விஜய்சேதுபதியை போல் மாற்றிக் காட்டிய விக்ரம்பிரபு

vijay sethupathi and vikram prabhuவிஜய்சேதுபதி நடிப்பில் உருவான மெல்லிசை படத்தின் தலைப்பை புரியாத புதிர் என்று மாற்றிவிட்டனர்.

இப்படம் 2017 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தற்போது இதுபோன்று பெயர் மாற்றத்துடன் மற்றொரு படம் உருவாகி வருகிறது.

வீரசிவாஜி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘முடிசூடா மன்னன்’.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் தலைப்பை தற்போது சத்ரியன் என்று மாற்றி பெயரிட்டுள்ளனர்.

இதே பெயரில் மணிரத்னம் கதை, திரைக்கதை அமைப்பில், மறைந்த கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘சத்ரியன்’.

விஜயகாந்த் நடித்த இப்படம் 1990ல் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது.

சத்ரியனை தயாரித்த ஆலயம் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்றுதான் இப்படத்தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி…
...Read More
எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு…
...Read More
எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு.…
...Read More

Latest Post