மீண்டும் ஜெய் – ஐஸ்வர்யா ஜோடியை இணைத்த ‘அறம்’ படம் இயக்குநர்

மீண்டும் ஜெய் – ஐஸ்வர்யா ஜோடியை இணைத்த ‘அறம்’ படம் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா லாக்டவுனுக்கு முன் 2017 ஆம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அறம்’. இந்த படத்தை கோபி நயினார் என்பவர் இயக்கி இருந்தார்.

அதன் பிறகு இவர் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுஷி’ என்ற படத்தில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின்னர் எந்த அப்டேட்டும் இல்லை.

இந்த நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கோபி நயினார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பர் நகரம்’.

இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜெய் & ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த ‘தீராக் காதல்’ படம் லைக்கா தயாரிப்பில் வெளியானது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லேபில்’ வெப்சீரிஸ் வரும் நவம்பர் 10-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கருப்பர் நகரம்

Jai and Aishwarya Rajesh starrer Karuppar Nagaram

ஜிவி பிரகாஷ் குரலில் பட்டுராம் செந்தில் & ஆதேஷ் பாலா கூட்டணியில் ‘லஞ்சபூமி’

ஜிவி பிரகாஷ் குரலில் பட்டுராம் செந்தில் & ஆதேஷ் பாலா கூட்டணியில் ‘லஞ்சபூமி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பட்டு ராம் செந்தில் என்பவர் இயக்கி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘லஞ்ச பூமி’.

நடிகர் ஆதேஷ் பாலா இதில் முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார்.

சுதாகர், சரண்ராஜ் அனுகிருஷ்னா, சாஸ்திர ரோஸ், நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம் & கே கே பாலா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆர் செந்தில்குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களாக மோகன்ராம் மற்றும் ஆனந்த ஜோதி ஆகியோரும் பணிபுரிந்துள்ளனர்.

தீபாவளி ரேசில் ஜப்பான், கிடா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ரெய்டு உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லஞ்சபூமி திரைப்படமும் தீபாவளி வெளியீடாக வருகிறது.

லஞ்சபூமி

ஆனால் இந்த படம் நேரடியாக மூவி வுட் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவை நடிகர் ஜே எஸ் கே கோபி, சம்பத் ராம் சார்லி மற்றும் வையாபுரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் பாடியுள்ள பாடலின் வரிகள் இதோ…

“என் பாரதிய காட்டப்போறேன்

நான் பகுத்தறிவு ஊட்டப்போறேன்..
யோகா உள்ள சேர்க்கப் போறேன்..

நல்ல எதிர்காலம் காட்டப்போறேன்”

Lanja Boomi movie release in OTT as Diwali 2023 special

மீண்டும் கமல் – ரஜினி ரசிகர்கள் மோதலை தொடங்கி வைக்கும் சந்தானம்

மீண்டும் கமல் – ரஜினி ரசிகர்கள் மோதலை தொடங்கி வைக்கும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் என கெத்தாக வலம் வரும் இந்த காலத்தில் 80ஸ் கிட்ஸ்களுக்கு கெத்து காட்ட ஒரு கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் டைரக்டர் கல்யாண்.

இவர் தற்போது உருவாக்கியுள்ள ’80ஸ் பில்டப்’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார்.

‘நாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்க இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபேண்டஸி டிராமாக உருவாகியுள்ள ’80ஸ் பில்டப்’ படத்தை நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் நவம்பர் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த படத்தில் சந்தானம் கமல் ரசிகராக நடித்துள்ளார்.

1980 களில் கமல் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே நிறைய மோதல்கள் இருந்தன. அவையெல்லாம் தற்போது உள்ள 90ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ்களுக்கு தெரியாது. தற்போது ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மோதலை மீண்டும் நினைவுபடுத்துவதாக இந்த படம் வருகிறது எனலாம்.

கமல் நடித்த விக்ரம் மற்றும் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ ஆகிய இரண்டு படங்களும் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியானாலும் இரண்டு படங்கள் வசூலை ஒப்பிட்டு ரசிகர்கள் மோதியது குறிப்பிடத்தக்கது.

இன்று நவம்பர் 8ம் தேதி வெளியான 80ஸ் பில்டப் என்ற போஸ்டரில் கமல் – ரஜினி படத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் போர் என்ற வாசகத்தை டிசைன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்னடபடி மீண்டும் கமல் – ரஜினி ரசிகர்கள் மோதல் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் சந்தானம் எனலாம்.

Santhanam started Rajini Kamals fans war again

2024 ஹன்சிகா வருஷம்..; நடிகை கைவசம் இத்தனை படங்கள்.?

