விமர்சகருக்கு பொறுப்பு வேண்டும்; ப்ளு சட்டை மீது காளி டைரக்டர் கிருத்திகா கடுப்பு

விமர்சகருக்கு பொறுப்பு வேண்டும்; ப்ளு சட்டை மீது காளி டைரக்டர் கிருத்திகா கடுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaaliவிஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான படம் காளி.

இப்படத்தை பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர்.

ப்ளு சட்டை மாறன் என்பவரும் வழக்கம்போல விமர்சனம் செய்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் கிருத்திகா விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு படத்துக்கு விமர்சனம் என்பது முக்கியம் ஆனால் படத்தை நன்கு ஆராய்ந்து இது நல்ல இருந்தது,

இது ஒர்கவுட் ஆகவில்லை என்று சூட்டிக்காட்டினால் தானே எங்களுக்கு தெரியும், காளி படத்தில் மூன்று கதையிலும் ஒரு விஷயத்தை கனெக்ட் செய்கிற மாதிரி வைத்திருப்பேன்.

இதுபற்றி எந்த விமர்சகரும் கூறவில்லை, இடது கை உடையவர் பற்்ற்்றி

சொல்ருப்பேன்,

பார்வதி என்ற ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லிருப்பேன், டின்ஏ பற்றி சொல்லிருப்பேன் என பல விஷயங்கள் உள்ளது.

விமர்சனம் பண்ணும்போது ஒரு பொறுப்பு வேண்டும்.

உங்கள் விமர்சனம் எல்லாம் ஒரே மாதிரி உள்ளது என்று தனது வருத்தத்தை கிருத்திகா தெரிவித்துள்ளார்.

Breaking: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; போலீசுக்கு ரஜினி கடும் கண்டனம்

Breaking: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; போலீசுக்கு ரஜினி கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று 100வது நாளில் கலவரமாகி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

போலீஸின் இந்த வன்முறையை கண்டிக்கும் வகையில் ரஜினிகாந்த் வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த சம்பவம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியம், உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது..

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல்…” என பேசியுள்ளார்.

Breaking: உயிரிழப்புக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்…; கண்கலங்கிய கமல்

Breaking: உயிரிழப்புக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்…; கண்கலங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan demands sterlite industry to be shutதூத்துக்குடி மாவட்ட மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 100 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று 100வது நாள் போராட்டத்தில் இது பெரும் கலவரமானது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்.

அவர்களை கண்டதும் கமலும் கண் கலங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது…

இந்த துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? என்று இதுவரை தெரியவில்லை. முதலில் அதை தெரியப்படுத்தியாக வேண்டும்.

உயிரிழந்தவர்களுக்கு பேரம் பேசி பயனில்லை. அவர்களின் உயிரிழப்புக்கு மாற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான்.

மேலும் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது நடுநிலையான மருத்துவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும்.

இதை இப்படியே விட்டு விட்டு போக முயாது.” என கண் கலங்கிய படியே கமல் பேசினார்.

குழந்தைகள் போராடும் அவலநிலை; தமிழகம் குப்பைத் தொட்டியா..? சூடான சூர்யா

குழந்தைகள் போராடும் அவலநிலை; தமிழகம் குப்பைத் தொட்டியா..? சூடான சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaதூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது.

இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது…

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது.

பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான் மக்களுக்கு முன்னிறுக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

மஹாராஷ்டிரா நிராகரித்த ஆலை

தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக்கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலப் போராட்டம்.

மக்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

“ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்” என்று மகாராஷ்டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.

சின்ன குழந்தைகள்கூட ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூட போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது.

மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

குப்பைத்தொட்டியா தமிழகம்?

2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது.

தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன.

நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடியின் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிற ‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ’நியூட்ரினோ திட்டம்’ என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படையில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள்.

தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக்கூடைக்குள் தூக்கி எறிவதைப்போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்’என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் போராட்டங்களை “பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை” என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்?

மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?

அரசு என்ன சொல்கிறது? ‘‘வேலைவாய்ப்பு தருகிறோம்” என்கிறது. ‘‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம்.

உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.

அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?

மக்களுக்கு மதிப்பளியுங்கள்

ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது.

ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத்தைக் குலைக்கின்றன.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம்.

‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’என்பது சாத்தான் ஓதும் வேதம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!”

என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சூர்யா.

சாமி ஸ்கொயர் படத்திற்காக காத்திருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் ரசிகர்கள்

சாமி ஸ்கொயர் படத்திற்காக காத்திருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vikramஇந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

இவரது இசை ப்ரியர்கள் இவரை டிஎஸ்பி என்று அன்பாக அழைத்து வருகின்றனர்.

இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்துள்ளார்.

சீயான் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

விக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்

சமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul and Naniநாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ வேலன் எட்டுத்திக்கும்“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வேலன் எட்டு திக்கும் என்ன மாதிரியான படம்..

இன்று ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ் நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பது கதை.

இதில் ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகனை பரவசப் படுத்தும் .

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

பாடல்கள் – கானாபாலா, கவிதா தண்டபாணி

எடிட்டிங் – எஸ்.என்.பாசில்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் பி.சமுத்திரக்கனி

More Articles
Follows