வாரத்திற்கு 3 படங்கள்தான் ரிலீஸ்; விஷால் அறிவிப்பால் காலாவின் கதி.?

வாரத்திற்கு 3 படங்கள்தான் ரிலீஸ்; விஷால் அறிவிப்பால் காலாவின் கதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals new release plan Rajinis Kaala release may got more delayகோலிவுட்டில் நடைபெற்ற 48 நாட்கள் வேலைநிறுத்தம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியீட்டுக்கு காத்திருக்கும் படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் ரஜினியின் காலா ரிலீஸ் குறித்து ஏதாவது மாற்றம் உண்டாகுமா? என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

அவர் கூறியதாவது…

“ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த படங்களை வேலை நிறுத்தத்தால் வெளியிட முடியவில்லை.
எனவே சம்பந்தபட்ட தயாரிப்பாளர்களுடன் அமர்ந்து பேசி, அனைத்துப் படங்களும் வெளியாகும் தேதியை முதலில் முடிவு செய்வோம்.

அந்த படங்களின் வரிசைப்படி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். எந்தப் பாகுபாடும் காட்டாமல், வாரத்திற்கு 3 படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

எனவே ஏப்ரல் 27ல் வெளியாகும் என அறிவித்திருந்த காலாவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் காலா படத்தை வெளியிடும் லைகாவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக முன்பே அறிவித்திருந்த்து என்பது குறிப்பிடத்தக்கது.

Vishals new release plan Rajinis Kaala release may got more delay

50 வருட தமிழ் சினிமாவையே வியக்க வைத்த விஷால்

50 வருட தமிழ் சினிமாவையே வியக்க வைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals ground breaking revolution makes him adorable icon of Indian showbizதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலகம் கோலிவுட்டை வியந்து பார்க்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 17, 2018) முடிந்தது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது.

இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார்.

திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்‌ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம்சாட்டியவர்கள்கூட இப்போது இந்தப் போராட்டம், திரையுலகுக்குப் பெற்றுத் தந்துள்ள நன்மைகளுக்காக அவரைப் புகழ்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த சலுகைகள் இவைதான் என்று பலர் பாராட்டுகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், FEFSI ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ததுதான் இதன் தொடக்கப்புள்ளி. ஒரு முக்கியமான தருணத்தில், படத் தயாரிப்புகளை நிறுத்தி FEFSI உடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். பல விஷயங்களை நெறிப்படுத்தினார்.

அதுவரை அவை யோசித்த பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தன. இந்தச் செயலே, அவருக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது.

இதனால்தான் அவர் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராகாவும், திரையரங்கு உரிமையாளர்கள், மாநில அரசு உள்ளிட்ட பல தரப்பினரிடம் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் விஷால் போராட்டத்தைத் தொடங்கியபோது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவருக்குத் துணையாக நின்றனர்.

இன்று தமிழ்த் திரையுலகமே மகிழ்ச்சியிலும் கொண்டாட்ட உணர்விலும் திளைக்கிறது. அவர்கள் அனைவரும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி சொல்கின்றனர்.

நல்ல மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் தொடங்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 100% கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முறை மற்றும் வெளிப்படைத்தன்மை.

பார்வையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு அனுமதித்த கட்டணங்களுக்குட்பட்டு படத்துக்கேற்றபடி டிக்கெட் விலை வைத்துக் கொள்வதற்கான வசதியுடன் (ஃப்ளெக்ஸிபில் டிக்கெட்டிங்) 3 அடுக்குகளில் டிக்கெட் கட்டணங்கள், தமிழகத்தில் பாதிக்கு மேற்பட்ட திரையரங்குகளில் இருக்கும் ஈ.சினிமாவில் 50% விலை குறைப்பு, (டி-சினிமாவுக்கான விலை அதற்காக அமைக்கப்பட்டுள்ள தென்னிந்திய கூட்டு செயல்பாட்டுக் குழுவால் நிர்ணயிக்கப்படும்) உள்ளிட்டவை திரையுலகினருக்கு வெற்றியை உறுதிசெய்யும் விளைவுகள்.

