சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி உடன் டூயட் பாடும் ஷில்பா

சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி உடன் டூயட் பாடும் ஷில்பா

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார்.

‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

Actress Shilpa Manjunath joins the cast of Natty’s psycho thriller.

JUST IN தல-தளபதி திடீர் மீட்டிங்..; சந்திப்பின் பின்னணி இதுதானா.?

JUST IN தல-தளபதி திடீர் மீட்டிங்..; சந்திப்பின் பின்னணி இதுதானா.?

சினிமாவில் தளபதி என்றால் அது விஜய். தல என்றால் அஜித்.

அதுபோல் அரசியலில் தளபதி என்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்.

கிரிக்கெட்டில் தல என்றால் மஹேந்திர சிங் தோனி தான்.

இந்த நிலையில் கிரிக்கெட் தல தோனியும் சினிமா தளபதி விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் சந்தித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ பட சூட்டிங்கில் விஜய்யும் CSK கிரிக்கெட் விளம்பரத்தில் தோனியும் கலந்துக் கொண்டுள்ளனர்.

அப்போது இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Reason behind Thalapathy Vijay and Thala Dhoni recent meet

ரஜினிகாந்த் பட சூட்டிங் நிறுத்தம்..; கீர்த்தி சுரேஷ் ஜோடியாக அஜித் தம்பி..?

ரஜினிகாந்த் பட சூட்டிங் நிறுத்தம்..; கீர்த்தி சுரேஷ் ஜோடியாக அஜித் தம்பி..?

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, பாலா என நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சிவா இந்த படத்தை இயக்க இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

“சூப்பர்ஸ்டார் ரஜினி போன்ற ஜாம்பவானுடன் இணைந்து நடிப்பது பெருமை. அண்ணாத்த படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார் பாலா.

வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தார் பாலா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சூட்டிங் நடந்து வருகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி இருப்பார் என ரசிகர்கள் அங்கு அதிகளவில் திரண்டுள்ளனர். ஆனால் அங்கே பிரகாஷ் ராஜ் காட்சிகளை படமாக்கினாராம் சிவா.

முறையாக அரசு அனுமதி பெற்று சூட்டிங் நடத்தினாலும் ரஜினிக்காக கூட்டம் அதிகளவில் கூடியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாம்.

Ajith’s brother to romance Keerthy Suresh in Annaatthe

விஜய் படத்தில் தனுஷுக்கு பதிலாக சிவகார்த்திகேயன்..; ட்விஸ்ட் வைக்கும் ‘பீஸ்ட்’

விஜய் படத்தில் தனுஷுக்கு பதிலாக சிவகார்த்திகேயன்..; ட்விஸ்ட் வைக்கும் ‘பீஸ்ட்’

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தம் ஆனார்.

மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறாராம்.

இந்த நிலையில்தான் இந்த படத்தில் பாடல் பாடவோ அல்லது பாடல் எழுதவோ தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதோடு, அதை பாடவும் உள்ளார் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பல பாடல்கள் பாடி அவை ஹிட்டாகியுள்ளன.

நிறைய படங்களை தனுஷ் கைவசம் வைத்திருப்பதால் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan gets a chance to work in Beast ?

அருண் விஜய் டூ விஜய் படம்..: 600 கிமீ விரைந்து சென்று அசத்திய நடிகர்

அருண் விஜய் டூ விஜய் படம்..: 600 கிமீ விரைந்து சென்று அசத்திய நடிகர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ’பீஸ்ட்’.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரித்து வருகிறது.

விஜய்யுடன் பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், ‘குக் வித் கோமாளி ‘புகழ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்பட முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. தற்போது சென்னையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஹரி – அருண் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபு அடுத்த நாள் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள சுமார் 600 கிலோமீட்டர் விடிய விடிய பயணம் செய்துள்ளார்.

இவ்வளவு தூரம் வந்தாலும் ஓய்வே எடுக்காமல் காலையில் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் யோகிபாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Yogi Babu’s dedication for his new film

சிம்பு படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி படத்தலைப்பும் மாற்றம்

சிம்பு படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி படத்தலைப்பும் மாற்றம்

விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ’அனபெல் சுப்பிரமணியம்.

இப்படத்தை தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார். இவர் பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் நீளம் கருதி மூன்று பாகங்களாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை ’அனபெல் சேதுபதி’ என்று மாற்றவிருப்கிறார்களாம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என நம்பலாம்.

அண்மையில் சிம்பு நடித்து வரும் படத்தின் பெயரை ‘வெந்து தணிந்தது காடு’ என மாற்றியுள்ளனர் (பழைய பெயர் : நதிகளிலே நீராடும் சூரியன்) என்பது குறிப்பிடத்தக்கது.

After simbu now Vijay Sethupathi changes his movie title

More Articles
Follows