுளை பார்த்த அடுத்த கனமே அவருக்கு முழு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது. கடவுளை கொடுத்தால் அதற்கு பதிலாக ‘தன் நிலங்களை உங்களுக்கு தருகிறேன்” என்கிறார்.

சில 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர் பரம்பரையில் வந்தவர்கள் தங்களுக்கு நிலத்தை தருமாறு பழங்குடியின மக்களிடம் சண்டை போடுகின்றனர். இந்த மோதல் தொடர்பான கதைக்களமே இந்த படம்.

காந்தாரா

கேரக்டர்கள்….

‘ஆடுகளம்’ படத்தில் அசத்திய கிஷோர் இதில் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நம்மை கவர்ந்திருக்கிறார். அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அரசரின் வாரிசாக அச்யுத் குமார் செம அசத்தல்.. க்ளைமாக்சில் இவரின் வில்லத்தனம் வேற லெவல் (ரஜினி முருகன் படத்தில் கீர்த்தியின் அப்பாவாக வருவாரே அவரே தான்).

ரிஷப் செட்டியின் நண்பர்களாக வரும் இருவரும் கலகலப்புக்கு உதவியுள்ளனர். அவர்களின் சாரல் மழை போன்ற காமெடிகள் நம்மை கண்டிப்பாக சிரிக்க வைக்கும்.

நாயகனின் அம்மாவாக வருபவரும் கண்டிப்பாக பொறுப்பான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

நாயகி சப்தமி கவுடாவின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு கூட இது போன்ற கேரக்டர்கள் கிடைப்பது இல்லை. அதே சமயத்தில் சில காட்சிகளில் சூடு ஏற்றவும் தவறவில்லை.

காந்தாரா

நாயகன் & டைரக்டர்..

நாயகனே படத்தை இயக்கி நடித்து இருப்பதால் அவரால் தன் கேரக்டரை முழுவதுமாக உணர்ந்து நமக்கு காந்தாரா என்ற காந்த விருந்தை வழங்கியிருக்கிறார். நம்மை ஒவ்வொரு காட்சியிலும் காந்தம் போல இழுத்து கட்டிப்போட்டு விட்டார்.

முக்கியமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இதுபோன்ற ஒரு அசுரத்தன நடிப்பை எவரிடமும் பார்க்க இயலாது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் & புஷ்பா போன்ற காடுகளே இதன் களம் என்றாலும் ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான விருந்து அளித்திருக்கிறார்.

படத்தில் நாயகன் முழுவதும் லுங்கி தான் கட்டி நடித்திருக்கிறார். ஆனால் நம் தமிழ் ஹீரோக்கள் லுங்கி கட்டி நடிப்பதையே விரும்புவதில்லை. ஏதோ ஓரிரு காட்சிகள் மட்டுமே லுங்கியுடன் வருவார்கள்.

ஆனால் படம் முழுவதும் ஒரு மாசான அதிரடியான அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் ரிஷப்.

சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது நெருப்பு வைத்துக் கொண்டு சண்டை போடுவது வித்தியாசமான கற்பனை. மழையும் நெருப்பும் ஒத்து வராத வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு அந்த சண்டை வடிவமைத்து இருப்பது சூப்பரோ சூப்பர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பாளர் பிரகாஷ், பிரதீக் ஷெட்டி, அரங்க அமைப்பாளர் தரணி கங்கே புத்ரா, ஆடை வடிவமைப்பாளர் பிரகதி ரிஷாப் ஷெட்டி ஆகிய அனைவருமே 100% உழைப்பை கொடுத்துள்ளனர்.

100 வருடங்களுக்கு முன்பு.. 50 வருடங்களுக்கு முன்பு… 30 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையை என அனைத்தையும் அற்புதமாக காட்டியுள்ளனர்.

ஆக இந்த காந்தாரா… கன்னட சினிமாவினர் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்..

காந்தாரா

Kantara movie review and rating in tamil

FIRST ON NET பிஸ்தா விமர்சனம்.; பேரு வச்சிட்டா போதுமா.?

FIRST ON NET பிஸ்தா விமர்சனம்.; பேரு வச்சிட்டா போதுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத நிலையில் பத்திரிக்கை மண்டபம் பேனர் எல்லாம் ரெடி.. கல்யாண நாளும் வந்துவிட்டது.. பெண் கிடைத்தாளா? என்பதே ஒன்லைன்.