2024 ஹன்சிகா வருஷம்..; நடிகை கைவசம் இத்தனை படங்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, படங்களான “மை நேம் இஸ் ஸ்ருதி” மற்றும் “கார்டியன்” குழுவினர் வெளியிடப்பட்ட டிரெய்லர் & டீஸர் மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெலுங்கு படமான “மை நேம் இஸ் ஸ்ருதி,” விரைவில் வெளியாக உள்ள படம், அதன் சுவாரஸ்யமான ட்ரெய்லர் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

மற்றும் தமிழ் படமான “கார்டியன்” டீஸரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது, இவ்விரண்டு மொழி படங்களின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஹன்சிகா மோத்வானியின் செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய கதைக்களம் மிகுந்த படம் மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஹன்சிகா மோத்வானி, தன்னை ஒரு பல்துறை மற்றும் திறமையான கலைஞராக தொடர்ந்து நிரூபித்து வருகிறார், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு இடையில் சிரமமின்றி மாறுகிறார்.

50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, அவர் தனது OTT அறிமுகத்தில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.

தனது சமீபத்திய படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பைப் பற்றி ஹன்சிகா தனது நன்றியைத் தெரிவித்தார்.

“எனது ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பு மற்றும் ஆதரவால் நான் இருக்கிறேன்.

‘மை நேம் இஸ் ஸ்ருதி’ மற்றும் ‘கார்டியன்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை மற்றும் வெள்ளித்திரையில் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் அவரது திறமைக்கு ஒரு சான்றாகும்.

மேற்கூறிய படங்களை தவிர, தெலுங்கில் 105 நிமிடங்கள் மற்றும் தமிழில் MAN வர வருடம் வெளியாகவுள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானிக்lகு 2024 ஆண்டு ஒரு பிளாக்பஸ்டர் ஆண்டாக இருக்கும்.

2024 will be Actress Hanshika year

அந்த மாதிரி படம் பண்ண சொன்னீங்க.; அவ்வளவுதான் அறிவு இருந்துச்சி.. – கார்த்தி

அந்த மாதிரி படம் பண்ண சொன்னீங்க.; அவ்வளவுதான் அறிவு இருந்துச்சி.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் அவரது 25 வது படமாக உருவாகியுள்ளது ‘ஜப்பான்’.

ராஜூமுருகன் இயக்கி உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நாயகியாக அணு இமானுவேல் நடித்துள்ளார்.

வழக்கமான ராஜூமுருகன் படங்கள் போல் இல்லாமல் கமர்சியல் கலந்து கார்த்தி படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான கார்த்தி குரலில் இல்லாமல் இந்த படத்திற்காக தன் குரலை படம் முழுவதும் மாற்றிப் பேசி இருக்கிறார்.

இந்த படம் தீபாவளி வெளியிடாக நவம்பர் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் எதுவும் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 8ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் கார்த்தி.

அப்போது அவர் பேசும்போது..

பருத்திவீரனில் ஆரம்பித்து இன்று 25வது படம் வரை வளர்ந்து இருக்கிறேன். மீடியாக்களின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு.

ஒவ்வொரு படங்களையும் நீங்கள் நிறை குறைகளை சொல்லி வருகிறீர்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

மெட்ராஸ் பட பத்திரிகையாளர் காட்சியின் போது.. “இதுபோன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டீர்கள். நானும் அதை செய்து வருகிறேன்.

நான் உதவி இயக்குனராக இருந்தபோது ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒன்லைன் கதை மட்டுமே தெரியும். அந்த அளவு தான் அறிவு அப்போது இருந்தது.

ஆனால் இன்று பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டேன்.

ஜப்பான் படம் நன்றாக வந்துள்ளது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.. உங்களின் அன்பும் ஆதரவும் தேவை.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்றார் நடிகர் கார்த்தி.

Karthi diwali Japan special press meet

MLA vs YOU TUBER : செந்தில் ஹீரோவானா ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’

MLA vs YOU TUBER : செந்தில் ஹீரோவானா ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rock & Role production & A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’.

இந்தப் படத்தில் காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன் , அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார் . பிரபு, சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ, ஒளிப்பதிவு – வெங்கட் முனிரத்னம் ,ஏ சி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண் ,மாதவன் ,விஷ்ணு ராஜ்,
ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், பத்திரிக்கை தொடர்பு – பா .சிவக்குமார்.

வாங்கண்ணா வணக்கங்கண்ணா

இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், ஓரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர்.

இந்தப் பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது .

Rock and Role Production – Yasmeen Begam
AP production – Manimagali Lakshmanan
Hero – Sundar Mahasri (சுந்தர்மகாஸ்ரீ)
Heroines – Sandhiya Ramasubramanian, Abinaya sri.
Villan – Nathiya Venkat (வில்லி)
Hero Friends Prabhu, Sunny Babu
Director – Raj Kannayiram
Music Director – Joseph Chandrasekar
Editor – Ramesh Mani
Camera man – Venkat Munirathinam, A.C. Manikandan Srinath Rite
Dance Masters – Raj Kiran, Shafrin, Madhavan, Vishnu
Poster Designer – Selva
PRO – Siva

வாங்கண்ணா வணக்கங்கண்ணா

Comedian Senthil lead in Vaanganna Vanakkamanganna

More Articles
Follows