தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள படம் காளி.
பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த வாரம் மே 18ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இதில் அம்ரிதாவுடன் மட்டும் நெருக்கமாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.
அது ஏன் என்பது பற்றி அவரே கூறியதாவது…
நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் குறை சொன்னார்கள்.
இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது.
ஆனால் இப்போது அதை மாற்றி, கொஞ்சம் ரொமான்ஸ் செய்துள்ளேன்.
அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும்” என்றார்.
அதுபோல் அம்ரிதா பேசும்போது… விஜய் ஆண்டனி ரொம்ப அமைதி. அதிகமாக பேச மாட்டார்.
ஒரு பாடல் காட்சியில் நாங்கள் இருவரும் நெருக்கமாக நடிக்க வேண்டும் என நடன இயக்குனர் சொன்னார். எனவே அப்படி நடித்துள்ளோம்.” என்றார்.