#Breaking: கமலின் விஸ்வரூபம்2 பட ட்ரைலரை வெளியிடும் 3 பிரபலங்கள்

#Breaking: கமலின் விஸ்வரூபம்2 பட ட்ரைலரை வெளியிடும் 3 பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viswaroopam 2கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆனபோதும் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படி ட்ரைலர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தள்ளனர்.

வருகிற ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த டிரைலரை பாலிவுட் நடிகர் அமீர்கான் வெளியிடவுள்ளார் என அறிவித்து உள்ளனர்.

இந்தி பதிப்பை அமீர்கான் வெளியிடுகிறார். ஸ்ருதிஹாசன் தமிழ் பதிப்பை வெளியிட, தெலுங்கு பதிப்பை ஜூனியர் என்டிஆர் வெளியிடுகிறார்.

சந்தீப் கிஷன்- அன்யா சிங் ஜோடியை இயக்கும் கார்த்திக் ராஜு

சந்தீப் கிஷன்- அன்யா சிங் ஜோடியை இயக்கும் கார்த்திக் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director karthik raju‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு.

அவருடைய மூன்றாவது படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராக இருக்கிறது.

இந்தப் படத்தில், சந்தீப் கிஷன் ஜோடியாக அன்யா சிங் நடிக்கிறார்.

‘லெக்ஸ் டலியானிஸ்’ மற்றும் ‘கைதி பேண்ட்’ ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ள அன்யாவுக்கு, இதுதான் முதல் தமிழ்ப்படம்.

பிகே வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.

சுப்பு தயாரிக்கும் இந்தப் படத்தில், தமிழில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதே வேடத்தை, தெலுங்கில் ‘வெண்ணிலா கபடிக்குழு’ கிஷோர் நடிக்கிறார்.

ஹைதராபாத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நாடோடிகள் 2 முடித்துவிட்டு நாடோடிகள் 3 அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

நாடோடிகள் 2 முடித்துவிட்டு நாடோடிகள் 3 அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nadodigal 3சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நாடோடிகள்’.

2009-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி நடைபெற்றது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள்.

நந்தகோபால் என்பவர் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக இன்று (ஜுன் 8ம் தேதி) முடிவுற்றது.

இதற்கான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், ‘நாடோடிகள் 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருக்கிறார்
சமுத்திரக்கனி.

சுபிக்‌ஷாவுக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான சீன்களை கொடுத்த விஜய் மில்டன்

சுபிக்‌ஷாவுக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான சீன்களை கொடுத்த விஜய் மில்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

goli soda 2அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகௌ சுபிக்‌ஷா.

இந்த இயற்கை குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அதில் முக்கியமாக தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படமான கோலி சோடா 2வில் நடித்திருக்கிறார்.

‘கடுகு’ படத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் நம் கவனத்தை ஈர்த்த சுபிக்‌ஷா, விஜய் மில்டன் மற்றும் பாரத் சீனி இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறார்.

அதை பற்றி சுபிக்‌ஷா கூறும்போது, “கடுகு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்‌ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது, மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன்.

ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும் என நான் எதிர்பார்க்கவேயில்லை” என்றார்.

மேலும், “படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம்.

படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.

பாரத் சீனிக்கு ஜோடியாக நடிக்கும் சுபிக்‌ஷா அவரை பற்றி நகைச்சுவயாக, “கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன்.

அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார் போல, கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்‌ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கோலி சோடா 2 உலகம் முழுவதும் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன்.

ஏற்கனவே வெளியான ப்ரோமோ காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. அச்சு இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார், குறிப்பாக பொண்டாட்டி பாடல் கோலி சோடா படத்தின் சுவையை கொண்டு வந்திருக்கிறது.

காலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய காட்சிகள்

காலா-வில் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றிய காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans disappointed scenes in Kaala movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படம் நேற்று ரிலீஸானது.

கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித் இப்படத்தை இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பல ஏமாற்றங்களை கொடுத்தது.

ஆனால் கபாலியை விட காலா நன்றாகவுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கபாலி படம் ரஞ்சித் உடையது எனவும் காலா திரைப்படம் என்னுடையது என ரஜினிகாந்த் அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காலாவை பார்த்த சில ரஜினி ரசிகர்கள் தங்களை சில காட்சிகள் ஏமாற்றி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த காட்சிகள் இதுதான்…

க்யா ரே செட்டிங்கா..? வேங்கை மக ஒத்தையில நிக்க தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே என்ற டயலாக் காட்சி டீசர் வந்தபோதே பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த காட்சி வரும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது. இந்த டயலாக் முடிந்தவுடன் பயங்கர சண்டை இருக்கும் சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த காட்சியில் சண்டை இல்லாமல் ரஜினி எஸ்கேப் ஆகிவிடுவார். அந்த டயலாக் பேசிய உடனே சண்டை இருந்தால் செமயாய் இருந்திருக்கும்.

எப்போதும் தலைவருக்கு அறிமுக காட்சி அசத்தலாக இருக்கும். எந்த டைரக்டர் என்றாலும் ரஜினிக்காக அந்த காட்சியை அதிக சிரத்தையுடன் எடுப்பார்கள்.

ஆனால் காலாவில் கிரிக்கெட் பேட் உடன் அறிமுகமாகும் காலா ஒரு பைட் கூட இல்லாமல் சென்று விடுவார். அட்லீஸ்ட் காட்சியையாவது பக்காவாக கொடுத்திருக்கலாம்.

