சக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்கள்.; ஆண்ட்ரியாவுக்கு ‘நோ எண்ட்ரி’

சக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்கள்.; ஆண்ட்ரியாவுக்கு ‘நோ எண்ட்ரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜம்போ சினிமாஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் A. ஸ்ரீதர் தயாரிக்க, R.அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், வித்தியாசமான சயின்பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “நோ எண்ட்ரி”.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தையை தேடிபோகிறார் , அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர்.

அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நாய்களின் வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே “நோ எண்ட்ரி” படத்தின் கதை.

தமிழில் அரிதாக நிகழும் சயின்ஸ்பிக்சன் வகையில் புதுமையான திரைக்கதையில் அனைவரையும் ஈர்க்கும் கமர்ஷியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

படக்குழுவினர் இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத மேகாலயாவின் சிரபுஞ்சி காடுகளில் இப்படத்தினை படமாக்கியுள்ளனர். அதிக மழைப்பொழிவும் இருட்டும் சூழ்ந்த காடுகளில் கடும் உழைப்பை கொட்டி படத்தை உருவாக்கியுள்ளனர்.

பயிற்சி அளிக்கப்பட்ட உயர்வகை நாய்கள் இப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளன.

ரசிகர்கள் நகராமல் இருக்கை நுனியில் இருந்து ரசிக்கும் மாறுபட்ட திரை அனுபவமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர்கள் : ஆண்ட்ரியா, பிரதாப் போத்தன், ரன்யா ராவ் ஆதவ்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்

தயாரிப்பு நிறுவனம் : ஜம்போ சினிமாஸ்
தயாரிப்பாளர்: A. ஸ்ரீதர்
இயக்குநர்: R.அழகு கார்த்திக்
ஒளிப்பதிவு : ரமேஷ் சக்கரவர்த்தி
கலை இயக்குனர்: உமா சங்கர், ஜெய்காந்த் இசையமைப்பாளர்: அஜேஷ் அசோக்
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
சண்டைக்காட்சி அமைப்பு : G.N.முருகன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்

Meet survival thriller with adventure & mystery

#NoEntry Trailer ⭐ing @andrea_jeremiah ▶️ https://t.co/xeXetj0Df2

நோ எண்ட்ரி

Andreah Jeremiah’s No entry trailer released

JUST IN மயில்சாமி மரணம் தற்செயல் அல்ல.. அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்.; நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி பேட்டி

JUST IN மயில்சாமி மரணம் தற்செயல் அல்ல.. அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்.; நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி நேற்று பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பலரும் மயில்சாமி நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பெங்களூரில் தன் அண்ணன் சத்யநாராயணா குடும்ப விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இன்று சென்னை வந்திருந்தார்.

இதனையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடலுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது

மயில்சாமி எனது நெருங்கிய நண்பர். நீண்ட கால நண்பர்.. அவர் எப்போது பேசினாலும் பெரும்பாலும் சிவபெருமானையும் எம்ஜிஆரையும் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவர் தீவிர பக்தர்.

நேற்று மகா சிவராத்திரி அன்று மயில்சாமி மரணம் அடைந்தது அது தற்செயல் ஒன்றல்ல.. சிவன் தனக்கு உகந்த ஒருவரை எடுத்துக் கொண்டார்.

ட்ரம்ஸ் சிவமணியிடம் சிவனுக்கு நான் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தாராம். மயில்சாமி அதுதான் அவரின் கடைசி ஆசை.

ட்ரம்ஸ் சிவமணியிடம் பேசிய பிறகு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்.

நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் நடிகன் என்பதை தாண்டி நல்ல மனிதர்கள்.. இருவரும் சமூக சிந்தனையாளர்கள்.. இருவரும் சமூகத்திற்கு நிறைய பங்காற்றியுள்ளனர்

விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு” என உருக்கமாக பேசினார் ரஜினிகாந்த்.

