ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ பட அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ பட அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘லால் சலாம்’ படம் 2024 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதன் படபிடிப்பு சமீபகாலமாக கடந்த சில தினங்களாக கேரளா திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அவர் விமான நிலையம் சென்ற போது செய்தியாளர்களிடம் தலைவர் 170 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

“ஞானவேல் இநக்கும் படம் விறுவிறுப்பாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்காக செல்கிறேன்” என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth gave update about Thalaivar 170

விஜய் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காயம்

விஜய் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு காயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவான விஜய்யின் ‘லியோ’ படம் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படம் வெளியான தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார் லோகேஷ்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் சென்ற போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய லோகேஷீக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் சிறிது காயங்களுடன் லோகேஷ் தப்பியதாக கூறப்படுகிறது.

Leo fame Lokesh Kanagaraj got injury at Kerala

‘லியோ’ பட பாடல்கள் காப்பியா.? அனிருத் ரசிகர்கள் அதிர்ச்சி.; என்ன நடந்தது.?

‘லியோ’ பட பாடல்கள் காப்பியா.? அனிருத் ரசிகர்கள் அதிர்ச்சி.; என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ பட ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அயல்நாட்டில் வெளியான ஆல்பங்களில் இருந்து காப்பிடிக்கப்பட்டதாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

இதனை சில நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஐரோப்பாவின் (பெலரஸ்) இசைக் கலைஞர் ஒட்னிகா இசையமைத்து வெளியிட்ட ஆல்பம் `வேர் ஆர் யூ’. அவரின் இந்த ஆல்பத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தப் பாடல் ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ என்ற வெப் சீரியரில் ‘ஐ ஆம் நாட் அவுட்சைடர்’ பாடலாகப் பயன்படுத்தப்பட்டதாம்.

இந்த நிலையில், லியோ படம் வெளியான பிறகு, ஒட்னிகாவின் யூடுயூப் பக்கத்தில் அனிருத் பாடலை ரசிகர்கள் சுட்டி காட்டினர்.

இதனை யூட்யூயுப் தளங்களில் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ள நிலையில் இந்தப் பாடல் அனுமதி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ஒட்னிக்கா தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில்.. வெளிநாடுகளில் உரிமை இல்லாமல் பயன்படுத்த முடியாது அனுமதி பெறப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் லியோ படத்தில் அனிருத் இசை அமைத்த ஆட்னரி பர்சனர என்ற பாடல் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leo movie Ordinary Person song in trouble

ரஜினியை மிரட்டிய வில்லன் விநாயகன் கைது.; எந்தா சாரே மனசிலாயோ.!?

ரஜினியை மிரட்டிய வில்லன் விநாயகன் கைது.; எந்தா சாரே மனசிலாயோ.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகர் விநாயகன். இவர் தமிழில் ‘திமிரு’ படத்தின் மூலம் பிரபலமானார்.

ஆனால் சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் இவரை இந்திய அளவில் கொண்டு சென்றது.

இந்த படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

எந்தா சாரே மனசிலாயோ… என்று இவர் பேசும் ஸ்டைல் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அக்டோபர் 24ஆம் தேதி கேரள போலீஸார் இவரை கைது செய்தனர். இவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் கேரள காவல்துறை விநாயகனை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் அதனை விசாரிக்க போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீசாரை அவமரியாதையாக விநாயகன் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் நடிகர் விநாயகன்.

Kerala police arrested Jailer Actor Vinayakan

உலக திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் தேர்வு

உலக திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 இந்த வருட இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ என்கிற தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 20 முதல் 28 தேதி வரை கோவா-வில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.

இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

“காதல் என்பது பொதுவுடமை ” இது ஒரு நவீன காதல் கதை.

இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், மனஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் ‘லென்ஸ்”, “மஸ்கிடோபிலாஷபி”, “தலைக்கூத்தல்” ஆகிய படங்களின் இயக்குநர் ஆவார்.

இந்த படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினீத் , கலேஷ் ராமானந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபி வழங்க, மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் புரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இசை – கண்ணன் நாராயணன்,
பாடல்கள்- உமாதேவி
எடிட்டிங்- டேனி சார்லஸ்
கலை- ஆறுசாமி
காஸ்டியூம் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய்,
சவுண்ட் டிசைன்- ராஜேஷ் சுசீந்திரன்.

தயாரிப்பு- ஜோமோன் ஜேக்கப், நித்யா அற்புதராஜா, டிஜோ அகஸ்டின், விஷ்ணு ராஜன், சஜின் s ராஜ்.

Pro – குணா.

‘Kadhal Enbadhu Podhu Udamai’ has been selected for IFFI

கோவா சர்வதேச திரைப்பட விழா : பொன்னியின் செல்வன் 2 – விடுதலை உள்ளிட்ட படங்கள் தேர்வு அப்டேட்

கோவா சர்வதேச திரைப்பட விழா : பொன்னியின் செல்வன் 2 – விடுதலை உள்ளிட்ட படங்கள் தேர்வு அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2023 நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற உள்ளது. இது 54 ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவாகும்.

இந்த திரைப்பட விழாவிற்கு மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ & வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளன.

இந்த படங்களுடன் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘காதல் என்பது பொதுவுடைமை’, சம்யுக்தா விஜயனின் ‘நீல நிற சூரியன்’ ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறும்படங்களின் பட்டியலில், பிரவீன் செல்வன் இயக்கிய ‘நன்செய் நிலம்’ படம் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Viduthalai and Ponniyin Selvan 2 selected 54th International film festival

More Articles
Follows