‘அவ்வை சண்முகி’ போல ‘ரெமோ’ படமும் காப்பியா?

‘அவ்வை சண்முகி’ போல ‘ரெமோ’ படமும் காப்பியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

avvai shanmugi remo stillsகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், மீனா நடித்த படம் அவ்வை சண்முகி.

இதில் தன் மகளுக்காக பிராமிண் மாமி போல வேடமிட்டு நடித்திருப்பார் கமல்.

இதில் ஹாலிவுட் படமான மிஸஸ் டவுட் ஃபயர் படத்தின் ரீமேக் என்று அப்போது சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் ரெமோ ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் பெரிய நடிகன் ஆக வேண்டும் என்பதற்காக நாயகன் பெண் வேடம் அணிவதும், பின்பு காதலி அருகில் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

இதுபோலதான், “டூட்ஷி” (Tootsie) என்ற ஹாலிவுட் படத்தின் கதையும் அமைந்து இருந்தது.

இப்படம் கடந்த 1982இல் வெளியானது.

ஒருவேளை இதை தமிழுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கலாம் என நெட்சன்கள் கூறி வருகின்றனர்.

அட எதுவா இருந்தா என்ன, படம் நல்லாயிருக்கா? அதானே முக்கியம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

tootsie

கண்ணா.. இன்னும் இரண்டே நாள்தான்; தலைவர்-தல கிளம்புறாங்க

கண்ணா.. இன்னும் இரண்டே நாள்தான்; தலைவர்-தல கிளம்புறாங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ajithஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இடையில் கபாலியிலும் நடித்துக் கொடுத்தார் ரஜினிகாந்த்.

கபாலி வெளியாகி இமாலய சாதனைகளை படைத்துவிட்டது.

இதனிடையில் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, விரைவில் ஷங்கர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.

இதில் ரஜினியுடன் அக்சயகுமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில்தான் அஜித் நடிக்கும் ‘தல 57’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்-விஜய்யை தொடர்ந்து உதயநிதியை மிரட்டும் வில்லன்

கமல்-விஜய்யை தொடர்ந்து உதயநிதியை மிரட்டும் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanithi manjima mohanசிகரம் தொடு படத்தை தொடர்ந்து கௌரவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி.

இதில் இவருடன் மஞ்சிமா மோகன், ஆர். கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆர்.கே.சுரேஷ் உயர் போலீஸ் அதிகாரியாகவும் மஞ்சிமாவின் அண்ணனாகவும் நடிக்கிறார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் வில்லனாக டேனியல் பாலாஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் டெர்ராக இவர் நடித்திருந்தார்.

தற்போது தயாராகி வரும் விஜய்யின் ‘பைரவா’ படத்திலும் டேனியல் பாலாஜி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விலங்குகள் நலவாரியத்தில் சௌந்தர்யா ரஜினி தூதுவராக நியமிக்கப்பட்டது ஏன்?

விலங்குகள் நலவாரியத்தில் சௌந்தர்யா ரஜினி தூதுவராக நியமிக்கப்பட்டது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajiniஇந்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தில் தூதுவராக சௌந்தர்யா ரஜினி நியமிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

அதை நம் தளத்திலும் பதிவு செய்திருந்தோம்.

அதற்கு சௌர்ந்தர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், இவர் ஏன்? தூதுவராக நியமிக்கப்பட்டார் என்ற சந்தேகங்களும் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து விலங்குகள் நலவாரியமே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றில் மிக பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நாம் அறிந்த ஒன்றே.

இவரை தற்போது Animal Welfare Board எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. இதை பற்றிய தகவல் வெளிவந்தது முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் வேலை என்னவென்றால் திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம், கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவரை Animal welfare Board இப்பணியில் அமர்த்தியுள்ளது.

அந்த செய்திக்குறிப்பு இதோ….

 

awbi soundarya rajini

தனுஷ் காதல்; டைரக்ஷன் மோகம்; அண்ணன் கொடுத்த தைரியம்

தனுஷ் காதல்; டைரக்ஷன் மோகம்; அண்ணன் கொடுத்த தைரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி திரைப்படம் வருகிற செப். 22ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் ஒரே நேரத்தில் நிறைய படங்களில் எப்படி நடிக்கிறீர்கள்?

இவை தவிர்த்து, தயாரிப்பு, இயக்கம்.. இது எல்லாம் எப்படி சாத்தியம்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது தனுஷ் கூறியதாவது…

‘நான் எனது தொழிலை வேலையை காதலிக்கிறேன். எனவே அதன் மீது விருப்பம் உள்ளதால் சோர்வடைவதில்லை.

அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியத்தால்தான் இயக்குனராக முடியும் என முடிவெடுத்தேன் என்று தெரிவித்தார்.

அஜித்தின் புதிய கார்; எத்தனை கோடி தெரியுமா?

அஜித்தின் புதிய கார்; எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithநடிப்பை தவிர்த்து, கார் ரேஸ், பைக் ரேஸ், கேமரா போட்டோகிராபி என அனைத்திலும் ஆர்வர் உள்ளவர் அஜித்.

இவரின் கார் ரேஸ், பைக் ரேஸ் திறமைகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் கார் பிரியரான இவர், புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்திருக்கிறார்.

அது லம்பாகினி என்ற புதிய கார் மாடல் ஒன்றை ஓகே செய்திருக்கிறாராம்.

இந்த காரின் விலை ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows