காளி படத்தை ரிலீஸ் செய்ய விஜய்ஆண்டனிக்கு ஐகோர்ட் நிபந்தனை

காளி படத்தை ரிலீஸ் செய்ய விஜய்ஆண்டனிக்கு ஐகோர்ட் நிபந்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High court condition for Vijay Antonys Kaali movie releaseஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து வெளியான அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளர் அலெக்சாண்டர் வாங்கி ரீலீஸ் செய்தார்.

படம் நன்றாக வந்துள்ளது என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார். படம் ரீலீஸ் ஆகும் நாள் வரைபடத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு விஐய் ஆண்டனி கூறிய படி அண்ணாதுரை படத்தை திரையிட்டு காண்பிக்கவில்லை.

முதல் மூன்று நாட்களில் அண்ணாதுரை படத்திற்கு சுமாரான வசூல் இருந்தது. திரையிட்ட தியேட்டர்களில் முதல் வாரமே படத்தை எடுத்து விட்டு வேறுபடத்தை திரையிட்டனர்.

இதனால் அண்ணாதுரை படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் அவர்களுக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது..

படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் இது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

அதற்கு மாற்றாக விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் காளி படத்தை
குறைந்த விலைக்கு தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் கூறியுள்ளார்கள்

அதற்கு உடன்பட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டர் ஐம்பது லட்ச ரூபாய் அட்வான் ஸ்கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு உள்ளார்.

எதிர்பாராத விதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடை பெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டியதால் காளி படத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டரால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை.

ஒப்பந்தபடி பாக்கித் தொகை செலுத்த தவறியதால் காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி கடிதம் அனுப்பினார்.

அண்ணாதுரை படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை கேட்டு போன போது காளி படத்தை கட்டாயப்படுத்தி எங்களை வாங்க வைத்தது விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும்தான்.

இப்போது ஒப்பந்தத்தை காரணம் காட்டி அண்ணாதுரை படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக் கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

எனவே எனக்கு அண்ணாதுரை படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்து விட்டு காளி படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்குமாறு நீதி மன்றத்தில் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார்.

வரும் ஏப்ரல் 11க்குள் 4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டர் அவர்களுக்காக நீதிமன்றத்தின் விஜய் ஆண்டனி செலுத்தி விட்டு காளி படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும்.

இல்லை எனில் படத்திற்கான தடை தொடரும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

High court condition for Vijay Antonys Kaali movie release

இட்லி தயாரிப்பாளர் உருவாக்கும் A ஸ்டோரி வெப் சீரிஸ்

இட்லி தயாரிப்பாளர் உருவாக்கும் A ஸ்டோரி வெப் சீரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Web series movie A Story release in You tube soonசினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.

இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி.

அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.

நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் நிமேஷ் ‘மல்லி’ என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அப்பு மூவிஸ்’ நிறுவனம் சார்பில் பாபு தூயவன் இந்த வெப் தொடரை தயாரித்துள்ளார்.

இந்த நிறுவனம் ஏற்கனவே நட்டி நடராஜ் நடித்த கதம் கதம் மற்றும் இட்லி ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ‘அப்பு மூவிஸ்’ எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் அவர்கள் மூலம் அளித்திருந்தனர்.

இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் – கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான விடீயோக்களை அளித்திருந்தனர்.

தற்போது முதன் முறையாக ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.

’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் ‘தைரியமான … சொல்லப்படாத கதை’ என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் ‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் ‘அப்பு மூவிஸ்’ யுடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது.

Web series movie A Story release in You tube soon

https://www.filmistreet.com/video/a-story/

அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை ஆர்யா துவக்கி வைத்தார்

அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை ஆர்யா துவக்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya launches Actor Ajay Ratnams badminton clubசினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார்.

அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.

