ஆதரவற்ற குழந்தைகளுடன் தன் பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.!

ஆதரவற்ற குழந்தைகளுடன் தன் பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.

1980ஆம் ஆண்டு பாசில் இயக்கிய ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மோகன்லால்.

முதலில் வில்லனாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர்.

தமிழில் கோபுர வாசலிலே, இருவர், பாப் கான், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

மோகன்லால் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன்லால் இன்று மே-21ம் தேதி தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில், மோகன்லால் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இது குறித்து புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

mohanlal celebrates birthday with Destitute children

OFFICIAL விஜய் 68 & ஏஜிஎஸ் 25 – வெங்கட் பிரபு – யுவன் மெகா கூட்டணி

OFFICIAL விஜய் 68 & ஏஜிஎஸ் 25 – வெங்கட் பிரபு – யுவன் மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.

‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.

சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.

*AGS #25 – Thalapathy #68*

*Kalpathi S. Aghoram’s AGS Entertainment to produce #Thalapathy68 directed by Venkat Prabhu with music by Yuvan Shankar Raja*

Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment, the power-house production banner of South Indian cinema, have teamed up with Thalapathy Vijay for their 25th venture. The film to be made on a grand scale will be directed by Venkat Prabhu. Archana Kalpathi will be the Creative Producer for the film.

After the blockbuster success of ‘Bigil’, AGS Entertainment will associate with Thalapathy Vijay for the 2nd time for his 68th movie tentatively titled #Thalapathy68. This will be AGS’s 25th venture and the production house’s biggest film thus far.

Across 25 films, AGS Entertainment has always strived to make cinema driven by good content and high production values. #Thalapathy68, according to the producers, will be their best film yet.

To add to this brilliant combination of AGS, Thalapathy Vijay and Venkat Prabhu, music for the film will be composed by Yuvan Shankar Raja.

#Thalapathy68 is going to be an entertainer that will be loved across all audiences. It will boast of the best technicians of global standards and highest production values.

Cast and crew, title announcement and other updates will be released by the production team officially, in due time.

#Thalapathy68, to be produced by Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment and directed by Venkat Prabhu, is slated to be released in 2024.

விஜய் 68

AGS Entertainment to produce Thalapathy68 directed by Venkat Prabhu

தமிழே தெரியாதவர்கள் கூட ஆடி பாடிய ‘விளம்பர இடைவெளி..’ பாடல் சாதனை

தமிழே தெரியாதவர்கள் கூட ஆடி பாடிய ‘விளம்பர இடைவெளி..’ பாடல் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைத் தளங்களில் எப்போது எந்த பாடல் டிரெண்டாகும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி சமீபத்தில் உலகம் எங்கும் ஏழு லட்சம் பேருக்கும் மேல் ரீல்ஸ் உருவாக்கி டிரெண்டாகிக் கொண்டிருப்பது ஒரு தமிழ் பாடல்.

நயன்தாரா – அதர்வா – ராஷி கண்ணா நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘விளம்பர இடைவெளி’ என்ற பாடல்தான் அது.

ஹிஹாப் தமிழா ஆதி இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய பாடல். குறிப்பாக இந்தப் பாடலின் இறுதி வரிகளான “நான் உனதே நீ எனதா ? தெரியாமலே நான் தேய்கிறேன் – இல்லை என்றே சொன்னால் இன்றே என் மோகப் பார்வை மூடுவேன்” என்ற வரிகளைக் கொண்டு உலகம் முழுக்க ரீல்ஸ் உருவாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, கனடா என்று எல்லா நாடுகளிலும் இது டிரெண்டிங்கில் இருக்கிறது.

தமிழே தெரியாதவர்கள் கூட இந்தப் பாடலுக்கு நடனமாடியும் பாடியும் பதிவு செய்து வருகிறார்கள்.

இது குறித்து பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து தன் முக நூலில் “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை” என மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார்.

Vilambara Idaiveli song goes viral till now

#KabilanVairamuthu is thrilled over his 2018 song #VilambaraIdaiveli from #ImaikkaNodigal composed by @hiphoptamizha getting viral across the world all of a sudden on various social media platforms. The song is trending in India, US, Pakistan, Spain, Africa, Australia, Canada etc

தனது தந்தை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அதிர்ச்சி பேட்டி – குஷ்பூ

தனது தந்தை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து அதிர்ச்சி பேட்டி – குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 90களில் உச்சபட்ச நட்சத்திரமாக லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்பூ.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனது 8 வயதில் தந்தையால் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதை அவர் எவ்வாறு எதிர்த்து வெளியில் வந்தார் என்பது குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

இது குறித்து குஷ்பூ சமீபத்தில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

உங்களின் இந்த மோசமான அனுபவம் பற்றி நீங்கள் மிகவும் தைரியமாக குரல் கொடுத்துள்ளீர்கள் . அதன் மூலம் நீங்கள் மக்களுக்கும் இன்றைய இளைய சமூகத்தினருக்கும் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

இது போன்ற துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?
என கேட்கப்பட்டது.

குஷ்பூ பேசுகையில், “நிச்சயமாக அவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். நான் அதை மிகவும் தாமதமாகவே வெளிப்படுத்தினேன். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனைகள், குடும்பம், இமேஜ் இப்படி பல காரணங்களால் உங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நீங்கள் வெளிப்படையாக பேச தயக்கம் இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் சொல்வதை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அன்று எங்களுக்கு தீர்ப்பு சொல்ல யாருமில்லை.” என பேசினார்.

Kushboo’s description of sexual abuse by her father when she was 8 years old

சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் இல்ல சித்தி.; ஆச்சரியத்தில் ஆர்யா

சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் இல்ல சித்தி.; ஆச்சரியத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.

இந்த சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது…

“பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு முத்தையா. இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன், அவர் (காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்) இந்தக் கதையோடு திரும்ப வந்தாரு.

அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும், சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும்.

நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க, இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க அவங்களுக்கு நன்றி.

ஹீரோயின் என்ன விட அவங்களுக்கு டயலாக் அதிகம் அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க, ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க.

எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார் ஆர்யா.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.

Sidhi character is not just usual heroine says Arya

எனது எல்லா படங்களும் உறவுமுறை பற்றி இருக்கும்.. ஆனா இது வேற மாதிரி – முத்தையா

எனது எல்லா படங்களும் உறவுமுறை பற்றி இருக்கும்.. ஆனா இது வேற மாதிரி – முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.

முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.

இந்த சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசியதாவது…

இது என்னுடைய 8வது படம். எனது அனைத்து படங்களும் ஒரு உறவைப் பற்றிய கதையாக இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் நன்றி உணர்வைப் பற்றிக் கூற முயற்சி செய்துள்ளேன். படத்தில் அனைத்து கதாபாத்திரமும் ஒரு உணர்வை மற்றும் உறவைச் சொல்லும், படத்தின் கதைக்களம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பது போல அமைந்துள்ளது , நிறைய நகரப் படங்கள் வருகிறது, இந்த கிராமத்து மண் படத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தில் அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர் மிகப்பெரிய ஆதரவு எனக்குக் கொடுத்தார், மிகவும் நன்றி, படம் மிகவும் அருமையாக வந்துள்ளது உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

Kadhar Basha endra Muthuramalingam is different movie for me says Muthaiya

More Articles
Follows