அஜித்தே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.; ‘துணிவு’ பட பாடல் வெளியீட்டுக்கு ரசிகர்களின் நற்செயல்

அஜித்தே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.; ‘துணிவு’ பட பாடல் வெளியீட்டுக்கு ரசிகர்களின் நற்செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் சில்லா சில்லா.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத் பாடி இருக்கிறார்.

இந்தப் பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று டிசம்பர் 7ஆம் தேதி அஜித் ரசிகர்கள் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்துள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் ‘சில்லா சில்லா….’ பாடல் வெளியீட்டை முன்னிட்டு குழந்தைகளுக்கு இரவு உணவு அளிப்பதாக தெரிவித்து அதன் படி அன்னதானம் செய்துள்ளனர்.

துணிவு

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது்

பொதுவாக நடிகர்களின் பிறந்தநாள் / ஒரு படத்தின் வெளியீட்டுக்கு இது போன்ற நற்பணிகளை ரசிகர்கள் செய்வார்கள்.

ஆனால் முதன்முறையாக ஒரு பாடல் வெளியீட்டு விழாவிற்கே அஜித் ரசிகர்கள் அன்னதானம் செய்துள்ளதால் ரசிகர்களின் செயலைப் பார்த்து நடிகர் அஜித்தே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

துணிவு

To celebrate Thunivu song Ajith fans served food to underprivileged kids..

——
Kudos

#AjithKumar #Thunivu

——-

Let the Celebration Start’s With The Welfare Activities

#ChillaChillaSong வெளியீட்டை முன்னிட்டு இன்று
குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. @TIRUNELVELIAFC

#Thunivu திருவிழா ஆரம்பம்
@rameshlaus @iamkillerxd @DoneChannel1 @TeamAjith_VLR @Anythingf4AJITH

#NoGutsNoGlory #AjithKumar

விஷாலின் ‘லத்தி’ படத்தின் டிரைலர் தேதி அறிவித்த படக்குழு

விஷாலின் ‘லத்தி’ படத்தின் டிரைலர் தேதி அறிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷால் தற்போது ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை வினோத் குமார் இயக்க, விஷாலுடன் இணைந்து நடிகை சுனைனா நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vishal’s ‘laththi’ trailer date announcement

ஹிந்தி தெலுங்கு கன்னட நடிகர்களை முந்தி தனுஷ் முதலிடம்.; எப்படி தெரியுமா.?

ஹிந்தி தெலுங்கு கன்னட நடிகர்களை முந்தி தனுஷ் முதலிடம்.; எப்படி தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, ‌ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற திரைப்படம் வாயிலாக, முதல் முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார்.

இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர்.

V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும்.

‘வாத்தி/ சார்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவருடைய அடுத்த கட்ட திரைப்படங்கள் ஆகும்.

தனுஷ்

Dhanush becomes IMDbs Most Popular Indian Actor 2022

வெற்றி மாறனுடன் முதல் முறையாக இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்

வெற்றி மாறனுடன் முதல் முறையாக இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் வெற்றி மாறன் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 க்காக அடுத்த வெப் தொடரை உருவாக்கவுள்ளார்.

டிசம்பர் 6, செவ்வாய்கிழமை மாலை ட்விட்டரில் வரவிருக்கும் இத்தொடர் குறித்து பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அறிவித்தார்.

வெற்றி மாறன் எழுத்தில் உருவாகும் இத்தொடரில் இடம் பெரும் நடிகர்கள் மற்றும் பட குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் ட்வீட் செய்துள்ளார்.

‘பிக் பாஸ் தமிழ் 6’ வீட்டில் நுழையும் பிரபல நட்சத்திரம். யாரென்று தெரிகிறதா ?

‘பிக் பாஸ் தமிழ் 6’ வீட்டில் நுழையும் பிரபல நட்சத்திரம். யாரென்று தெரிகிறதா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த வாரம் ‘பிக் பாஸ் 6’ இல் ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி இருப்பதாக அறிவித்து, ட்விட்டர் பயனர்கள் யார் என்று யூகிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
நடிகை அஞ்சலி சிறப்பு விருந்தினராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ்’ வீட்டிற்கு அஞ்சலி ஏன் செல்கிறார் என்று யோசிப்பவர்களுக்கு இதோ அதற்கான பதில்.

நடிகை அஞ்சலி டிசம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் ‘ஃபால்’ என்ற வலைத் தொடரில் நடிக்கிறார்.

அத்தொடரை விளம்பர படுத்துவதற்காக அஞ்சலியை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறது படக்குழு.

12 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்ட போகும் சூர்யா

12 வருடங்களுக்கு பிறகு மாஸ் காட்ட போகும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ என்ற மாபெரும் படைப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் சூர்யா ஜிம்மிற்கு சென்று சிக்ஸ் பேக் வைக்க கடுமையாக பயிற்சி எடுத்துவருகிறார்.

அவர் தனது பயிற்சியாளருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அவர் பழங்கால போர்வீரராக நடிப்பதால் அவரது தோற்றம் மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

கடைசியாக ‘7 ஆம் அறிவு’ (2011) படத்திற்காக சூரியா சிக்ஸ் பேக் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows