தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பிரபலமான பாடலான ‘நாட்டு நாடு’ 95வது அகாடமி விருதுகளில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் அகாடமி விருதை வென்ற முதல் முழுமையான இந்தியப் பாடலாக அமைந்தது.
இயக்குநர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இருவரையும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.
நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
மேலும், ஹைதராபாத்தில் இருந்தபோது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் சந்தித்தார்.
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜமௌலி மற்றும் கீரவாணி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “இந்திய சினிமாவின் பெருமைகளான எஸ்.எஸ். ராஜமௌலி காரு மற்றும் ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி காரு மற்றும் அவர்களின் அழகான கருணையுள்ள துணைவர்கள் ஆகியோரை ஹைதராபாத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். ஆரோக்கியமான ஆடம்பரமான காலை உணவுடன். வெற்றி தங்களை மிகவும் உறுதியாக நம்புபவர்களை பாதிக்காது. இந்த அற்புதமான மனிதர்கள் அதை நிரூபிக்கிறார்கள்” என கூறினார்.
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Khushbu meets Rajamouli and MM Keeravani