#Mayilsamy | #Rajinikanth

Rajinikanth pays tribute to actor Mayilsamy

பிரபு தேவாவின் ‘பஹிரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

பிரபு தேவாவின் ‘பஹிரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா நடிப்பில் ‘பஹிரா’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இப்படத்தில் பிரபுதேவா பல வேடங்களில் நடிக்கிறார், மேலும் இப்படத்தில் ஏழு நடிகைகள் நடித்துள்ளனர்.

நடிகைகள் – அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால் மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.

‘பஹிரா’ திரைப்படம் வரும் மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பஹிரா

Prabhudeva’s Bagheera release on March 3

தனுஷின் ‘வாத்தி’ பாக்ஸ் ஆபிஸ் இரண்டாம் நாள் வசூல் அப்டேட்…

தனுஷின் ‘வாத்தி’ பாக்ஸ் ஆபிஸ் இரண்டாம் நாள் வசூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி, ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இப்படம் இந்தியாவின் கல்வி முறையை மையமாகக் கொண்ட ஒரு சமூக நாடகமாகும்.

இந்த நிலையில், முதல் நாளில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.12 கோடி வசூல் செய்தது. தற்போது இரண்டாம் நாளில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Vaathi Box Office Second Day Collection Update

BREAKING காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.; அவரின் வாழ்க்கை..

BREAKING காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.; அவரின் வாழ்க்கை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எல்லோராலும் விரும்பப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் மயில்சாமி.

1980களில் இவர் சினிமாவில் அறிமுகமானார். ரஜினியுடன் பணக்காரன் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 25 வருடமாக இவர் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டார். இவர் பங்கேற்ற காமெடி டைம் என்ற டிவி நிகழ்ச்சி தமிழக ரசிகர்களிடையே பேசும் பொருளாக இருந்தது.

மறைந்த நடிகர் விவேக் உடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார். ‘தூள்’ படத்தில் இவர்கள் செய்த காமெடியை இன்றளவு மறக்க முடியாது.

தனுஷின் பொல்லாதவன் படத்தில் குடிகாரன் வேடத்தில் நடித்திருப்பார். அதில் இவர் செய்த அலப்பறைகள் தாங்க முடியாது.

தாய் மாமன், ஐ டி ஆபிசர், குடிகாரன் போலீஸ் என பல்வேறு கேரக்டர்களில் 100+ மேற்ப்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கார்த்தி உடன் சிறுத்தை, சிம்புவுடன் ஒஸ்தி என இன்றளவும் இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

சினிமாவை தாண்டியும் இவருக்கு மக்களிடையே பெரும் நன்மதிப்பு இருந்து வந்தது.. இதற்கு முக்கிய காரணம் இவரிடம் உதவி என்று கேட்டால் செய்யாமல் இருக்க மாட்டார்.

இவரிடம் பணம் இல்லை என்றாலும் பிரபல நடிகர்களிடம் கடன் வாங்கியாவது நிறைய ஏழைகளுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

தான் ஒரு எம்ஜிஆர் தீவிர பக்தர் ஆன்மீகவாதி இரவு நேரங்களில் தான் தினமும் மது அருந்துவேன் என்பதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர் இவர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.

சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி இறந்தார். அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவி செய்தவர் நடிகர் மயில்சாமி.. 1985-ம் ஆண்டு கன்னிராசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.. மிமிக்ரி திறமை பெற்றவர். பலகுரல் மன்னன் என மக்களிடையே பெயர் பெற்றவர். 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி..

#Mayilsamy #actor

Comedy Actor MayilSamy passed away He was 57

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.; திருநள்ளாறில் யோகி பாபு.!

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.; திருநள்ளாறில் யோகி பாபு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுபோல காமெடி நடிகர்களில் தற்போதைய ட்ரெண்டிங் நாயகன் யோகி பாபு.

இவர்கள் இருவரும் ரெமோ, மான் கராத்தே, டாக்டர் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்றுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்

திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி தட்சிணாமூர்த்தி சூரசம்கார மூர்த்தி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார்.

அதுபோல காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் யோகி பாபு.

திரை நட்சத்திரத்தை கண்ட ரசிகர்களும் பக்தர்களும் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

யோகி பாபு

Sivakarthikeyan at Thiruchendur and Yogibabu at Karaikal Thirunallar

More Articles
Follows