வரி ஏய்ப்பு : யூடியூபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கும் பிரபலங்கள்

வரி ஏய்ப்பு : யூடியூபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொகுப்பாளர், நடிகை, யூ டியூபர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே.

ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் நடிகை வலம் வந்தார்.

இவர் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பேர்லே மானே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘வலிமை’ திரைப்படத்தில் கிறிஸ்டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் அறியப்பட்டார்.

‘நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி’, ‘தி லாஸ்ட் சப்பர்’, ‘டபிள் பேரல்’, ‘பிரீத்தம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது , கேரளாவில் உள்ள பிரபல யூ டியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக நடிகை பேர்லே மானே வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

மாலைவரை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கேரளாவில் உள்ள யூ டியூபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியது.

income tax department searches in YouTubers house

தமிழில் வந்த சூப்பர் ஹீரோ ‘வீரன்’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழில் வந்த சூப்பர் ஹீரோ ‘வீரன்’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ புகழ் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள படம் வெளியான ‘வீரன்’.

இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘வீரன்’ படம் ஜூன் 2ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து.

இந்நிலையில், ‘வீரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘வீரன்’ படம் வருகிற ஜூன் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனை தெரிவிக்கும் வகையில் ‘வீரன்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

வீரன்

hiphop aadhi’s veeran movie ott release date announcement

துல்கரின் சினிமா வாழ்க்கையை சிறப்பிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ ரிலீஸ் அப்டேட்

துல்கரின் சினிமா வாழ்க்கையை சிறப்பிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கிங் ஆஃப் கோதா’ படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘கிங் ஆஃப் கோதா’ படத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கிங் ஆஃப் கோதா

dulquer salmaan’s ‘King of Kotha’ film crew introduced the characters

ஒரே நாளில் அக்கா – அண்ணனை இழந்த போஸ் வெங்கட்.; என்ன நடந்தது.? முதல்வர் இரங்கல்

ஒரே நாளில் அக்கா – அண்ணனை இழந்த போஸ் வெங்கட்.; என்ன நடந்தது.? முதல்வர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்திற்கு நாயகன் நாயகி எவ்வளவு முக்கியமோ அதேபோல குணச்சித்திர நடிகர்களும் மிகவும் முக்கியமானவர்கள்.

அவர்கள்தான் கதையின் உயிரோட்டத்திற்கு பக்கபலமாக இருப்பார்கள். அப்படி ஒருவர் தான் நடிகர் போஸ் வெங்கட்.

‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான இவர் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி, கவண், அயோத்தி உள்ளிட்ட படங்களில் இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மற்ற மாநில மொழி படங்கள் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் போஸ் வெங்கட்டின் அக்கா வளர்மதி என்பவர் நேற்று ஜூன் 23ஆம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.

இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதன் அறந்தாங்கியில் இருந்து சென்னை வந்துள்ளார்.

சகோதரி உடலைக் கண்டு கதறி அழுதபோது திடீரென அவருக்கும. மாரடைப்பு ஏற்பட்டு அவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரே நாளில் தன்னுடைய அக்கா மற்றும் அண்ணன் இருவரையும் போஸ் வெங்கட் இழந்துள்ளார்.

இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதன் உடல் அறந்தாங்கி எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன.

ஒரே நாளில் அண்ணன் மற்றும் அக்காவை இழந்த போஸ் வெங்கட்டிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

கூடுதல் தகவல்…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முயற்சித்து வருகிறார் போஸ் வெங்கட்.

மேலும் வெங்கட், திமுக தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறார்.

திமுக பொதுக் கூட்டங்களிலும் போஸ் வெங்கட் உரையாற்றியிருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட போஸ் வெங்கட் விருப்ப மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bose venkat lost his sister and brother in same day

ஆஸ்பத்திரியில் நடிகை குஷ்பூ திடீர் அனுமதி.; என்னாச்சு.?

ஆஸ்பத்திரியில் நடிகை குஷ்பூ திடீர் அனுமதி.; என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் என பன்முகம் கொண்டவர் நடிகை குஷ்பூ.

இந்த நிலையில், நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பூ.

அதில், “இடுப்பு எலும்புக்காக மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அது முழுவதுமாக குணமாகும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

actress Khusbhu admitted to the hospital

போதைப் பொருள் ரொம்ப சீரியஸ்.; பெற்றோர்கள் பிள்ளைகளை நண்பர்களாக நடத்தனும் – கார்த்தி

போதைப் பொருள் ரொம்ப சீரியஸ்.; பெற்றோர்கள் பிள்ளைகளை நண்பர்களாக நடத்தனும் – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி*

கார்த்தி பேசியதாவது…

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது.

முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.

பள்ளிகளுக்கு அருகே கூட போதைப் பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான்.

ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான விஷயம்.

போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும்.

போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்”.

இவ்வாறு கார்த்தி பேசினார்.

கார்த்தி

karthi expressed his awareness about the danger of drugs

More Articles
Follows