‘அவ்வை சண்முகி’யில் சிவாஜி நடிக்க முடியாமல் போனது ஏன்?

‘அவ்வை சண்முகி’யில் சிவாஜி நடிக்க முடியாமல் போனது ஏன்?

kamal sivaji ganesanசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தின் வெற்றி விழா சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது….

அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசன் வேடத்தில் சிவாஜி கணேசன்தான் நடிக்கவிருந்தார்.

அதற்காக எல்லாம் பேச்சுவார்தைகள் முடிந்துவிட்டது.

ஆனால் சூட்டிங் தொடங்கும் சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

எனவே அவர்தான் ஜெமினி நடித்தால் சரியாக இருக்கும் என்றார்.

ஜெமினிதான் ஆம்பளையும் பொம்பளையும் லவ் பண்னுவான் என்றார்.

தற்போது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் கெட்டப்பை பார்த்தால், இவரையும் ஜெமினி லவ் செய்திருப்பார்” என்றார்.

‘பைரவா’வின் அடுத்த படம் அவுட்; விஜய் ரசிகர்கள் குஷி

‘பைரவா’வின் அடுத்த படம் அவுட்; விஜய் ரசிகர்கள் குஷி

vijay keerthy sureshபரதன் இயக்கும் பைரவா படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் சூட்டிங் தொடங்கிய நாள் முதல் இப்படம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாய் இருக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியாவுடன் ட்ரெண்ட் ஆக்கி கொண்டாடினர்.

ஆனால் இதுவரை விஜய் படம் பட்டுமே வெளியானது.

தற்போது முதன்முறையாக விஜய், கீர்த்தி சுரேஷ் ஆடி பாடும் ஒரு போட்டோ அவுட் ஆகியுள்ளது.

எனவே இதை ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

‘அஜித் எப்படிபட்டவர்…’ – காஜல் அகர்வால் ஓபன் டாக்

‘அஜித் எப்படிபட்டவர்…’ – காஜல் அகர்வால் ஓபன் டாக்

kajalவிஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால்.

தற்போது அஜித்துடன் அவரது 57 வது படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரமுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்

இந்நிலையில், ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார் காஜல்.

அப்போது ரசிகர் ஒருவர் அஜித் எப்படிபட்டவர் என்று கேட்டார்.

‘சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமல்ல, வெளியிலும் அஜித் ஒரு ஜென்டில் மேன்தான்.

அனைவருடனும் அன்பாக பழகுவார். எல்லாரையும் மதிக்க கூடியவர் அவர்’ என்று பதிலளித்துள்ளார்.

விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்… நன்றி தெரிவித்த சூர்யா

விட்டுக் கொடுத்த கமல்ஹாசன்… நன்றி தெரிவித்த சூர்யா

kamal suriyaசூர்யாவை திருமணம் செய்தபின் படங்களில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் 36 வயதினிலே படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்“ இயக்குநர் பிரம்மா இயக்கும் “மகளிர் மட்டும்“ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஆவன பட இயக்குநராக நடிக்கிறார் ஜோதிகா.

இவருடன் நாசர், லிவிங்ஸ்டன், ஊர்வசி, பானு ப்ரியா மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டேயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ்.

1994ஆம் ஆண்டில் பெரும் வெற்றிப்பெற்ற மகளிர் மட்டும் படத்தலைப்பை விட்டுக்கொடுத்தற்காக கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

 

jo magalir

பைரவா டைட்டிலை கொடுத்துவிட்டு விஜய்யுடன் மோதும் லாரன்ஸ்

பைரவா டைட்டிலை கொடுத்துவிட்டு விஜய்யுடன் மோதும் லாரன்ஸ்

vijay and raghava lawrenceபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வருகிற 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த டைட்டிலை விஜய்க்காக விட்டுக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் இவர் நடித்துள்ள சிவலிங்கா படத்தையும் பொங்கல் தினத்தில் வெளியிடவிருக்கிறாராம்.

பி.வாசு இயக்கியுள்ள இப்படம் கன்னட படத்தின் ரீமேக்காகும்.

இதில் நாயகியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

விரைவில் இதன் இறுதிக் கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

ரெமோவில் டபுள் க்ளைமாக்ஸ்…? சீக்ரெட்டை உடைத்த சிவகார்த்திகேயன்

ரெமோவில் டபுள் க்ளைமாக்ஸ்…? சீக்ரெட்டை உடைத்த சிவகார்த்திகேயன்

sivakarthikeyan new imagesரெமோ படத்தின் நன்றி விழா சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியதாவது….

யோகிபாபு அண்ணாவுடன் நடித்தது நல்ல அனுபவம்.

இதுவரை நான் நடித்த படங்களில் ஒரு க்ளைமாக்ஸ்தான் இருக்கும்.

ஆனால் இப்படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது.

அதில் நான் கீர்த்திக்கு புடவை செலக்ட் செய்யும்போது, பிரவுன் கவுன் அணிந்திருப்பேன்.

அப்போது யோகிபாபும் அங்கே வந்து, நமக்கு எப்போ கல்யாண புடவை எடுக்கிறது என்று கேட்பார்.

உங்ககிட்ட ஒன்னு காட்டனும். நானும் உங்ககிட்ட பார்க்கனும் என்று கூடவே அவரும் என்னுடன் டிரையல் ரூம் வருவார்.

பின்னர் வியர்வையுடன் வெளியேறி வருவார்.

அப்போது கடைக்காரர்… சார்.. வேறு ஏதாச்சும் வெரைட்டி பார்க்குறீங்களா கேட்பார்?

இதுக்கு மேலே என்னய்யா வெரைட்டி வேனும் என்று நொந்தடிபயே போவார்.

இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எனவே இப்போது சொல்லிவிட்டேன்.” என்று பேசினார்.

More Articles
Follows