இதேபோன்ற கதை ஒரு படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தின் பெயர் ‘கட்டம் சொல்லுது’. அந்த படத்தில் தீபா தன் மகனுக்கு பெண் கிடைக்காமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சதீஷ் நடித்துள்ள படம் ‘பிஷ்தா’.

இதே பெயரில் கார்த்தி, நக்மா, மணிவண்ணன் நடித்த (பிஸ்தா) படம் 15 – 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

சிரிஷ், செந்தில், யோகி பாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், நமோ நாராயணா, லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

படத்தின் ஆரம்ப காட்சியே அமர்க்களம்..

திருமணத்துக்கு ரெடியாகிவிட்டார் ஹீரோ சிரிஷ். திருமண அழைப்பிதழ் ரெடி.. பேனர் ரெடி.. ஆனா எதிலும் பெண்ணின் முகமும் இல்லை.. பெயரும் இல்லை..

இவரின் திருமணம் நடந்து விடக்கூடாது என வில்லன் கோஷ்டி தடுக்க நினைக்கிறது. அவர்கள் தடுக்க நினைக்க என்ன காரணம்.?

அன்று இரவு தான் நண்பர்கள் பெண் தேட ஆரம்பிக்கிறார்கள்.. அதற்கான காரணம் என்ன? அவருக்கு பெண் கிடைக்கவில்லையா? அப்படி என்றால் பத்திரிக்கை அடிக்க என்ன காரணம்?

இடையில் நடந்த குழப்பங்கள் என்ன என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பெண்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்டாக இருக்கிறார் சிரிஷ். ஆனால் நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.. ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் உணர்வுகள் போதவில்லை

செந்தில், சதீஷ், யோகிபாபு, லொள்ளு சபா சாமிநாதன், ஞானசம்பந்தம் என பெரிய காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

சில இடங்களை சிரிக்க வைத்துள்ளனர். சதீஷ் காமெடி மொக்கையாக அமைந்துவிட்டது.

படத்தில் நாயகி மிருதுளாவை விட அக்கா அருந்ததி அழகாகவும் அருமையாகவும் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட்.

டெக்னீஷியன்கள்…

தரண் இசையில்… உருவான 2 பாடல்கள் அருமை.. ஒன்று குத்தாட்டம்… 2 மெலோடி.. ‘ஆத்தாடி பாத்தேனே….’.. ‘என்னை கொல்ல வந்த தேவதையோ..’ பாடல் சிறப்பு.

ஆனால் இரண்டு பாடல்களிலும் குழப்பம் இருக்கு.. காரணம் ஒரு வரிக்கு பாடுகிறார்.. அடுத்தவரிக்கு பாடவில்லை.. பாடினால் பாடலை முழுவதுமாக பாடுவது போல காட்ட வேண்டாமா?

ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். பெயரளவில் இருக்கும் பிஸ்தா சுவையாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது பெரிய பிஸ்தா போல மாஸாக காட்டி இருக்கலாம். அதுவும் இந்த படத்தில் மிஸ்ஸிங்.

இசையமைப்பாளர் தரண் மற்றும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் தரன்-னின் இசையில் உருவாகும் 25-வது படமாகும்.

ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ளார்.

ஆக இந்த பிஸ்தா… பெயருக்கு மட்டுமே..

Pistha movie review and rating in tamil

FIRST ON NET பொன்னியின் செல்வன் விமர்சனம் 4.5/5.;. தமிழர்களின் பெருமை

FIRST ON NET பொன்னியின் செல்வன் விமர்சனம் 4.5/5.;. தமிழர்களின் பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

முதல் பாகம் இன்று செப்டம்பர் 30-ம்தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ரவிவர்மன்.

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.

————————————
கேரக்டர்கள் அறிமுகம்…

ஆதித்ய கரிகாலன் – விக்ரம்

வந்தியத் தேவன் – கார்த்தி

ராஜ ராஜ சோழன் – ஜெயம் ரவி

நந்தினி – ஐஸ்வர்யா ராய்

குந்தவை – த்ரிஷா

பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்

ரவிதாசன் – கிஷோர்

பூங்குழலி – ஐஷ்வர்ய லெட்சுமி

பார்த்திபேந்திரன் பல்லவன் – விக்ரம் பிரபு

பெரிய வேளார் – பிரபு

மலையமான் – லால்

சுந்தர சோழர் – பிரகாஷ் ராஜ்

மதுராந்தகன் – ரஹ்மான்

செம்பியன் மாதேவி – ஜெயசித்ரா

வானதி – சோபியா துலிபலா

(பாகுபலியோடு இப்படத்தை கம்பேர் செய்ய வேண்டாம்)

கதைக்களம்…

கமல்ஹாசன் குரலில் படம் தொடங்குகிறது.

சோழர் வம்சத்தை காக்கவும் எதிரிகளை பழி தீர்க்கவும் சியான் விக்ரம் & விக்ரம் பிரபு உடன் இணைந்து ஒரு போரில் எதிரி நாடுகளை கைப்பற்றி விடுகிறார்.

ராஷ்டிர நாட்டில் போரிட்டு வென்று தன்னுடைய சோழ நாட்டின் கொடியை நாட்டுகிறார்.

அதன் பின் விக்ரம் சொல்படி.. முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சை புறப்படுகிறார் வந்தியத்தேவன்.

(பெரிய பழுவேட்டரையர், இளம் பெண்ணான நந்தினியை (ஐஸ்வர்யா ராயை) திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்.)

சுந்தரச் சோழரின் மகனான கரிகாலனும், பொன்னியின் செல்வனும் (ரவி) ராஜ பட்டத்தை ரகுமான் பெற கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

இதனிடையில் மதுராந்தக சோழரை (ரகுமானை) அரசனாக்க திட்டம் தீட்டுகிறார்கள் பெரிய பழுவேட்டரையர் (சரத்) மற்றும் சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) .

இதனை மறைந்து நின்று பார்த்த வந்திய தேவன், குந்தவையை சந்தித்து இந்த சதியை தெரிவிக்கிறார்.

இதனிடையில் ஒருபுறம் நந்தினி (ஐஸ்வர்யா ராய்) தன்னுடைய கணவன் வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்லத் துடிக்கிறார்.

மற்றொரு புறம் அருண்மொழி வர்மனை (ரவியை) கொலை செய்ய பாண்டியர்களை அனுப்புகிறார் நந்தினி.

அதே நேரம் குந்தவை தன்னுடைய சகோதரன் அருண் மொழி வர்மனை தன்னிடம் அழைத்து வருமாறு வந்திய தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார்.

இவையில்லாமல் கரிகாலனும் பார்த்திபனை விட்டு அருள் மொழி வர்மனுக்கு அழைப்பு விடுகிறார்.

தன்னுடைய மகன் பத்திரமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) மகனை கொண்டு வர படையை அனுப்புகிறார்.

எனவே யாருடன் பொன்னியின் செல்வன் செல்வார்.? இப்படியாக கதை தொடர்கிறது..

இதற்கு மேல் சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.. எனவே இனி கேரக்டர்கள் பற்றி பார்ப்போம்..

கேரக்டர்கள்..

விக்ரம் வீரம் என்றால் கார்த்தி கலகலப்பு.. இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

அது போல ஐஸ்வர்யா ராய் த்ரிஷா இருவரும் பேரழகில் உச்சம்.

இவர்களை பார்த்து மயங்காதவர்கள் இல்லை என்னும் அளவிற்கு அப்படி ஒரு அழகு. இவர்கள் சந்தித்து பேசும் வசனங்கள் பெண்களுக்கே உரித்தான அழகு. ஆண்களின் பலவீனம் கூட.

ஐஸ்வர்யா மற்றும் த்ரிஷாவிடம் கார்த்தி பேசும் வசனங்கள் சூப்பர். இருவரிடமும் கார்த்தி பேசும் வசனங்கள் (ஜொள்ளு) அழகான வழிதல்.. பெண்களை வசீகரிக்கும் வர்ணனைகள்..

ஜெயம் ரவி வந்தபின்னர் படம் மீதான எதிர்ப்பார்ப்பு வேற லெவலில் இருக்கும். தன் நடிப்பின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

டெக்னீஷியன்கள்…

ரஹ்மானின் பாடல்கள்..பின்னணி இசை. தோட்டா தரணியின் பிரமாண்ட செட், என அனைத்து படத்திற்கு யானை பலம்..

