தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவது ரசிகர்கள் இருக்கிறார்கள்.
எனவே அவரது பிறந்தநாளுக்கு பலவிதமான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்து திருவிழா போல கொண்டாடி வருவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
எனவே ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்விக்க பட தயாரிப்பாளர்களும் திரையுலகினரும் ரஜினிபடம் தொடர்பான ஏதாவது ஒரு தகவல்களை பகிர்ந்து வருவதை பார்த்திருக்கிறோம்.
அடுத்த வாரம் டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.
இதனை முன்னிட்டு நேற்று டிசம்பர் 8ம் தேதி ‘முத்து’ படத்தின் ஜப்பான் ரீலீஸ் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்படத்தை ரி-ரீலீஸ் செய்தது அந்த தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட உள்ளனர்.
ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க பிரபல நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalaivar 170 Mega treat on Rajini birthday