ரஜினிகிட்டேயே மோதியாச்சு..; அடுத்து அஜித்துடன் மோதும் விஷால்

ரஜினிகிட்டேயே மோதியாச்சு..; அடுத்து அஜித்துடன் மோதும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மாநிலங்களில் 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனையடுத்து ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவிருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13ல் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 14ல் தன் படத்தை இறக்கவுள்ளார் நடிகர் விஷால்.

தற்போது விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு பிறகு தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமே வாகை சூடும் படம் ஜன-26ல் ரிலீஸாகும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஏற்கெனவே 2021ல் தீபாவளியன்று ரஜினியுடன் அண்ணாத்த படத்துடன் எனிமி (படத்துடன்) மோதினார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal to clash with Ajith in this pongal

உதயநிதி கீர்த்திசுரேஷ் வடிவேலு கூட்டணி; சினிமாவுக்கு முழுக்குபோடும் MLA.?

உதயநிதி கீர்த்திசுரேஷ் வடிவேலு கூட்டணி; சினிமாவுக்கு முழுக்குபோடும் MLA.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ புரொடியூசர் போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

இந்த படத்தை முடித்துவிட்டு கர்ணன் பட இயக்குன மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்தல் நடிக்கவுள்ளார் உதயநிதி என்ற தகவலை நம் தளத்தில் பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த ஜோடியுடன் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்த உள்ளாராம் உதயதிதி எம்எல்ஏ.

Keerthy Suresh to romance Udhayanidhi for her next

இப்படித்தான் வாழனும் Vs எப்படியும் வாழலாம்.; ப்ரஜின்-வனிதா விஜயகுமார் கூட்டணி

இப்படித்தான் வாழனும் Vs எப்படியும் வாழலாம்.; ப்ரஜின்-வனிதா விஜயகுமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா சென்னை வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு, உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை.

“இப் படம் அரசியல் நகைச்சுவை காதல் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டின் நடப்பு அரசியலைத் தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சீயோன்

The all-time heartthrob and talented Prajin kick-starts the shooting of the new film

‘அலைபாயுதே’ ரீமேக்.. அடம்பிடிக்கும் வெண்பா.; மாதவன் மனசு வைப்பாரா.?

‘அலைபாயுதே’ ரீமேக்.. அடம்பிடிக்கும் வெண்பா.; மாதவன் மனசு வைப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, பிரசாந்துடன் ஆயுதம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா.

தற்போது வளர்ந்து குமரி ஆனபின்னர் கதையின் நாயகியாக நடித்து வருகிறர்.

பள்ளிப் பருவத்திலே, காதல் கசக்குத்தய்யா, மாயநதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். அண்மையில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கௌதம் கார்த்திக்கின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் தன் நடிப்புக்காக பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய பேட்டியில் அலைபாயுதே படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதில்.. சின்ன வயசுல அலைபாயுதே படம் பார்த்தேன். அப்போது முதலே அந்த படம் மீதும் மாதவன் மீதும் ஒரு ஈர்ப்பு உள்ளது.

என்ன காரணம் தெரியவில்லை. ஒரு வேளை அலைபாயுதே ரீமேக் ஆனால் கண்ணை மூடிக் கொண்டு நான் நடிக்க சம்மதம் சொல்வேன். ஒரே நிபந்தனை… அப்போதும் மாதவன் உடன்தான் நடிப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார் வெண்பா.

அதற்கு மணிரத்னம் மற்றும் மாதவன் மனசு வைப்பார்களா வெண்பா..?

Actress Venba wants to act in Alaipayudhe 2

ம….ரு பொம்பளைங்க… முதல்வர் பதவி விலகிடுவாரு போல..; ‘பென் விலை வெறும் 999’ விழாவில் பேரரசு பேச்சு

ம….ரு பொம்பளைங்க… முதல்வர் பதவி விலகிடுவாரு போல..; ‘பென் விலை வெறும் 999’ விழாவில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் இன்னும் உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படங்களின் வரிசையில் இணைந்துள்ளது ‘பென் விலை வெறும் ரூபாய் 999’.

வரதராஜ் இயக்கத்தில். ரெயின்போ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜ்கமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் பல அறிமுக நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பாக நடிகர் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் தலைப்பு, கதைக்களம் பெண்களுக்கு எதிராக இருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றச்சாட்டி இருந்தன.

இந்த சர்ச்சை குறித்து பட இயக்குனர் விளக்கமளித்து இருந்தார்.

அதில், “இந்த படத்தை முழுக்க முழுக்க ஆபாசமின்றி எடுத்துள்ளோம். பெண்களுக்கு ஆதரவாகவும், எச்சரிக்கை தரும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கும்பலை தோலூரிக்கும் படமாக இது அமைந்துள்ளது என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஜனவரி 3ஆம் தேதி மாலை இப்படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டிரைலர் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் நடிகர்கள் போஸ் வெங்கட், விஜய் டிவி ஜெயச்சந்திரன், இயக்குனர் பேரரசு, ராஜ்கமல் மனைவியும் நடிகையுமான லதா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

வழக்கம்போல சமூக அவலங்களை கண்டு பொங்கி பேசினார் பேரரசு.

அவர் பேசியதாவது…

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரித்து மகிழ சினிமாவிற்கு வருகின்றனர்.

ஆனால் நாங்கள் (படைப்பாளிகள்) கருத்து சொல்ல வேண்டியிருக்கு. ஏனென்றால் நாட்டின் நிலைமை அப்படியுள்ளது.

ஒரு பக்கம் பெண்கள் வன்கொடுமை பற்றி பேசுகிறோம். ஆசிரியர்களே மாணவிகளிடம் தவறாக நடக்கின்றனர். இது வேதனைக்குரியது.

அதே சமயம் மற்ற பக்கம் சில பெண்களே ஆபாசமாக நடந்துக் கொள்கின்றனர். டிக்டாக்கில் 2 பெண்கள் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பேர் கமெண்டு போடுகின்றனர்.

மயிரு.. (மேடையில் சொல்ல கூடாது.. ஆனால்..) அவங்க எல்லாம் சீ… பொம்பளைங்களா.? மோசமாக பேசிக் கொள்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வேறு வழியில்லை.

அதுபோல் செல்போனில் டாக் டைம் குறைக்க வேண்டும். மீன் விற்கும் பொம்பள.. பூ விற்கும் பொம்பள எல்லோரும் போனில் பேசிக் கொண்டே வியாபாரம் செய்கின்றனர்.

செல்போனில் எவ்வளவு பேசினாலும் ஒரே ரேட் தான். அன்லிமிட் டாக்டைம் இருக்கிறது. இதுவே 1 மணி நேரத்திற்கு இவ்வளவு 10 நிமிசத்திற்கு இவ்வளவு என இருந்தால் பைசா காலியாகிவிடும் என போன் பேசும் நேரத்தை குறைப்பார்கள்…

செல்போன்களால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனாலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்டுகிறார்கள்” என பேரரசு பேசினார்.

Director Perarasu controversy speech at PenVilai Verum 999 Rubai Mattume audio launch

ஜீவா பிறந்தநாளில் தங்கள் 91வது பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர் குட் பிலிம்ஸ்

ஜீவா பிறந்தநாளில் தங்கள் 91வது பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர் குட் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி செளத்ரி தயாரிக்கும் 91-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜீவா.

இந்த நிறுவனம் ஜீவாவின் குடும்ப நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

“வரலாறு முக்கியம்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாம்.

நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று (4 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது.

ஜீவா நடித்த “சிவா மனசுல சக்தி” படத்தினைப் போன்று இப்படத்தினை எதிர்பார்க்கலாம் என்கிறது படக்குழு.

அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் சசியின் உதவியாளராக பணியாற்றியவர்.

நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), R. சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Jiiva’s next film is titled Varalaru Mukkkiyam

More Articles
Follows