தம் அடிக்கும் இந்து கடவுள் காளி : Arrest Leena Manimekalai.; பெண் இயக்குனருக்கு எதிர்ப்பு

தம் அடிக்கும் இந்து கடவுள் காளி : Arrest Leena Manimekalai.; பெண் இயக்குனருக்கு எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்து கடவுளான காளிதேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு, ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் எழுத்தாளரும் பெண் இயக்குனருமான லீனா மணிமேகலை.

‘செங்கடல், மாடத்தி’ ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது ‘காளி’ என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை இயக்கி, அவரே காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா.

அதில் ‘காளி’ தோற்றத்தில் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே நெட்டிசன்கள்
‘ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

குறும்படமோ, பெரும் படமோ இல்லை ஆவணப்படமோ எதுவாக இருந்தாலும் சரி பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கடவுள்களை ஏன் இப்படி சித்தரிக்க வேண்டும் என்பதே தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

சினிமா காட்சிகளுக்கு சென்சார் இருப்பது போன்று போஸ்டர் டிசைன்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டுமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே நாட்டில் மதத்தை வைத்து நிறைய சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்று போஸ்டரை வெளியிட்டு இன்னும் பல சர்ச்சைக்கு வழிவகுக்கலாமா என இந்து மதத்தவர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arrest Leena Manimekalai.; Opposition to female director

‘வாரிசு’ இல்லாமல் எஸ்ஏசி பிறந்தநாள் கொண்டாட்டம்.; வாரிசு எங்கே தெரியுமா.?

‘வாரிசு’ இல்லாமல் எஸ்ஏசி பிறந்தநாள் கொண்டாட்டம்.; வாரிசு எங்கே தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலை 2ஆம் தேதி நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவர் தனியாக வீட்டில் மனைவி ஷோபா உடன் கொண்டாடினார். அந்த ஸ்டில் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அதை பார்த்த நெட்டிசன்கள் உங்க வாரிசு விஜய் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சிலர்.. முதுமையில் தனிமை.. கொடுமை எனவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார்.

எனவே தான் அப்பா பிறந்தநாள் விழாவுக்கு கூட விஜய் வரவில்லையாம்.

வாரிசு படம் அப்பா – மகன் சென்டிமென்டை மையப்படுத்தி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் விஜய் உடன் ராஷ்மிகா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கிறார்.

தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

SAC celebrates his birthday without his son Vijay

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணிக்காக ஓடிடி-யில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம்

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணிக்காக ஓடிடி-யில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் இணைய தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’.

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி ஏற்கெனவே ‘குற்றம் 23’ படத்திற்காக இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் சோனிலிவ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

பைரஸி சைபர் க்ரைமுக்கு பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராக உருவாகியுள்ளது.

யானை விமர்சனம் 3.25/5.. ஹரி டெம்ப்ளேட்டில் அருண் விஜய்

ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் அருணா குகன் கூறுகையில்…

”எங்களின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரொடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால் பதிக்கிறது.

சைபர் க்ரைம், பைரஸி பொழுதுபோக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்ட இருந்தோம்.

இயக்குநர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது.

அருண் விஜய் இத்தொடரில் நடித்தது இத்தொடருக்கு மிகப்பெரும் பலம்.” என்றார்.

Arun Vijay – Arivazhagan joins for AVM

‘இரவின் நிழல்’ படத்திற்கு உலக அங்கீகாரம்.; இப்படியொரு படமா.? பார்த்திபனை பாராட்டும் பிரபலங்கள்

‘இரவின் நிழல்’ படத்திற்கு உலக அங்கீகாரம்.; இப்படியொரு படமா.? பார்த்திபனை பாராட்டும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பார்த்திபன் அவர்கள் தனது முதல் படமான “புதிய பாதை” தொடங்கியது முதல் கடைசியாக வெளியான “ஒத்த செருப்பு” வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார்.

ஒத்த செருப்பு 2019 ற்கான தேசிய விருது உட்பட பல உலக விருதுகளை பெற்றது.

தனது முத்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன் , தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.

உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றிப் பெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் இரண்டு சர்வ தேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது.

இதுவரை இரவின் நிழல் திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்ட திரைப் பிரபலங்கள் இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை வாழ்நாளில் கண்டதில்லை என நெகிழ்ந்து ஆச்சர்யப்பட்டு பாராட்டுகின்றனர்.

சர்வதேச விருதுகள் கிடைத்ததில் பார்த்திபனுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஜூலை 15 வெளிவர இருக்கும் “இரவின் நிழலுக்கு திரையரங்கிற்கு ரசிகர்கள் வந்து கைதட்டல் + விசிலுடன் தரப் போகும் பெரு வெற்றியே தனக்கான பெரிய விருது – என காத்திருக்கிறார் உலக சினிமாவை தமிழ் சினிமா நோக்கி திருப்பிய இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

World recognition for Partiban’s Iravin Nizhal

கண்டிப்பா பாருங்க.; மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு ரஜினி பாராட்டு

கண்டிப்பா பாருங்க.; மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’.

இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்கினார்.

அவர் விலகவே இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்தார்.

இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாடே போற்றும் விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

சில மாதங்களுக்கு பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் நம்பி.

குற்றம் சுமத்தப்பட்ட காலத்தில் சிறையில் இருந்தார்.

அப்போது பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன்.

அவரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம்.

ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் தமிழில் நடிகர் சூர்யாவும், இந்தியில் நடிகர் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.

நம் FILMISTREET தளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

இந்த நிலையில் ராக்கெட்டு திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.