ஒரு வாரத்துக்கு ரூ.5000/-, படத்தின் முழு ஓட்டத்துக்கு ரூ.10,000 மற்றும் ஒரு காட்சிக்கு ரூ.250 என்ற கட்டண முறையை க்யூப் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த கட்டண முறை ஆறு மாதங்களுக்கு சோதிக்கப்படும்.

அதற்குள் இதை நிரந்தரமாக்கிவிடுவோம் அல்லது இது சரியாகப் பயனளிக்கவில்லை என்று கட்டணங்களை மாற்றச் சொல்வோம் என்று அரசு மற்றும் திரையுலக அமைப்புகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சொன்னார் விஷால்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் சாதனைகள் இந்திய திரையுலகில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. விஷாலின் நோக்கமும் மன உறுதியும் அனைவருக்கும் நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளன என்று அண்மைக் காலங்களில் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Vishals ground breaking revolution makes him adorable icon of Indian showbiz

மீண்டும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் யோகி பாபு

மீண்டும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and yogi babuபொன்ராஜ் இயக்கத்தில் `சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை அடுத்து `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார்.

நாயகியாக ரகுல் பிரித்தி சிங் நடிக்க, கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், முக்கிய வேடத்தில் யோகி பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பே மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் யோகி பாபு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்பட சூட்டிங் மே மாதம் தொடங்கப்பட உள்ளது.

100 பெண்களை வலையில் வீழ்த்திய தயாரிப்பாளர்; ஸ்ரீ ரெட்டியின் தொடரும் புகார்கள்

100 பெண்களை வலையில் வீழ்த்திய தயாரிப்பாளர்; ஸ்ரீ ரெட்டியின் தொடரும் புகார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer venkat apparaoதனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தன் மேலாடையை கழட்டி தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

மேலும் தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் எனவும் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இவையில்லாமல் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக சில திரைத்துறையினர் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் செக்ஸ் புகார் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டியின் புகாரை பெரும்பாலான துணை நடிகைகள் ஆதரித்துள்ளனர்.

ஆனால் வழக்கம்போல அந்த தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

Actress Sri Reddy next complaint on Producer Venkat Apparao

BREAKING: சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனி; டைரக்டர் யார் தெரியுமா?

BREAKING: சிவா தயாரிப்பில் விஜய் ஆண்டனி; டைரக்டர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony and Naveen team up with Amma Creations T Sivaகடவுள் இருக்கான் குமாரு, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தயாரித்து வருகிறார் டி.சிவா.

தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படத்தை மூடர் கூடம் இயக்குனர் நவீன் இயக்கவுள்ளதாகவும் அப்படம் ஆக்சன் த்ரில்லர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது சிவா தயாரிப்பில் உருவாகும் 23வது படமாகும். இதன் சூட்டிங்கை ஜீலையில் தொடங்கவுள்ளனர்.

Vijay Antony and Naveen team up with Amma Creations T Siva

T Siva AmmaCreations‏ @TSivaAmma 10m10 minutes ago
Super glad to announce that Amma Creations has joined hands with @vijayantony on a new Project, that will be Directed by Moodar koodam movie fame M.Naveen. It will be an Action Thriller and it’s our Production No:23. Shooting will be starting from July 2018 with all your wishes.

t siva vijay antony

வந்துட்டார்ன்னு நினைச்சா.. வடிவேலுக்கு தடை போட போறாங்களே..??

வந்துட்டார்ன்னு நினைச்சா.. வடிவேலுக்கு தடை போட போறாங்களே..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluஷங்கர் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் இனிமேல் அந்த படத்தில் நடிக்க என்னால் முடியாது என வடிவேலு விளக்க கடிதம் கொடுத்ததை நாம் பார்த்தோம்.

இதைத் தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இனி படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான கத்தி சண்டை, மெர்சல் படங்களில் வடிவேல் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows