தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி ‘மறக்குமா நெஞ்சம்..’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது.
இணையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏ சி டி சி என்ற நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது.
கடந்த மாதமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.
ஆனால் அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்கப்பட்டதாலும் முறையான ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் மக்கள் பல சிக்கலுக்கு ஆளாகினர்.
குடிக்க தண்ணீர் இல்லை.. உட்கார இருக்கைகள் இல்லை.. வாகனங்களை நிறுத்த சரியான பார்க்கிங் வசதி இல்லை என பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தான் பொறுப்பு ஏற்பதாக ஏ ஆர் ரகுமான் கூறினார். நாங்கள் உள்ளே இருந்ததால் வெளியே என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்றார்.
இத்தனை பிரச்சனைகள் 5 மணி நேரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது ரகுமான் தரப்பு எவராவது அவருக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்தில் இந்த பிரச்சனை முடியவில்லை.
கிட்டத்தட்ட 5 மணி நேரமாக இந்த பிரச்சனை நீடிக்கும் போது இசை நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்ததற்கான காரணம் ஏன்? என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
தற்போது காவல்துறையினர் இதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரகுமானுக்கு ஆதரவாக யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் தங்களது ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் கருத்துகளில் ரகுமான் மீது தவறு ஏதுஙுமில்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
ஒரு திருமணத்திற்கு நமக்கு அழைப்பு வருவது என்றால் திருமண வீட்டாரை நம்பி தான் நாம் செல்கிறோம். அவர்கள் யாரிடமாவது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய கொடுத்திருக்கலாம்.
நாம் ஏற்பாட்டார்களிடம் எந்தவிதமான உபசரிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது. அது சாதாரண ஒரு திருமண நிகழ்ச்சி.
ஆனால் இந்த இசை நிகழ்ச்சி என்பது ரகுமானுக்காகவே நடத்தப்பட்டது. ரஹ்மான் ரசிகர்கள் அவருக்காகவே சென்றனர். அது மட்டும் இல்லாமல் 2,000 5,000 10,000 15,000 என டிக்கெட்களை பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு முன்பு ரகுமான் அங்கு சென்று அனைத்தும் சரியாக இருக்கிறதா ? என்பதை அவர் தரப்பில் விசாரித்து இருக்க வேண்டும். ஆய்வு செய்திருக்க வேண்டும்.
பார்வையாளர்களுக்கு ரசிகர்களுக்கு கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக இருக்கிறதா? அதுமட்டுமில்லாமல் அவசர தேவைகளுக்காக தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டிருக்கிறதா ? என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும்.
இத்துடன் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையாவது அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்.
பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் பணம் மட்டுமே நோக்கமாக கருதப்பட்டுள்ளதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவையில்லாமல் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவைகளில் பவுன்சர்களின் அராஜகமும் அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 படத்தின் இசை விழாவில் மாணவர்களை பவுன்சர் தாக்கிய நிகழும் நடைபெற்றது. பவுன்சர்கள் மீடியாக்களை கூட சரியாக மதிப்பதில்லை.
ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும் போது மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முக்கியமானவர்கள் செய்தியாளர்கள். ஆனால் அவர்களை கூட பவுன்சர்கள் சரியாக நடத்துவதில்லை என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இனியாவது இசைக்கலைஞர்கள் திரை பிரபலங்கள் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இதற்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட இளையராஜா இசை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற நிறைய குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூபாய் 200 300 அளவில் விற்கப்பட்டது.
அப்போதுதான் இளையராஜா பேசிய பேச்சு சர்ச்சையானது.. என் பாட்டை கேட்க தானே வந்தீர்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களா? என இளையராஜா அங்கு பேசியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த செய்தியை சில ஆண்டுகளுக்கு நம் FILMISTREET தளத்தில் பதிவு செய்தோம் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதே சமயம் இந்த ஆண்டு 2023 செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்ட விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை பார்த்த பலரும் பாராட்டி உள்ளனர். நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றதாகவும் நாங்கள் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியினை பார்த்தோம் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Music Directors concert AR Rahman and ilaiyaraaja