பத்மபூஷன் திரு நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மிக தத்ரூபமாக இயக்கி தானும் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இணைய தன்னை நிரூபித்திருக்கிறார் மாதவன்.

இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth praises ‘Rocketry’ directed by Madhavan

Rajinikanth

‘மெய்ப்பட செய்’ படம் ரிலீசானால் குற்றங்கள் குறையும்.; தமிழ் செல்வம் நம்பிக்கை

‘மெய்ப்பட செய்’ படம் ரிலீசானால் குற்றங்கள் குறையும்.; தமிழ் செல்வம் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக புதுமுகம் மதுனிகா நடித்துள்ளார்.

இவர்களுடன் ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜயகணேஷ், தவசி, அட்டு முத்து, சிவா, ராஜமூர்த்தி, எமில் கணபதி, அனிஷ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் இப்படம் பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வழியையும் சொல்லியிருக்கிறது.

தற்போது சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான மெசஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி யு/ஆ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து படத்தை வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக ‘மெய்ப்பட செய்’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ் செல்வம், “’மெய்ப்பட செய்’ உண்மையை செய் என்று அர்த்தம். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகத்தான் இந்த படம் இருக்கும்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் பல இடங்களில் பல வகையில் பெண்கள் பாலியல் துன்பங்களுக்கு ஆளாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இது ஏன்? என்ற கேள்வியை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட ரீதியாக சரியான நியாயம் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் சரியான தண்டனை கிடைப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகிறது.

‘மெய்ப்பட செய்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் சொல்லப்படவில்லை. இந்த படம் வெளியானால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் குறையும்.

பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதோடு அந்த தண்டனை எப்படி இருக்க வேண்டும், என்பதையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இது நான் தயாரித்த முதல் படம், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என அனைவருக்கும் முதல் படம். இருந்தாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்துள்ளோம்.

அதே சமயம், பாடல்கள், நகைச்சுவை, காதல் காட்சிகள் என கமர்ஷியலாகவும் படம் இருக்கும். பாலியல் குற்றங்களை மையப்படுத்திய கதை என்பதால் முகம் சுழிக்கும்படியான எந்தவித காட்சிகளும் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்க கூடிய நல்ல மெசஜ் சொல்லும் படமாக இருக்கும்.

இந்த படத்தை தயாரித்து முடித்து வெளியீட்டு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், புதுமுகங்கள் என்று பல இடங்களில் புறக்கணிக்கிறார்கள். பெரிய நடிகர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது பெரிய நடிகர்களாக இருப்பவர்களும் ஒரு காலத்தில் ஒரு படத்தில் புதுமுகங்களாக நடித்தவர்கள் தானே.

எனவே, படத்தின் கதை மற்றும் மேக்கிங்கை பாருங்கள், நடிகர்களை பார்க்காதீர்கள் என்று நான் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இன்று ஒடிடி-க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூட இப்போது பெரிய நடிகர்கள் உள்ள படங்களை மட்டும் தான் வாங்குகிறார்கள். இதனால் சினிமாவுக்கு புதிய தயாரிப்பாளர்கள் வருவது பாதிக்கப்படும். எங்கள் படத்தை என் நண்பர்கள் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும். படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும்.” என்றார்.

இசையமைப்பாளர் பரணி பேசுகையில்…

“’மெய்ப்பட செய்’ நல்ல கருத்து சொல்லும் கமர்ஷியல் படம். மக்களை ரசிக்க வைப்பதோடு அவர்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லும் படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படமும் அந்த வகையில் வெற்றி பெறும். படத்தின் பாடல்களோடு பின்னணி இசைக்காகவும் நிறைய நாட்கள் பணியாற்றியிருக்கிறேன்.

காரணம், படத்தின் காட்சிகள் அந்த அளவுக்கு மிக அழுத்தமாக இருந்தது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் வேலன் பேசுகையில்,…

“தயாரிப்பாளர் தமிழ் செல்வம் சார் அனைத்தையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது போல் தைரியமாக மனதில் பட்டதை செய்வதுதான் மெய்ப்பட செய். இந்த படத்தில் மிக முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறோம்.

அந்த விஷயம் நடந்தால் நாட்டில் நிச்சயம் தவறு நடக்காது. படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.

கதாநாயகன் ஆதவ் பாலாஜி பேசுகையில்…

“இந்த படம் எனக்கு முதல் படம். படத்தை பற்றி இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லிவிட்டார். நான் சொல்லப் போவது, அறிமுக நடிகர்களின் படம் என்று புறக்கணிக்கிறார்கள். அது ரொம்பவே வருத்தம் அளிக்கிறது.

இந்த படத்திற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அந்த உழைப்பை பார்க்காமல், நடிகர்களை வைத்து புறக்கணிப்பது சரியில்லை. படத்தை பாருங்கள் பிறகு சொல்லுங்கள்.” என்றார்.

கதாநாயகி மதுனிகா பேசுகையில்…

“இந்த கதை ரொம்பவே இண்டன்ஷாக இருந்தது. இதை இயக்குநர் என்னிடம் சொன்ன போது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என்றார்.

இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அனைத்து பெண்களுக்கும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். அதனால், இந்த படம் அனைவரையும் கனெக்ட் செய்யும்.” என்றார்.

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இருந்த பெண்கள் படம் எங்களை கனெக்ட் செய்கிறது, என்று கூறி பாராட்டியதோடு படத்தில் சொல்லப்பட்ட விஷயம் தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக முக்கியமானது என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘மெய்ப்பட செய்’ படத்தை இவானியா பிக்சர்ஸ் மற்றும் ஃபிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அபிலாஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

The release of the film ‘Meipada Se’ will reduce crimes

More Articles
Follows