தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு பக்கம் தன் ரசிகர்களுடன் அரசியல் ஆலோசனை என பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தன் பட வேலைகளையும் கவனித்து வருகிறார் கமல்ஹாசன்.
இவர் இயக்கி, தயாரித்து நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது.
இப்படத்தில் கமலுடன் ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார், சேகர் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தற்போது இதன் டப்பிங் வேலைகளை துவங்கி விட்டார் கமல்.
விஸ்வரூபம் 2 பணிகளை முடித்து விட்டு ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளை துவங்விருக்கிறாராம்.
இதனையடுத்து ஷங்கரின் ‘இந்தியன்-2’ படத்தில் நடிப்பார் கமல்ஹாசன்.