ரஜினியை அஜித் முந்திடுவார்; மோடி மேஜிக் மீது ரசிகர்கள் நம்பிக்கை

ரஜினியை அஜித் முந்திடுவார்; மோடி மேஜிக் மீது ரசிகர்கள் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Vivegam beat Kabalis records by Modis GST Magicஅஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை ஆகஸ்ட் 24-ம் தேதி மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

அதிகாலை காட்சிக்கான தமிழக அரசு அனுமதி கிடைத்தவுடன், காலை 5 மணிக்கே பல தியேட்டர்களில் காட்சிகள் திரையிடப்பட் உள்ளது.

இதற்கு முன் வெளியான ‘வேதாளம்’ (2015) படத்தின் முதல் நாள் வசூலான 15.5 கோடியை, ரஜினியின் ‘கபாலி’ முதல் நாள் வசூல் முறியடித்தது.

கபாலி படம் 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது தமிழ் சினிமாவின் பல சாதனைகளை முறியடித்தது.
தற்போது ஜிஎஸ்டி வரி சேர்ந்து, டிக்கெட் விலை அதிகரிள்ளது.

எனவே, விவேகம் படத்தை அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி மேஜிக்தான் என ரசிகர்கள் கூறிவருவது இங்கே கவனிக்கதக்கது.

Will Vivegam beat Kabalis records by Modis GST Magic

அஜித்தின் வழக்கறிஞரே… விவேகம் டிக்கெட் ரேட் ரூ.900 தெரியுமா?

அஜித்தின் வழக்கறிஞரே… விவேகம் டிக்கெட் ரேட் ரூ.900 தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegam stillsவீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து 3வது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’.

இப்படம் நாளை (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) உலகமெங்கும் கிட்டதட்ட 2900க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 850க்கும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதால் கடந்த இரண்டு தினங்களாக ரிசர்வேசன் களை கட்டத் தொடங்கியுள்ளது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் முதல்நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் விலைகள் ரூ. 500, 600, 800, 900 என விற்கப்பட்டு வருகிறது.

அண்மையில் அமலான ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்தால் ரூ. 153.60 மட்டுமே டிக்கெட் கட்டணமாக இருக்கவேண்டும்.

ஆனால் அதைவிட 4-5 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ. 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

எனவே, மிகப்பெரிய தொகையைக் கொடுத்து படத்தை வாங்கியிருப்பதால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியவில்லை என சில உரிமையாளர்கள் கூறிவருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அண்மையில் சில தினங்களுக்கு முன், அஜித் சார்பாக அவரது சட்ட ஆலோசகர் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில்… நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர் அஜித் என தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் பெயரில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பு இல்லை எனவும், யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் இது அஜித் படத்துக்கான வியாபாரம். அதை அப்படி கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட முடியுமா..?

சட்ட ஆலோசகரின் கவனத்திற்கு… இதுபோன்ற நடைபெறும் பகல் கொள்ளையை கவனத்தில் எடுத்து தக்க நடவடிக்கையை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களே எதிர்பார்ப்பாகும்.

Ajiths Vivegam release and Ticket rates reaches Rs 900

ajith lawyer letter

மலேசியாவில் மாஸ் காட்டும் தல

மலேசியாவில் மாஸ் காட்டும் தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Malaysia Vivegam movie releasing on 700 screensஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படம் தமிழகமெங்கும் 850க்கும் மேற்ப்ட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

இத்துடன் மற்ற படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பெரும்பாலான தியேட்டர்களில் விவேகம் படமே திரையிடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் மட்டும் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளதாம்.

இதற்கு முன்பே வெளியான கபாலி, விஐபி2, சிங்கம்3 ஆகிய படங்களில் 500 தியேட்டர்களில் மட்டுமே வெளியானதாம்.

In Malaysia Vivegam movie releasing on 700 screens

ரஜினியை இயக்கும் ஏஆர்.முருகதாஸ்: விரைவில் அறிவிப்பு

ரஜினியை இயக்கும் ஏஆர்.முருகதாஸ்: விரைவில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and AR Murugadossமகேஷ்பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தின் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை படமாக்க வெளிநாடு சென்றிருக்கிறார் அப்பட இயக்குனர் ஏஆர். முருகதாஸ்.

இப்படத்தை அடுத்த செப்டம்பரில் வெளியிட்ட பின், விஜய் படத்தை இயக்கும் பணியில் இறங்கவிருக்கிறார்.

விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், இதை முடித்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அவரும் ரஜினி படத்தை இயக்க ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்க்கு அட்லின்னா… அஜித்துக்கு இட்லி; கொண்டாடும் ரசிகர்கள்

விஜய்க்கு அட்லின்னா… அஜித்துக்கு இட்லி; கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith idly தெறி படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, அட்லிக்கு மீண்டும் ஒரு மெர்சலான வாய்ப்பை கொடுத்தார் விஜய்.

இந்த கூட்டணி கோலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நாம் இப்போ சொல்லப்போகும் செய்தி. அட்லி போன்ற ஒரு இயக்குனரைப் பற்றியது அல்ல.

இது அஜித் இட்லி பற்றிய செய்தி.

சென்னையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவரின் உருவம் பொறித்த பெரியளவிலான ஒரு இட்லியை உருவாக்கியுள்ளனர்.

நாளை அஜித்தின் விவேகம் வெளியாகவுள்ளதால் இதனை இன்று கோலாகலாமாக கொண்டாடி வருகின்றனர்.

 

ajith idly notice

 

கௌதம் மேனனுக்காக விக்ரமுடன் மோதும் பார்த்திபன்

கௌதம் மேனனுக்காக விக்ரமுடன் மோதும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram and parthibanகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடித்து வருகிறார்.

ஸ்பை த்ரில்லர் படமான இதன் சூட்டிங்கை தற்போது துருக்கியில் நடத்தி வருகிறார் இயக்குனர்.

அங்குள்ள இஸ்தான்புல் நகரில் பார்த்திபனும் விக்ரமும் மோதும் அதிரடியான சண்டைக் காட்சியை இயக்கி வருகிறாராம்.

இதனையடுத்து அங்கிருந்து அபுதாபி பறக்கவிருக்கிறது படக்குழு.

More Articles
Follows