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கலைஞர்களும் சிறப்பு.

தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் ‘பொன்னியின் செல்வன்: படத்தை தமிழர்கள் பெருமை படும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. ஆனால் சரித்திரக்கதை என்றால் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இன்றைய குழந்தைகளும் ரசிக்கும்படி சொல்லியிருப்பது மணிரத்னம் டச்.

படத்தின் கலை ஆர்ட் ஒர்க் அந்த காலக்கட்டத்திற்கே நம்மை பயணிக்க வைக்கிறது.

ஆக இந்த பொன்னியின் செல்வன்… தமிழர்களின் பெருமை

Ponniyin Selvan

FIRST ON NET நானே வருவேன் விமர்சனம் 3.5/5.; தனுஷ் – செல்வா கூட்டணி எப்படி?

FIRST ON NET நானே வருவேன் விமர்சனம் 3.5/5.; தனுஷ் – செல்வா கூட்டணி எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தனுஷ் TWINS (இரட்டை பிறவி). இதில் ஒருவர் வில்லன். ஒருவர் ஹீரோ. சிறு வயதில் பிரியும் இவர்கள் ஒரு அமானுஷ்ய சக்தியால் இணைகின்றனர் என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

கதிர் & பிரபு இருவரும் இரட்டை குழந்தைகள். இதில் கதிர் ஒரு முரடன்.

தன் சிறு வயதிலேயே ஒரு பிரச்சனையால் தன் தந்தையை கொன்று விட அவனை விட்டு விட்டு பிரபு உடன் பிரிந்து செல்கிறார் இவர்களின் அம்மா.

பிரபு (தனுஷ்) பெரியவனாகி இந்துஜாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகள்.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்குள் ஒரு அமானுஷ்ய சக்தி நுழைகிறது. அதனை கண்டுபிடித்தாரா பிரபு? அந்த அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன? கதிர் என்ன ஆனார்? பிரிந்த சிறுவர்கள் இணைந்தார்களா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை ஏற்காத வில்லன் மற்றும் ஹீரோ இரு வேடங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளார் தனுஷ். ஒருவர் சாதுவாகவும் ஒருவர் முரடனாகவும் நடிப்பை வேறுபடுத்தி தன் அசுரன் நடிப்பில் கவர்ந்திருக்கிறார் தனுஷ்.

ஒரு சிறுமிக்கு தாயாக இந்துஜா நடித்துள்ளது பாராட்டுக்குரியது.

இவர்களுடன் யோகி பாபு இளைய திலகம் பிரபு நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

செல்வராகவன் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். அவர் ஏன் வருகிறார்? அவரின் நோக்கம் என்ன என்பதே புரியவில்லை.

இதில் எல்லி அர்வம் நாயகி அவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

இவையில்லாமல் அமானுஷ்ய சக்தியை கண்டுபிடிக்க நான்கு ஐந்து கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். அது செம காமெடி.

ஆனால் படத்தில் சிறுவர்களாக நடித்திருக்கும் இரட்டையர்கள் நால்வருமே நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர்.

அதுபோல தனுஷ் இந்துஜாவின் மகளாக வரும் அந்த பெண்ணும் பித்து பிடித்தவள் போல நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆனால் தந்தையே டாடி என்பதற்கு பதிலாக டாடா என்று சொல்வது ஏதோ தேவையில்லாத ஒன்று போல தோன்றுகிறது.

டெக்னீஷியன்கள்..

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு சிறப்பு. படத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்துள்ளது கூடுதல் தகவல். படத்தில் மொத்தம் 15 பேரை வைத்து முடித்து விட்டார்கள். கச்சிதமாக கேரக்டரை கொடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது யுவன் சங்கர் ராஜாவின் இசை.. தீரா சூரா பாடல் தீப்பொறியாக இருக்கிறது. பின்னணி இசையில் தன் வழக்கம் போல மிரட்டி இருக்கிறார்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்று சொல்லலாம். இடைவேளை காட்சியில் கொடுத்த பில்டப் சூப்பர்.

கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். ஒருவேளை பார்ட் 2 படத்திற்காக அப்படி முடித்து விட்டாரோ என்னவோ?

ஆக நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் கொடுத்துள்ளது.

 

More Articles
Follows