கிரிக்கெட் ஆட இருப்பார். ஒரு சிக்ஸர் கூட இருக்காது. அப்படியே முதல் பந்தில் அவுட் ஆகிவிடுவார். இப்படி எதுவுமே அறிமுக காட்சியில் இல்லை.

படத்தில் நடித்துள்ள நாய்க்கு ஏகப்பட்ட பில்டப் இருந்தது. ரஜினியுடன் நடித்த அந்த நாயை மலேசியா ரசிகர் ஒருவர் ரூ. 2 கோடி கொடுத்து விலைக்கு வாங்க தயாராக இருந்தார் எனவும் தகவல்கள் வந்தன.

இந்த நாயை செலக்ட் செய்வதற்கு முன் 30 நாய்கள் ஆடிசன் செய்யப்பட்டது என அந்த நாயின் பயிற்சியாளர் சைமன் தெரிவித்திருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அந்த நாயை தெரு நாய் போல காட்டிவிட்டனர். வில்லன் வரும்போது அந்த நாய் குரைத்திருக்கலாம். அதுவும் சும்மா காட்டிவிட்டார் ரஞ்சித்.

நிக்கல்.. நிக்கல்… கிளம்பு.. கிளம்பு அந்து போச்சி என்ற பாடல் வெறித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு வரிகளுடன் அந்த பாடல் இடைவேளையில் முடிக்கப்பட்டது.

ஒருவேளை படத்தின் நீளத்திற்காக பாடலை குறைத்திருக்கலாம். அதற்கு பதில் ரஞ்சித்தின் கருத்துக் காட்சிகளை நீக்கிவிட்டு இந்த பாட்டை வைத்திருக்கலாமே என்றும் தெரிவித்தனர்.

க்ளைமாக்ஸில் ரஜினி இறப்பதாக காட்டப்பட்டுள்ளது. ரஜினி இறப்பதாக காட்சிகளை அண்மைகாலமாக எந்த இயக்குனரும் வைக்கவில்லை.

ஆனால் க்ளைமாக்ஸில் கபாலியில் துப்பாக்கி சுடும் சவுண்ட் கேட்கும். அப்படியென்றால் ரஜினி சுடப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்தது.

அதுபோல் காலாவில் ரஜினி இறப்பதாகவும் அதன்பின்னர் பல காலாக்கள் உருவாகுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

படத்தில் உள்ள கேரக்டர்கள் காலா இறக்கவில்லை என்கிறார்கள். இந்த குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.

எந்த வித மேக்கப் அப்பும் இல்லாமல் முடியில்லாமல் (விக் கூட வைக்காமல்) பொதுவெளியில் வரும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

அப்படி இருக்கையில் நேரில் கூட 70 வயதான ரஜினிகாந்த் ஸ்மார்ட்டாக இருப்பார். ஆனால் படத்தில் 60 வயது நபராக ரஜினி காட்டப்பட்டிருந்தாலும் கன்னங்களில் கைகளில் பயங்கர சுருக்கங்கள் இருந்தன.

அதை கூட சரியாக கவனிக்காமல் ரஞ்சித் விட்டுவிட்டார். அந்த தாராவி சேரி பகுதியில் ரஜினி வசிக்கிறார் என்பதற்காக அப்படியே விட்டுவிட்டாரா..?

ஆனால் மற்ற நடிகர்கள் அப்படியில்லையே என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக படத்தில் பன்ச் டயலாக் கூட இல்லை.

எந்திரன் படத்தில் கூட காட்சிக்கு தேவையான தத்துவ டயலாக் இருக்கும்.

சிட்டி ரோபோ ஒவ்வொரு நட்டாக கழட்டும்போது வாழ்க்கை சம்பந்தமான பன்ச் டயலாக்குகள் பல இருக்கும்.

ஆனால் கிட்டதட்ட அரசியல் படமான காலாவில் காலத்திற்கு சொல்லும் அளவுக்கு ஒரு பன்ச் டயலாக் கூட இல்லை.

யதார்த்தம் என்ற பெயரில் மாஸ் ஹீரோவான ரஜினியை நன்றாக பயன்படுத்திக் கொண்டுவிட்டார் ரஞ்சித். அவரின் ஒட்டு மொத்த கருத்தையும் மக்களுக்கு சொல்ல ரஜினி தேவைப்பட்டு இருக்கிறார்.

இது ரஜினிக்கு தெரியாமல் நடந்திருக்காது என்பது உண்மை என்றாலும் இனி ரஞ்சித்துக்கு ரஜினி வாய்ப்பு அளிக்க கூடாது எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

Rajini fans disappointed scenes in Kaala movie

கபாலி-மெர்சல்-விவேகம் முதல் நாள் வசூலை முறியடித்த காலா

கபாலி-மெர்சல்-விவேகம் முதல் நாள் வசூலை முறியடித்த காலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala beat 1st day collection of Kabali Mersal and Vivegam moviesரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான காலா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தனுஷ் தயாரித்திருந்த இப்படத்தை ரஞ்சித் இயக்கியிருந்தார்.

வெளிநாடு பிரிமியர் காட்சிகள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வரத் தொடங்கியது.

மேலும் கபாலியை விட காலா நன்றாகவுள்ளது என பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சென்னையில் மட்டும் 1.75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் வெளியான மற்ற படங்கள் இந்த வசூலை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் முதல்நாள் வசூல் விவரங்கள்…

காலா ரூ. 1.76 கோடி
மெர்சல் ரூ. 1.52 கோடி
விவேகம் ரூ. 1.21 கோடி
கபாலி ரூ. 1.12 கோடி
தெறி ரூ. 1.05 கோடி

Kaala beat 1st day collection of Kabali Mersal and Vivegam movies

More Articles
Follows