ரஜினி சொன்னதை செயலில் காட்டும் விக்ரம் பிரபு..!

ரஜினி சொன்னதை செயலில் காட்டும் விக்ரம் பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabhu follows Rajinikanthவிக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள வாகா படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ராணுவ வீரரின் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை குமாரவேலன் இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில், ‘வீர சிவாஜி’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

இதனையடுத்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், ‘முடிசூடா மன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் 10 படங்களை நெருங்கியது குறித்து கேட்டதற்கு….

“செலக்ட்டிவ்வாக வருஷத்துக்கு ஒரு படம்னு பண்ணாதீங்க. இதுதான் சரியான வயசு, நேரம் எல்லாம்.

எனவே வருஷத்துக்கு ரெண்டு, மூணு படங்கள் பண்ணுங்கன்னு ரஜினி சார் சொன்னார். அவர் சொன்னப்படி செய்து வருகிறேன்.” என்றார்.

கபாலி ரிலீசாகும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ரஜினி செல்ஃபி.!

கபாலி ரிலீசாகும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ரஜினி செல்ஃபி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

king of style rajiniரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இப்படம் அடுத்த ஜீலை மாதம் வெளியாகவுள்ளது.

எனவே வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விறுவிறுப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்க முடிவு செய்திருக்கிறாராம் தாணு.

எனவே பல லட்சம் ரூபாய் செலவில் சூப்பர் ஸ்டாரின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.

கபாலி ரிலீசாகும் தியேட்டர்களுக்கு இச்சிலையை அனுப்பி வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறார்களாம்.

மேலும் ரசிகர்கள் அந்த மெழுகு சிலை ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

ரஜினி-கமலை அடுத்து மீண்டும் விஜய்யுடன் பிரபல நிறுவனம்.!

ரஜினி-கமலை அடுத்து மீண்டும் விஜய்யுடன் பிரபல நிறுவனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsபரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கக்கூடும் என செய்திகள் வந்தன.

ஆனால் விஜய் 61 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது ரஜினியின் 2.ஓ மற்றும் கமலின் சபாஷ் நாயுடு படங்களை லைகா தயாரித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினி ரசிகர்களுக்கு மதிப்பு அளித்து மன்னிப்பு கேட்ட தாணு.!

ரஜினி ரசிகர்களுக்கு மதிப்பு அளித்து மன்னிப்பு கேட்ட தாணு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli Thanu stillsமுதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கலைப்புலி தாணு கூட்டணியில் உருவாகியுள்ள படம் கபாலி.

இப்படத்தின் பாடல்களை நேற்றே இணையத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று ஜுன் 12ஆம் தேதி மிகச்சரியாக காலை 11.06 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது டீசரை வெளியிடவிருந்தனர்.

ஆனால், அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, டீசரை தற்போது வெளியிட முடியவில்லை. இன்னும் சில நாட்களில் வெளியிடவுள்ளோம் என அறிவித்திருக்கிறார் தாணு.

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி திரையுலகில் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால் மற்றவர்களோ, கடைசி நொடி வரை காக்க வைத்துவிட்டு, அதன் பின்பே அறிவிப்பார்கள்.

ஆனால் ரஜினி ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முன்பே அறிவித்து இருப்பது தாணுவின் பெருந்தன்மையை காட்டுகிறது.

ரஜினி மகள் சௌந்தர்யா வெளியிட்ட கபாலி பாடல்கள்..!

ரஜினி மகள் சௌந்தர்யா வெளியிட்ட கபாலி பாடல்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali audio launch stills (4)ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கபாலி.

இப்படத்தின் பாடல்களை நாளை ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால், நேற்றே இப்படத்தின் நெருப்புடா பாடல் மற்றும் ரஜினிகாந்த் பேசும் பன்ச் டயலாக் உள்ளிட்டவை வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில், திடீரென் இப்படத்தின் பாடல்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற எளிமையான விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இதன் முதல் ஆடியோ சி.டி.யை சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

நாளை முதல் இப்படத்தின் ஆடியோ சி.டி. கடைகளில் கிடைக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கமல்-சிம்பு நாயகியை வளைத்துக் கொண்ட சித்தார்த்..!

கமல்-சிம்பு நாயகியை வளைத்துக் கொண்ட சித்தார்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor siddharth photos‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தொடர்ந்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சித்தார்த்.இதில் சசி இயக்கத்தில் ஜிவி. பிரகாஷுடன் ஒரு படம்.

இதனையடுத்து, ‘கப்பல்’ இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு ‘சைத்தான் கி பச்சா’ என இந்தியில் பெயரிட்டுள்ளனர். (பப்ளிகுட்டிக்கா?)

இதனைத் தொடர்ந்து முதன் முறையாக ‘கம்மராசம்பவம்’ என்ற மலையாள படத்தில் திலீப்புடன் இணைந்து நடிக்கிறார்.இந்த இரு படங்களை தொடர்ந்து, ஒரு படத்திற்கு ‘The House Next Door’ என்ற தலைப்பிட்டுள்ளனர்.இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.

Viacom18 மற்றும் Etaki Entertainment இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மிலண்ட் ராவ் இயக்கவுள்ளார்.இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் சிம்புவுடன் இது நம்ம ஆளு ஆகிய படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.ஏற்கெனவே ‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு வேண்டாம் என தமிழ் மொழி அல்லாத வார்த்தைகளில் பெயரிட்டார் சித்தார்த்.

தற்போதும் அவரது படங்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows