தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது வசீகர குரலால் இசை ப்ரியர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி.
35 வயதாகும் இவர் சிறந்த வீணை கலைஞர் ஆவார்.
‘பாகுபலி’, வீரசிவாஜி, தெறி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ள இவர் பிறவிலேயே பார்வை இல்லாதவர்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிச. 13ஆம் தேதி இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற இசைக் கலைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இந்த மார்ச் 29-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, 2017 ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை செய்து கண் பார்வை பெற்றார்.
இந்த மகிழ்ச்சி நீடித்த சில நாட்களிலேயே இவரின் திருமணம் ரத்து என்ற செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் நடந்த கின்னஸ் சாதனை போட்டியில் தொடர்ந்து 5 மணி நேரம் காயத்ரி வீணையில் 67 பாடல்களை வாசித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் 51 பாடல்களை வீணையில் இசைத்தது சாதனையாக இருந்தது.
இவர் வைத்திருக்கும் காயத்ரி வீணையை அதிக அளவில் யாரும் வைத்திருப்பதும் இல்லை, வாசிப்பது இல்லை.
இந்த காயத்ரி வீணை ஒற்றை கம்பி மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Play back Singer Vaikom Vijayalakshmi sets new world record