என் கேரியரில் ‘ரத்தம்’ வித்தியாசமானது.. 100% திருப்தி… – விஜய் ஆண்டனி

என் கேரியரில் ‘ரத்தம்’ வித்தியாசமானது.. 100% திருப்தி… – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றியை தரக்கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கதாநாயகனாக விஜய் ஆண்டனி உள்ளார்.

அவருடைய இந்த வெற்றி, அடுத்து வரும் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது வர்த்தக வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள அவரது ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

சி.எஸ்.அமுதனின் முந்தைய படங்களான ‘தமிழ்ப் படம்’ மற்றும் ‘தமிழ்ப் படம் 2’ ஆகியவற்றை பார்த்து சிரித்து மகிழ்ந்த ரசிகர்களுக்கு ‘ரத்தம்’ நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். முற்றிலும் வேறுபட்ட ஜானரில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தில் பயணித்து இருக்கிறார்.

படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது…

“சி.எஸ்.அமுதனின் திறமை குறித்து எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமானவர் என்றாலும், வெவ்வேறு ஜானர்களில் கதையை படமாக்குவதிலும் அவர் திறமையானவர்.

‘ரத்தம்’ படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு உடனே பிடித்துப் போனது மற்றும் ​​அந்தக் கதையை காட்சிப் படுத்துவதும் மிகவும் எளிதாக இருந்தது. என் கேரியரில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

மேலும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கும் போது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” என்றார்.

இந்த படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் பற்றி விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில்…

“இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முழு கதையும் அவர்களால் தான் நகரும். தீவிரமான அர்ப்பணிப்புடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட படத்திற்கு வலு சேர்க்கும். ‘ரத்தம்’ படம் பார்த்து விட்டு பார்வையாளர்கள் திரையரங்குகளை விட்டு வெளியே வரும்போது நிச்சயம் அவர்களுக்கு 100% திருப்தியைத் தரும்” என்றார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்திருக்க, ‘ரத்தம்’ படத்தை சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கியுள்ளார்.

கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை டி.எஸ். சுரேஷ் கையாண்டுள்ளார்கள்.

ரத்தம்

Vijayantonys 100% confidence on Raththam movie

‘ஜவான்’ ரெக்கார்ட் : 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் ஹிந்திப்படம்

‘ஜவான்’ ரெக்கார்ட் : 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் ஹிந்திப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜவான்’ படம் அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல, 25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படமாகும், மேலும் நான்காவது வாரத்தில் படம் இன்னும் வசூலில் நிலையான சாதனை படைத்து வருகிறது.

ஜவான் இந்தியில் 547.79 கோடிகள் மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 607.21 கோடிகளை ஈட்டியுள்ளது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், படம் 1000 கோடிகளை வசூலித்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து, உலகம் முழுவதுமாக 1043.21 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது.

இந்த மகத்தான சாதனைகள் அனைத்தும் வெறும் 25 நாட்களில் முறியடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த இந்திப் படமாக மாறியுள்ளது.

மேலும் அவர் ஏற்கெனவே செய்த சாதனைகளை முறியடித்து, திரைத்துறை வசூல் வரையறைகளை மாற்றி அமைத்ததன் மூலம் மீண்டும் சரித்திரம் படைத்திருக்கிறார்.

‘ஜவான்’ படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

புதிய பட வெளியீடுகளால் ஜவானின் வசூல் பாதிக்கப்படவேயில்லை, மேலும் நான்காவது வாரத்தில் கூட ரசிகர்கள் கூட்டமாக படத்தை ரசிக்கிறார்கள் மற்றும் அதைப் பாராட்டுகிறார்கள் என்பது இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

NEW ACHIEVEMENT UNLOCKED Shah Rukh innaugrates the Rs 600cr Club

தாய் – மகன் பாசத்தில் ‘ஆராராரி ராரோ..’ பாட்டு.; ‘ஜவான்’ ரசிகர்கள் ஜாலீ

தாய் – மகன் பாசத்தில் ‘ஆராராரி ராரோ..’ பாட்டு.; ‘ஜவான்’ ரசிகர்கள் ஜாலீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜவான்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘ஆராராரி ராரோ’ இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

தீப்தி சுரேஷின் அழகான குரலில் இந்த வீடியோ, தீபிகா படுகோன் மற்றும் இளம் ஆசாத் ஆகியோரின் அற்புதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.

‘ஆராராரி ராரோ’ வெறும் பாடல் அல்ல; இது ஒரு தாய் மற்றும் அவரது மகனுக்கு இடையே இருக்கும் ஒப்பற்ற பாசத்தின் அன்பின் வெளிப்பாடு. இந்த மியூசிக் வீடியோ இந்த புனிதமான உறவினை அதனுடன் வரும் தியாகங்கள் மற்றும் உணர்ச்சிகளை, ஆழமாக காட்சிப்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோன், அர்ப்பணிப்புள்ள தாயின் பாத்திரத்தை தன் அசாத்திய நடிப்பில், திரையில் உயிர்ப்பித்துள்ளார். மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோன் பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறார்.

இந்தப்பாடல் உலகம் முழுதும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

The highly anticipated music video for Aararaari Raaro from Jawan

‘விஜய் 68’ இல் இணையும் பிரசாந்த் – பிரபுதேவா – மோகன் – ஜெயராம்.?

‘விஜய் 68’ இல் இணையும் பிரசாந்த் – பிரபுதேவா – மோகன் – ஜெயராம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில் விஜய் 68 படத்தில் பூஜை தொடங்கியது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க விஜய் நாயகனாக நடிக்கிறார்.

விஜய் நடிக்கும் பாடல் காட்சியுடன் படம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது

நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க முக்கிய வேடங்களில் லைலா மற்றும் சினேகா நடிக்கின்றனர்.

இவர்களுடன் டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோரும் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இத்துடன் மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோரும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் பிரபல நட்சத்திரங்களும் விஜய் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே வாரிசு படத்தில் விஜய்யுடன் மோகன் இணைந்து நடிக்கிறார் என கூறப்பட்டது. பின்னர் அது வதந்தியானது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Prashanth Prabudeva Jayaram and Mohan on board Vijay 68

லைக்கா – அனிருத் கூட்டணியில் ‘தலைவர் 170’.; ரஜினியுடன் இணைந்த 3 அழகிய ஹீரோயின்ஸ்

லைக்கா – அனிருத் கூட்டணியில் ‘தலைவர் 170’.; ரஜினியுடன் இணைந்த 3 அழகிய ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகி திரைக்கு வரவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பற்றிய அறிவிப்பை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இதனையடுத்து இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் & ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ரஜினியுடன் இணைவது குறித்து மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

Manju Warrier Ritika Singh Dushara Vijayan on board Rajini 170

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி.; சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி.; சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘மாமன்னன்’.

இந்த படத்தில் பகத்பாஸில் மற்றும் வடிவேல் ஆகியோரது கேரக்டர்கள் பாராட்டும் வகையில் இருந்தன.

இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தாலும் பகத்தின் வில்லன் கேரக்டர் பெருமளவில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் தான் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Fahad Faazil and Vadivelu teams up again

More Articles
Follows