தீபாவளி ரேஸில் மோதும் தனுஷ்-கார்த்தி-விக்ரம் பிரபு..!

தீபாவளி ரேஸில் மோதும் தனுஷ்-கார்த்தி-விக்ரம் பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kodi Kashmora and Veera Sivaji to Release on Diwaliஸ்வீட்ஸ், பட்டாசு, நியூ ட்ரஸ், சினிமா, ப்ரெண்ட்ஸ்…. தீபாவளின்னாலே நமக்கு சட்னுக்கு இந்த ஐந்து விஷயங்கள்தான் ஞாபகத்திற்கு வரும்.

எனவே சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ரசிகர்களுக்காக தீபாவளி விருந்து தர தயாராகி வருகின்றனர்.

இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் கொடி, விக்ரம் பிரபுவின் ‘வீர சிவாஜி’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

‘காஷ்மோரா’ படம் ரூ. 60 கோடியில் தயாராகியுள்ளதால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படமும் இணையலாம் எனத் தெரிகிறது.

கபாலிடா… நெருப்புடா… ரெக்கார்டுடா… முடியுமா..? அடங்குமா..?

கபாலிடா… நெருப்புடா… ரெக்கார்டுடா… முடியுமா..? அடங்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth's Kabali Latest Record Updatesரஜினியின் கபாலி படத்தின் டீசர் சாதனைகளை இந்திய திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.

தமிழ் டீசர் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி டீசரும் சாதனை படைத்து வருவதால் கபாலி மீதான எதிர்பார்ப்பு இந்தியளவில் உயர்ந்து வருகிறது.

இப்படத்தின் தமிழ் டீசரை இதுவரை 2 கோடியே 35.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், தெலுங்கு டீசரை 42.1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ஹிந்தி டீசரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்திருக்கிறார்களாம்.

நெருப்புடா பாடல் டீசரை 66 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.

ஆக மொத்தம் 35 மில்லியன் (3 கோடியே 53.1 லட்சத்திற்கு) மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர்.

படம் வருவதற்குள் இன்னும் எத்தனை சாதனைகளை கபாலி நிகழ்த்த போகிறார்..? என திரையுலகமே காத்திருக்கிறது.

இது முடியாது… அடங்காது போலவே….

ரஜினி-அஜித்-சூர்யா வழியில் சிம்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

ரஜினி-அஜித்-சூர்யா வழியில் சிம்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu's AAA Songs Updatesவாலு, இது நம்ம ஆளு படங்களின் வெற்றிகளை தொடர்ந்து தனது புது படங்களில் அதிக கவனத்துடன் நடித்து வருகிறார் சிம்பு.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் ஒன்பது பாடல்கள் இடம் பெறவுள்ளதால் அதற்காக விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார் யுவன்.

இதில் சிம்புக்கு 3 வேடங்கள் உள்ளது. அதில் ஒன்று கொடூரமான வில்லன் வேடம் என கூறப்படுகிறது.

அந்த கேரக்டருக்கும் ஒரு பாடல் இருப்பதால், அப்பாடலை யுவன் கொடுத்துவிட்டாராம்.

இப்பாடல் மிகவும் பிடித்துள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிம்பு.

சமீபகாலமாக ரஜினி, அஜித், சூர்யா உள்ளிட்டோர் வில்லன் வேடம் ஏற்று கலக்கி வருகின்றனர். விரைவில் சிம்புவும் இதில் இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

செல்வராகவனின் உதவியாளருடன் இணைந்த ஜீவா-நிக்கி..!

செல்வராகவனின் உதவியாளருடன் இணைந்த ஜீவா-நிக்கி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jiiva and Nikki galrani to Team up in their Titled Kiஜீவா நடிப்பில் திருநாள், சங்கிலி புங்கிலி கதவ தொற மற்றும் கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டு தயாராகி வருகிறது.

எனவே தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டாராம் ஜீவா.

செல்வராகவனின் உதவியாளர் காளீஸ் இயக்கவுள்ள இப்படத்திற்கு கீ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது நவீன எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்பங்களை பற்றிய படம் என்றாலும் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது என்கின்றனர்.

நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் நடிக்கிறாராம்.

டைட்டில்தான் ‘எங்கிட்ட மோதாதே’… ஆனா கபாலியை நினைச்சா பயம்..!

டைட்டில்தான் ‘எங்கிட்ட மோதாதே’… ஆனா கபாலியை நினைச்சா பயம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Natraj Talks About his Film with Nivin Pauly and Enkitta Mothathe Releaseபிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்ற நடராஜ் நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் ஒளிப்பதிவு செய்த தெலுங்கு படமான அ..ஆ.. என்ற படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தன் மற்ற படங்கள் குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“தற்போது சண்டா மரியா என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலியுடன் நடித்து வருகிறேன்.

தற்போது திருச்செந்தூரில் இதன் சூட்டிங் நடந்து வருகிறது. ஜீலை 15ஆம் தேதி நான் கலந்து கொள்வேன்.

இதனையடுத்து நான் நடித்துள்ள எங்கிட்ட மோதாதே படம் வெளியீட்டு தயாராகியுள்ளது.

ஆனால் தற்போது கபாலி அலை வீசிவருவதால் எங்கள் படத்தை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.”

என்று தெரிவித்துள்ளார்.

தள்ளிப் போகும் கபாலி.. கிடைத்த கேப்பில் நுழையும் சந்தானம்..!

தள்ளிப் போகும் கபாலி.. கிடைத்த கேப்பில் நுழையும் சந்தானம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam 's Dhilluku Dhuddu confirmed for July 7ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் படம் கபாலி.

இப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தை வெளியிட தாணு மும்முரமாக பணியாற்றி வருகிறார்.

ஜூலை 15ஆம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டை 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு ஜூலை 15-ம் தேதி வெளியீடு இல்லை என்று தகவல் அனுப்பப்பட்டு விட்டதாம்.

இதனிடையில் ஜூலை 7ஆம் தேதி சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில படங்களும் இதே நாளில் வெளியானாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லாம் கபாலி மயம்… கபாலிடா…

More Articles
Follows