ராம்சரண் – சமந்தா இணைந்த ‘ரங்கஸ்தலம்’ ஜப்பானில் படைக்கும் சாதனை

ராம்சரண் – சமந்தா இணைந்த ‘ரங்கஸ்தலம்’ ஜப்பானில் படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜப்பானில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய படமாக இது அமைந்தது ‘ரங்கஸ்தலம்’.

அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான ‘ரங்கஸ்தலம்’- அதன் நடிப்பு, கதை சொல்லல், இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது.

இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அனைத்து காலக்கட்டத்திலும் அதிக வசூலை செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.

மேலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களையும் ஈர்த்தது.

ராம்சரணின் திரையுலக பயணத்தில் ‘ரங்கஸ்தலம்’ ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

இந்த படத்தில் அவர் சிட்டிபாபு என்ற ஒரு பகுதி காது கேளாத மற்றும் நேர்மையான இளைஞனாக தனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்.

உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் பாத்திரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டினை பெற்றார்.

ரங்கஸ்தலம்

இந்த படம் முன்னணி நடிகையான சமந்தாவுக்கும் பாராட்டுகளை பெற்று தந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்கு கவர்ச்சியையும், ஆழமான நடிப்பினையும் வெளிப்படுத்தினார்.

ராம் சரண் உடனான அவரது கெமிஸ்ட்ரியும் பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படம் ஜப்பானில் ஜூலை 14-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. முதல் நாளில் 70 திரைகளில் 2.5 மில்லியன் யென்களை ஈட்டியது.

‘ரங்கஸ்தலம்’ படத்தின் ஜப்பான் வெளியிட்டைப் பற்றி அப்படத்தினை ஜப்பானில் வெளியிட்ட ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி துரைப்பாண்டியன் பேசுகையில்…

” ஸ்பேஸ்பாக்ஸ் ரங்கஸ்தலம் திரைப்படத்தை ஜப்பானில் சுமார் 50 கிரங்கு திரையரங்குகளில் வெளியிட்டோம். வரும் வாரங்களில் இன்னும் கூடுதலாக பல திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

ஜப்பானியர்களின் இதயத்தில் ராம்சரண் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். இதனை இப்படத்தின் வெற்றி நிரூபிக்கிறது. ‘ரங்கஸ்தலம்’ போன்ற படத்தை ஜப்பானில் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

இந்த திரைப்படம் உண்மையிலேயே தலை சிறந்த படைப்பு மற்றும் ஸ்பேஸ்பாக்ஸ்க்கு கிடைத்த பெருமை” என்றார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களை விநியோகிப்பதற்கான முன்னணி இந்திய திரைப்பட விநியோக நிறுவனமாக ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பானில் உள்ளது.

இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெற்றியை பெற்றது.

‘மகதீரா’, :துருவா’, ‘ரங்கஸ்தலம்’, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மூலம் ராம்சரண் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ரங்கஸ்தலம்

Ram Charans Rangasthalam breaks all records at its Japan Release

14 ஆண்டுகளில் 5200 மாணவர்களுக்கு கல்வி.; நிரந்தர மாற்றம் உருவாக்க சூர்யா முடிவு

14 ஆண்டுகளில் 5200 மாணவர்களுக்கு கல்வி.; நிரந்தர மாற்றம் உருவாக்க சூர்யா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓவியர் திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.

இன்று ஜூலை 16 தேதி ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா பேசியதாவது…

”அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே ‘அகரம்’.

சிவகுமார்

சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக முடியும், இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளில் 5200 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை தமிழகம் முழுவதும் குறிப்பாக கடற்கரை பகுதிகள், மலை கிராம பகுதிகள், அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் என்று பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

களங்களின் யதார்த்தமே அகரத்தின் பணிகளை தீர்மானிக்கிறது. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன், அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை பள்ளிகளோட வளர்ச்சிக்கு பொறுப்பேற்க செய்வது போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது.

கூடுதலாக பரிசார்த்த முயற்சியாக ‘அகரம் தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றிய மலை கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளாக நடத்தப்பட்டு வரும் நான்கு தொடக்கப் பள்ளிகள் தேவையின் (முன்னுரிமை) அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அகரம் முன்னாள் மாணவர்கள் தினசரி கற்பித்தல் பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்.

தற்போது 30 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும் அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள்.

ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது.