Arya launches Actor Ajay Ratnams badminton club

arya ajay ratnam

தமிழக நன்மைக்காக காமாட்சியம்மனுக்கு யாகம்; லதா ரஜினி பங்கேற்பு

தமிழக நன்மைக்காக காமாட்சியம்மனுக்கு யாகம்; லதா ரஜினி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Latha Rajinikanth conducted Yaagam for welfare of TN peoplesகடந்த இரண்டு ஆண்டுகளாக எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

ஜெயலலிதா மர்ம மரணம், ரிசார்டில் எம்எல்ஏக்கள் தஞ்சம், நிலையற்ற தமிழக முதல்வர்கள், மீத்தேன் திட்டம், கூடங்குளம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம், பஸ் கட்டண உயர்வு, ஆர் கே நகர் இடைத்தேர்தல், காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட், போலீஸ் அராஜகம் இப்படி ஒவ்வொரு பிரச்சினையாக தமிழக மக்களை பாதிப்பு அடைய செய்துள்ளது.

தமிழகமே போராட்ட பூமியாக மாறிவரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நன்மை நடக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த யாகம் செய்துள்ளார்.

காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற யாகத்தில் லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்துக் கொண்டுள்ளார்.

Latha Rajinikanth conducted Yaagam for welfare of TN peoples

latha rajinikanth yaagam temple pooja

பிரியா கண்ணடித்த மாணிக்க மலராய பாடலை நீக்க மீண்டும் வழக்கு

பிரியா கண்ணடித்த மாணிக்க மலராய பாடலை நீக்க மீண்டும் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manikya malaraya poovi song to be removed from oru adaar love movie Case filedநடிகை பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் “ஒரு அடார் லவ்”.

இந்த படத்தில் இடம் பெற்ற “மாணிக்க மலராய பூவி” என்ற பாடலும் அந்த பாடலில் பிரியா வாரியர் கொடுத்த ஐப்ரோ எக்ஸ்பிரசன்ஸ்ம் அவரை உலகளவில் பிரபலமாக்கியது.

இதுவரை படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளது.

இதனிடையில் இந்த பாடலை எதிர்த்து பிரியா மற்றும் டைரக்டர் மீது கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் படக்குழுவுக்கு ஆதரவாக கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த இருவர் தற்போது இப்பாடல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்களின் மனுவில், “ஒரு அடார் லவ்’ படத்தில் வரும் பாடல் முகம்மதுவையும் அவரது மனைவி கதீஜாவையும் இழிபடுத்துவது போல உள்ளது.

இஸ்லாமியர்களின் உணர்வை அவமதிக்கும் அந்த பாடலை உடனே படத்தில் இருந்து நீக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து டைரக்டர் ஓமர்லூலு கூறியதாவது:-

மலபாரில் உள்ள முஸ்லிம்கள் இந்த பாடலை பல வருடங்களாக கிட்டதட்ட 40 ஆண்டுகளாக பாடி வருகிறார்கள்.

அவர்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

திருமண விழாக்களில் கூட அந்த பாடலை பாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த பாடலை இப்போது திடீரென ரத்து செய்ய சொல்வது ஏன்?” என கேட்டுள்ளார்.

Manikya malaraya poovi song to be removed from oru adaar love movie Case filed

ரஜினியுடன் மோத பாலிவுட் நடிகரை அழைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினியுடன் மோத பாலிவுட் நடிகரை அழைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nawazuddin-Siddiqui-சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் ரஜினிகாந்த்துடன் முதன்முறையாக இணைகிறார் அனிருத்.

சினிமா ஸ்டிரைக் நிறைவு பெற்ற பின் காலா படம் ரிலீஸ் ஆனவுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இதற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்ற கார்த்திக் சுப்பாராஜ், நவாஸுதீனிடம் கதை சொல்லியதாகவும் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

50க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் நவாஸ்.

மேலும் ‘தலாஷ்’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வந்தன.

ஒருவேளை படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பார்களோ? என்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது.

Nawazuddin Siddiqui will be baddie in Rajini and Karthik Subbaraj movie

More Articles
Follows