விஜய்யின் ராசி படியே தலைப்பை உறுதி செய்த படக்குழு

விஜய்யின் ராசி படியே தலைப்பை உறுதி செய்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathi vijayபரதன் இயக்கத்தில் விஜய் தன் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு கடந்த சில தினங்களாகவே நம்ம வீட்டுப்பிள்ளை, உங்க வீட்டுப்பிள்ளை மற்றும் நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர்களில் ஒன்று வைக்கப்படலாம் என செய்திகள் வந்தன.

இதனிடையில் எம்ஜிஆர் ரசிகர்கள் இதுபோன்ற தலைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே ரஜினி-மம்மூட்டி நடித்து சூப்பர் ஹிட்டடித்த தளபதி என்ற டைட்டிலையே வைக்க முடிவு செய்து இருக்கிறார்களாம்.

விஜய்யே இந்த டைட்டிலை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமீபகாலமாக வந்த விஜய் படங்களில் தலைப்பு ஒரு வார்த்தையாகவே இருந்தது.

கத்தி, ஜில்லா, துப்பாக்கி, தெறி, உள்ளிட்ட இவை அனைத்தும் வெற்றியை பெற்றுள்ளதால், அந்த ராசி படியே தலைப்பிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜின் அடுத்த அதிரடி

‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun raja kamarajரஜினியின் ‘கபாலி’ படத்தில் நெருப்புடா’ பாடலை பாடி உலகம் முழுவதும் பிரபலமானார் அருண்ராஜா காமராஜ்.

எனவே இவரது பாடல்களுக்கு நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

எனவே, நிதானமாக படங்களை கமிட் செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கும் ‘மரகத நாணயம்’ என்ற ஒரு பாடலை ஒரு பாடலை எழுதி பாடவுள்ளார்.

இதில் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர்.

ஆட்டுக் குட்டியை மையமாக வைத்து இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

சின்ன சின்ன ஆசை என்ற பாடலை போல் அனைத்து வரிகளின் முடிவில் ஆடு என்ற வார்த்தை முடியுமாம்.

இப்பாடலும் சூப்பர் ஹிட் ஆகும் என அவரை வாழ்த்துவோம்.

திருட்டு விசிடியை எதிர்த்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு பதிலடி கொடுத்த பாக்யராஜ்

திருட்டு விசிடியை எதிர்த்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு பதிலடி கொடுத்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director bhagyarajதியா இயக்கி நடித்துள்ள கன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனர்கள் பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது…

“இனி யாராவது திருட்டு சிடி பாத்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றாலோ கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என ஆவேசமாக பேசியார்.

அதன் பின்னர் பாக்யராஜ் பேசும்போது…

“திருட்டு விசிடி கடைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என சேரன் சொன்னார்.. ஆனால் அவை ஓப்பனாகவே இருக்கும்போது நம்மால் என்ன பண்ண முடியும்.

இதில் மக்களை குறைசொல்ல முடியாது. பஸ்ஸில் ஏறும்போதே ஊர்ப் பெயரோடு சேர்த்து அந்த பஸ்ஸில் என்ன படம் போடுகிறோம் என்பதையும் சொல்லித்தான் ஆட்களை ஏற்றுகிறார்கள்.

அதற்காக கண்ணை மூடிக்கொண்டு பயணம் செய்ய முடியுமா? கேபிள் டிவியிலும் புதுப்படம் போடுகிறார்கள். பார்க்காமல் இருக்க முடியுமா?

மக்கள் ரசிக்கும் விதமாக நல்ல படங்களை கொடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள்.

ரஜினி உட்பட பலரும் ஜோக்கர் படத்தை பாராட்டினார்கள். நல்லா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் நானும் தியேட்டரில் போய் பார்த்தேன்.

நாம் நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடிகாரர்களால் ஒன்றும் பண்ண முடியாது. என்றார்.

மேலும் பேசியதாவது…

படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் தயவு செய்து தயாரிப்பாளரை காப்பாற்றுகிறேன் என யாரும் படம் எடுக்காதீர்கள்.

முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படம் எடுங்கள். தயாரிப்பாளர் ஒரு படத்தில் காசை விட்டால் கூட, அடுத்து இன்னொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்து சம்பாதித்துக்கொள்வார்.

முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்ள படங்களை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும்.. அதோடு தயாரிப்பாளரையும் காப்பாற்றிவிடும்.

என்று பேசினார் பாக்யராஜ்.

ரஜினி கணக்கில் திடீர் சரிவு; முந்தி செல்கிறார் தனுஷ்

ரஜினி கணக்கில் திடீர் சரிவு; முந்தி செல்கிறார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini dhanushதமிழ் நடிகர்களை பொறுத்தவரை ட்விட்டரில் ரஜினிதான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

சில நாட்கள் முன்பு வரை ரஜினிக்கு 3.39 மில்லியன் பாலோயர்கள் இருந்தார்கள்.

அப்போது தனுஷ் கணக்கில் தனுஷ் 3.17 மில்லியன் பாலோயர்கள் இருந்தார்கள்.

ஆனால் தற்போது ரஜினி கணக்கில் திடீரென சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 26, 2016) கணக்கின்படி ரஜினியை 3.12 பேர் மட்டுமே பின் தொடர்கின்றனர்.

தனுஷை பாலோ செய்பவர்கள் அதிகமாகியுள்ளனர். அதாவது 3.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் சித்தார்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘இலங்கை தமிழர்களும்; திருட்டு விசிடியும்…’ விளக்கம் கொடுத்த சேரன்

‘இலங்கை தமிழர்களும்; திருட்டு விசிடியும்…’ விளக்கம் கொடுத்த சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheran speechதமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையங்களில் வெளியிடுவதில் இலங்கை தமிழர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார் சேரன்.

எனவே அவர்களின் நலனுக்காக இங்கே போராடியதை தான் அவமானமான கருதுவதாகவும் கன்னா பின்னா ஆடியோ விழாவில் சேரன் பேசியிருந்தார்.

எனவே அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

நான் எதற்காக அப்படி பேசினேன் என்பது என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்.

திருட்டு டிவிடி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது, ஏன் விமர்சகர்கள் குரல் கொடுக்கவில்லை.

அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. அப்போ எங்கள் வாழ்க்கை பற்றி கவலை இல்லையா?

உலகமெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கை தமிழர்கள்தான்) C2H நிறுவன கிளைகளை துவங்கிய போது, அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்.

ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களை குறித்து, நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு.

நல்ல குணம் கொண்ட ஈழத்தமிழர்களுக்கு என்னை பற்றி தெரியும்” என்று விளக்கமளித்திருக்கிறார் சேரன்.

திருமண நாள் கொண்டாட்டம்; விஜய்-சங்கீதாவுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

திருமண நாள் கொண்டாட்டம்; விஜய்-சங்கீதாவுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sangeethaநடிகர் விஜய், தனது ரசிகையான சங்கீதாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்றது.

இவர்களுக்கு தற்போது சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

சஞ்சய், வேட்டைக்காரன் படத்திலும் திவ்யா, தெறி படத்திலும் ஒரு காட்சியில் நடித்தனர்.

இந்நிலையில், நேற்று தனது 17வது வருட திருமண நாளை தனது குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் விஜய்.

இவருக்கு ஏராளமான ரசிகர்களும், சினிமாத்துறையினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

More Articles
Follows