அகரம் என்றாலே அதன் அர்பணிப்புமிக்க தன்னார்வலர்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

சிவகுமார்

Actor Suriya plans for future of Poor class students

நான் தொடங்கிய உதவியை என் சூர்யா – கார்த்தி செய்கிறார்கள்.; சிலிர்க்கும் சிவக்குமார்

நான் தொடங்கிய உதவியை என் சூர்யா – கார்த்தி செய்கிறார்கள்.; சிலிர்க்கும் சிவக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓவியர் திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.

இன்று ஜூலை 16 தேதி ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது.

சிவகுமார்

நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார்..

“1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது.

சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன்.

தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்.

சிவகுமார்

Sivakumar emotion about his sons Suriya Karthi and Educational trust

மதிப்பெண் மட்டும் கல்வியல்ல.. ஏற்றத் தாழ்வுகளை உடைப்பதும் கல்விதான்.. – கார்த்தி

மதிப்பெண் மட்டும் கல்வியல்ல.. ஏற்றத் தாழ்வுகளை உடைப்பதும் கல்விதான்.. – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓவியர் திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.

மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார்.

இன்று ஜூலை 16 தேதி ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது.

இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் ஜெயராஜ் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு.ஞானபிரகாசம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், ‘குறள் வழி கல்வி’ என திருக்குறளின் மேன்மையை பள்ளி எங்கும், மாணவர்களின் மனதில் விதைக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.

சிவகுமார்

நிகழ்ச்சியில், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி பேசியதாவது…

ஒரு முழுமையான மனிதனை உருவாக்குவது தான் கல்வியோட நோக்கம்.. நோக்கமா இருக்க முடியும்..

ஆனால் இன்றைய சூழல் மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர மனநிலை குறையவே இல்லை.. மாணவர்களின் உடல்நலம் மனநலம் பற்றிய போதிய அக்கறை கல்வி சூழலில் இல்லை.

வெற்றிகரமா இருக்கணும்.. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கணும்.. நம்ம எல்லாருக்கும் உள்ளேயும் ஒரு திறமை நிச்சயமா இருக்கு அதை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டுவது கல்வியின் நோக்கமாக அமையவேண்டும்.

மதிப்பெண்கள் வாங்குவது மட்டும் கல்வி அல்ல, அன்றாடம் வாழ்விற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை எடுத்துக் கூறுவதும் புரிய வைப்பதும் கல்வி முறை தான்.

பொருளாதாரத்துடனும் சமூகவியலுடனும் நம் நாட்டில் உள்ள சாதி மத அமைப்பு முறைகளை பேதங்களை களையவேண்டிய அவசியத்தை ஏற்றத்தாழ்வுகளை உடைக்க வேண்டிய அவசியத்தை சொல்லித் தருவதும் கல்விதான், என கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வரவேற்புரை ஆற்றினார் கார்த்தி.

வரவேற்புரை முடிந்ததும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டர்.

சிவகுமார்

Only Marks is not education says Actor Karthi

கதிரேசன் தயாரிப்பில் இணைந்து நடிக்கும் லாரன்ஸ் & எல்வின்

கதிரேசன் தயாரிப்பில் இணைந்து நடிக்கும் லாரன்ஸ் & எல்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய ‘ருத்ரன்’ படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது.

அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கிறார்.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகிறது.

பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் இப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

லாரன்ஸ்

படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்…

“இது ஒரு முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன்.

ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன்.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.

ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’ & ‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார்.

படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை பயிற்சிக்கு பேண்ட்டம் பிரதீப் பொறுப்பேற்றுள்ளார்.

பாடல்களை ஞானகரவேல் எழுத படத்தின் வசனங்களை ஞானகரவேல் மற்றும் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இணைந்து எழுதி உள்ளனர்.

கலை இயக்கத்திற்கு ராஜு பொறுப்பேற்க ஷேர் அலி உடைகளை வடிவமைக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

லாரன்ஸ்

Raghava Lawrence’s next with his brother Elviin to be directed by Innisai Pandiyan

ஒரு வழியாக சில வருடங்களுக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்

ஒரு வழியாக சில வருடங்களுக்குப் பிறகு ‘துருவ நட்சத்திரம்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருந்த படம் ‘துருவ நட்சத்திரம்’.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடிக்க இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இப்பட டீசர் வெளியானது. மேலும் இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து 2018 19 20 21 22 என 5 வருடங்களுக்கு மேலாக துருவ நட்சத்திரத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவ்வப்போது ஏதாவது தகவல் வரும் ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன் படத்தின் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் திரையில் சந்திப்போம் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக இந்த அறிவிப்பு கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ஆகியோரது புதிய கூட்டணியை எதிர்பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்

Heralding the arrival of DHRUVA NATCHATHIRAM with this song that’s releasing on the 19th..

More Articles
Follows