JUST IN நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை.; காரணம் இதுதான்.!

JUST IN நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை.; காரணம் இதுதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நடிகர் இயக்குனர் எடிட்டர் பாடகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளால் அறியப்பட்டவர் இவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘பிச்சைக்காரன் 2’ பட சூட்டிங்கில் கலந்து கொண்ட போது பெரும் விபத்தில் சிக்கி இருந்தார்.

‘என் கணவர் கதை முடிந்து விட்டது என்று நானே நினைத்தேன்..’ என விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா தெரிவித்திருந்தார்.

விஜய் ஆண்டனி மகள்

ஆனால் மக்கள் அன்பினால் கடவுள் அருளால் அவர் மீண்டு வந்து விட்டார் எனது தெரிவித்து இருந்தார்.

தற்போது முன்பை விட விஜய் ஆண்டனி கலகலப்பாக நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று வருகிறார்.

கணவரை மீட்ட சந்தோஷத்தில் இருக்கும் பாத்திமா இன்று தன் மூத்த மகளை இழந்துள்ளார்.

இன்று செப்டம்பர் 19ஆம் தேதி விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் விவரம் வருமாறு…

நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவேரி மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.

Meera/16
D/o Vijay Antony

இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் ஆவார்.
மேற்படி இறந்த சிறுமி, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாகவும், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கி உள்ளார்.

இதை பார்த்து வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதன் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

மீராவின் உடல் ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 12 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து தருவதாக தகவல் வந்துள்ளது.

விஜய்ஆண்டனி – பாத்திமா தம்பதிக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளனர். தற்போது அவர் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

கூடுதல் தகவல்…

சென்னை காவேரி மருத்துவமனையில் மனம் அழுத்தம் தொடர்பாக கடந்த ஆறு மாதமாக மீரா சிகிச்சை பெற்று வந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Vijayantonys daughter meera suicide

7130 அடி உயர மலைவாழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் ‘எவனும் புத்தனில்லை’

7130 அடி உயர மலைவாழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் ‘எவனும் புத்தனில்லை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் (V Cinema Global நெட்ஒர்க்ஸ்) பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் ” எவனும் புத்தனில்லை ”

கதை, திரைக்கதை எழுதி எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ளார்.

நபி நந்தி, சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக சுவாசிகா நடித்துள்ளார், கெளரவ வேடத்தில் சினேகன் & பூனம் கவுர் நடித்துள்ளார்.

எவனும் புத்தனில்லை

மற்றும் வேல.ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜா சி.சேகர், இசை மரியா மனோகர்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,பாடல்கள் சினேகன், வசனம் எஸ்..டி.சுரேஷ்குமார், கலை இயக்கம் A. பழனிவேல், ஸ்டண்ட் – அன்பறிவு, மிராக்கில் மைக்கேல், மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்.

எவனும் புத்தனில்லை

படம் பற்றி இயக்குநர் எஸ்.விஜயசேகரன் பகிர்ந்தவை…

7130 அடி உயர மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் படும் இன்னல்களை கொண்டு
ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஆக்‌ஷன், த்ரில்லர் வகைப் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டது விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார் இயக்குனர் எஸ்.விஜயசேகரன்.

எவனும் புத்தனில்லை

Evanum Buddhanillai movie story line news

‘படவா’ விமல் சும்மா இருக்க இசை விழாவை கலகலப்பாக்கினார் விஜய்ஆண்டனி

‘படவா’ விமல் சும்மா இருக்க இசை விழாவை கலகலப்பாக்கினார் விஜய்ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா இயக்கத்தில் விமல் – சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் ‘படவா’.

ஜான் பீட்டர் தயாரித்து இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கதாநாயகன் விமல் பேசியதாவது…

மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தின் இயக்குந‌ர் நந்தா அவர்களுக்கும் நன்றி. அன்பு நண்பன் சூரி அவர்களுக்கும், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்களுக்கும் நன்றி.

விஜய் ஆண்டனி பேசியதாவது…

ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் அவர்களுக்கு வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்.

அதன் பின்னர்… வானம் கொட்டட்டும் என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. அதை பாடியவரை அழைத்து மேடையில் பாடச் சொல்லி தாளம் போட்டு கலகலப்பாக்கினார் விஜய் ஆண்டனி .

