தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள படம் ‘மதிமாறன்’. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்எஸ் பாஸ்கர் பேசியதாவது…
“இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத் தான் நிறைய இடத்தில் டயலாக் பேசினேன்.
என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக்கேட்டுக்கொண்டே இருப்பார் அவ்வளவு ஆர்வம்.
உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான்.
அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார் என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார் இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர் சுதர்ஷன் பேசியதாவது…
மதிமாறன் மிக அர்ப்பணிப்பான நடிகர் அருமையாக நடித்துள்ளார். நான் இந்தப்படத்தில் ஒரு போலீஸ் பாத்திரம் நடித்துள்ளேன். வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் பிரவீன் குமார் பேசியதாவது…
8 வருட நட்பு, நாளைய இயக்குநர் குறும்படம் பார்த்து எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் மந்திர பாண்டியன். பாலா சார் படத்தில் வாய்ப்பு தந்தார் ஆனால் அதில் நடிக்க முடியவில்லை. மீண்டும் இந்தப்படத்தில் வாய்ப்பு தந்தார் என்றென்றும் நன்றிகள். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…
இயக்குநர் தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். இயக்குநர் மந்திரா மிகத்திறமையானவர். அவர் திறமை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது அவரிடம் நிறையக் கதைகள் பேசியுள்ளேன். அவர் கண்டிப்பாக நல்ல படம் செய்திருப்பார். தயாரிப்பாளர் நவீன் என் நண்பர். இந்தப்படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்கள். எம் எஸ் பாஸ்கர் சமீப காலங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இருந்தாலே படம் நன்றாக இருக்கும்.
கதாபாத்திரங்கள் மீது தான் இந்தப்படம் பயணிக்கிறது. இந்தப்படமும் சிறப்பாக இருக்கும். எப்போதுமே ஒரு கதைக்காகச் செலவு செய்ய வேண்டும் ஹீரோவுக்காக செலவு செய்யக்கூடாது அப்போது தான் படம் சிறப்பாக வரும்.
தமிழ்த்திரை இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் தான் இன்றைய நாயகன். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
MS Baskar emotional about his cinema carrier at Madhimaaran event