விஜய் 68 பட அப்டேட் கொடுத்த ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஜீவா

விஜய் 68 பட அப்டேட் கொடுத்த ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

விஜய் இதையெடுத்து ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தை நடிகர் ஜீவா தனது ஹோம் பேனரில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘தளபதி 68’ குறித்த அப்டேட் குறித்து ஜீவாவிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்கள்.

கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஜீவா , இது விரைவில் செய்யப்படும் என்றார்.

மேலும், ‘தளபதி 68’ படத்தை ஏற்கனவே விஜய்யின் ‘பிகில்’, ‘மெர்சல்’, ‘தெறி’ படங்களை இயக்கிய அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மற்றும் அட்லி நான்காவது கூட்டணியாக ‘தளபதி 68’ இருக்கும்.

Thalapathy 68 movie update giving jiiva

‘மாமன்னன்’ போஸ்டரில் கெத்து காட்டும் உதயநிதி – பகத்பாசில் – வடிவேலு

‘மாமன்னன்’ போஸ்டரில் கெத்து காட்டும் உதயநிதி – பகத்பாசில் – வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

“மாமன்னன்” படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

முன்னதாக இப்படத்தின் First Look போஸ்டர் மே 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சமூக வலைதளங்களில் போஸ்டர் கசிந்ததால் படக்குழுவினர் நேற்றே இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் “மாமன்னன்” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மே 1ம் தேதி மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் உதயநிதி பகத்பாசில் வடிவேலு ஆகியோர் கெத்தாக போஸ் கொடுக்கின்றனர்.

நேற்று வெளியான போஸ்டரில் உதயநிதி கையில் வீச்சருவா வைத்திருக்க வடிவேலு துப்பாக்கி வைத்திருப்பதாக ஆக்சன் போஸ்டர் வெளியானது.

மாமன்னன் படத்தை ஜூன் மாதம் வெளியிட உதயநிதி முடிவெடுத்து அதை போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.. ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.

மாமன்னன்

Udhayanidhi’s Maamannan movie first look poster release

அஜித்தின் ‘விடாமுயற்சி’.: தமிழை மதிக்கும் தல..; மதிக்காத தளபதி விஜய்.?!

அஜித்தின் ‘விடாமுயற்சி’.: தமிழை மதிக்கும் தல..; மதிக்காத தளபதி விஜய்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அஜித் 62 ஆவது படத்தின் தலைப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்ற பெயரிட்டு அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீப காலமாகவே அஜித் மற்றும் விஜய் படங்கள் தயாராகும்போது சூட்டிங் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகே அந்தப் படத்தின் தலைப்பை வெளியிடுவார்கள்.

ஆனால் அஜித் 62 படத்தின் தலைப்பை லைக்கா நிறுவனம் இப்போதே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் முக்கியமாக விடாமுயற்சி என்ற தமிழ் தலைப்பை வைத்து தமிழ் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘பீஸ்ட்’ & ‘வாரிசு’ ஆகிய படங்களுக்கு முதலில் ஆங்கில டைட்டில் மட்டுமே வெளியானது.

வாரிசு தமிழ் தலைப்பாக இருந்தாலும் தமிழ் டிசைன் வடிவில் வெளியாகவில்லை

இந்த படங்களின் ரிலீஸ் சமயத்தில் தான் ‘பீஸ்ட்’ மற்றும் ‘வாரிசு’ தமிழ் வடிவமைப்பு வெளியானது. இது சம்பந்தமான செய்திகளை நாம் FILMISTREET தளத்தில் நாம் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே டிசைன் வெளியானது. மேலும் ‘லியோ’ என்பது ஆங்கில சொல்லாகும்.

ஆனால் இந்த முறை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ‘லியோ’ டைட்டில் வெளியானது இங்கே கவனிக்கத்தக்கது.

Ajiths respect for Tamil language but Vijay movies never does it

சிவகார்த்திகேயன் திடீர் விலகல்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்.! என்ன காரணம்.?

சிவகார்த்திகேயன் திடீர் விலகல்.; அதிர்ச்சியில் ரசிகர்கள்.! என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‘மாவீரன்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“சில காலம் ட்விட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

விரைவில் உங்களை சந்திப்பேன் எனவும் படத்தினைப் பற்றி இனிமேல் எனது படக்குழுவினர் செய்திகளை பரிமாறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அவர் சுற்றுலா விமானத்தில் இருந்து புகைப்படத்தினை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

My dear brothers and sisters,
I am taking a break from twitter for a while.
Take care, and i will be back soon 👍😊

சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan’s shared tweet Fans are shocked

ரஜினிக்கு மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ கொடுக்க ரெடியாகும் லோகேஷ் கனகராஜ்

ரஜினிக்கு மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ கொடுக்க ரெடியாகும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்தப் படங்களைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படங்களை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு படத்தில் ரஜினி நடிக்க ரெடியாகி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘தலைவர் 171’ வது படமாகும். இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியான கேங்ஸ்டர் கதையாக உருவாக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிகாந்த் பல கேங்ஸ்டர் கதைகளில் நடித்திருதாலும் அவரது கேரியரில் பில்லா, பாட்ஷா, கபாலி, காலா படங்களை அந்த வரிசையில் சொல்லலாம்.

லோகேஷ் இயக்கவுள்ள இந்த புதிய படம் ரஜினிக்கு மீண்டும் ஒரு பாட்ஷாவாக அமையும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை கிட்டத்தட்ட ரூ 250 கோடியில் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினி இதுவரை 170 படங்களில் நடித்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத வரிசையில் பாட்ஷா படத்தை என்றுமே சொல்லுவார்.

அவருக்கு மீண்டும் ஒரு ‘பாட்ஷா’ கிடைத்தால் அது நிச்சயம் ஒரு பாதுஷாவாக இருக்கும் என நம்பலாம்.

Rajinikanth’s film with Lokesh Kanagaraj to be titled ‘Thalaivar 171’

அஜித் பிறந்தநாளில் AK 62 டைட்டிலை வெளியிட்ட லைக்கா.; செம பொருத்தமாச்சே.!

அஜித் பிறந்தநாளில் AK 62 டைட்டிலை வெளியிட்ட லைக்கா.; செம பொருத்தமாச்சே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனக் கூறப்பட்டது அதன் பின்னர் அவர் விலகினார்.

அதன்படி இன்று மே 1ம் தேதி 12 மணி துவங்கும் வேளையில் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு ‘விடா முயற்சி’ என்று பெயரிட்டுள்ளனர்.

விடா முயற்சி

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமானவர் அஜித். அவர் தன்னுடைய தொடர்ந்து விடாமுயற்சியால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

எனவே இந்த தலைப்பு அஜித்திற்கு மிகவும் பொருத்தமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விடா முயற்சி

Ajith 62 movie titled Vidaa Muyarchi Title look released

More Articles
Follows