சமீப காலமாகவே விஜய் ஆண்டனி (விபத்து நடந்த பிறகு) தன்னுடைய நிகழ்ச்சிகளை மிக கலகலப்பாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை இது தொடர்பான ஒரு கேள்வியில் கூட.. “என்ன நடந்துச்சு தெரியல.. ஆனா இப்ப ரொம்ப நல்லா இருக்கேன்” என்று பதில் தெரிவித்திருந்தார் விஜய் ஆண்டனி.

Vijayantony vibes at Badava audio launch

‘கடைசி விவசாயி’யை பாராட்டல.. ‘ஜெய்பீம்’-க்கு விருது ஏன் கொடுக்கலன்னு கேக்குறாங்க? – பேரரசு

‘கடைசி விவசாயி’யை பாராட்டல.. ‘ஜெய்பீம்’-க்கு விருது ஏன் கொடுக்கலன்னு கேக்குறாங்க? – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா இயக்கத்தில் விமல் – சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் ‘படவா’.

ஜான் பீட்டர் தயாரித்து இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குந‌ர் பேரரசு பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்துக்கொண்டே இருக்க வேண்டும். ‘படவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாக தான் ‘படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது.

விவசாயத்தைப் போற்றிய கடைசி விவசாயி என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனுக்கு யாரும் ஒரு விழா நடத்தவில்லை. பெரும்பாலும் எவரும் பாராட்டும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஜெய்பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெய்பீம் நல்ல படம் தான்.்

விருது தேர்வுக்கு அரசியல் உள்ளதாக பலரும் சொல்கின்றனர். அப்படி பார்த்தால் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்கு கடந்த முறை 5 விருது கிடைத்ததே” என்று ஆவேசமாகபேசினார் பேரரசு.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க‌ செயலாளர் கதிரேசன் பேசியதாவது :

‘படவா’ திரைப்படம் தயாரிப்பாளர் ஜான் பீட்டருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும், விமல் அவர்களுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். படத்தில் பணியாற்றிய‌ தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

திருமதி ரதீ சங்கர் பேசியதாவது :

இந்த ப்ராஜெக்ட் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் வானம் கொட்டட்டும் என்ற பாடலை நான் பாடியுள்ளேன்.

கதாநாயகி ஸ்ரீதா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம்,. மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குந‌ர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக‌ தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி .

Perarasu speech about National award politics

விமலுக்காக வந்தேன்.. விவசாயத்திற்காக பேசுறேன் – சௌந்தரராஜா

விமலுக்காக வந்தேன்.. விவசாயத்திற்காக பேசுறேன் – சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா இயக்கத்தில் விமல் – சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் ‘படவா’.

ஜான் பீட்டர் தயாரித்து இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் மிகவும் நன்றாக உருவாகி உள்ளது. என் உடனிருந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் சௌந்தரராஜா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படம் சமீபத்தில் வெளியானது. படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விவசாயம் குறித்த‌ கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் வணக்கம்.

பாடகர் வேல்முருகன் பேசியதாவது…

இந்த திரைப்படத்தில் டைட்டில் பாடலை நான் பாடியிருக்கிறேன். ‘படவா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவருடனும் சினிமாவில் பயணிப்ப‌து மிகவும் மகிழ்ச்சி.

Actor Soundararaja speech at Badava audio launch

‘படவா’ படம் சமூகப் பொறுப்புள்ள படம்..- நடிகர் சரவண சக்தி

‘படவா’ படம் சமூகப் பொறுப்புள்ள படம்..- நடிகர் சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.

இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.

சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர்.

மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்

இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவது…

அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்த வரவேற்கிறேன்.

கவிஞர் இளைய கம்பன் பேசியதாவது…

‘படவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற ‘படவா’ திரைப்படம் ஒரு அற்புதமான திரை சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இந்த திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன.

அனைத்து பாடல்களையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த திரைப்படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள்.

கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், படவா திரைப்படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன‌. இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஜான் பீட்டர் அவர்கள் தான். விமல் மிகப்பெரிய நடிகர், இந்த திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், சூரி அவர்களுக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.

இயக்குந‌ர் சரவணன் சக்தி பேசியதாவது…

இது மிகப்பெரிய சமூக பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற எல்லாம் வ‌ல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Badava is social message content movie says Saravana Sakthi

More Articles
Follows