தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தனது மனைவி பாத்திமா தயாரிப்பில் நாயகனாக நடித்துள்ள படம் காளி.
இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, அஞ்சலியுடன் 3 நாயகிகள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் காளி படத்துக்கு தடை விதிக்கக்கோரி பிச்சர் பாக்ஸ் நிறுவன உரிமையாளர் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் விஜய் ஆண்டனி தயாரித்த அண்ணாதுரை படத்தை வெளியிட்டதன் மூலம் தனக்கு 4 கோடியே 73 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் தராமல், காளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் காளி படத்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆதிகேசவலு ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் 2 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்த உத்தரவிட்டு, படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.
இப்படத்தை வெளியிடுவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீக்குவதாகவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
எனவே சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் காளி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Madras HC vacates interim stay on film Vijay Antonys Kaali