தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சனி மற்றும் ஞாயிற்றுகிழமையோடு விடுமுறை தினங்கள் சேர்ந்து விட்டால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல நடிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.
அந்த வாரத்தில் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வசூல் ஈட்ட காத்திருப்பார்கள்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதியோடு சுதந்திர தின விடுமுறையும் வருவதால் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.
விக்ரம்பிரபுவின் வாகா, விஜய் சேதுபதியின் தர்மதுரை, ராஜீமுருகனின் ஜோக்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளன.
இத்துடன் தனுஷின் தொடரியும் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் என்ன காரணத்தினோலோ தற்போது தொடரி படத்தை ஆகஸ்ட் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டனர்.