நயன்தாராவை அடுத்து ஹிந்தியில் கீர்த்தியை இயக்கும் அட்லி.; விஜய் பட ரீமேக்.?

நயன்தாராவை அடுத்து ஹிந்தியில் கீர்த்தியை இயக்கும் அட்லி.; விஜய் பட ரீமேக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் நச்சென்று நாலு படம்.. நாலு படமும் ஹிட் அடிக்கவே திடீரென பாலிவுட் பறந்தார் டைரக்டர் அட்லி.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய 4 படங்களை இயக்கிய பின் திடீரென எவருமே எதிர்பாராத வகையில் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அட்லி.

இந்த படத்தில் தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்த இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அடுத்த படத்தையும் ஹிந்தியில் இயக்கவிருக்கிறாராம் அட்லி.

இந்த படம் விஜய் நடித்து 2016 இல் வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படம் விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்று கூறப்பட்டு வந்து நிலையில் தற்போது ‘தெறி’ படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்கிறார் அட்லி.

அட்லீ மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது பற்றி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Atlees next movie with Keerthy Suresh in Hindi

ரூ 50 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘மாவீரன்’

ரூ 50 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘மாவீரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூன் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மாவீரன்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மாவீரன்

Sivakarthikeyan’sMaaveeran box office collections crosses Rs 50 crore

‘ஜெயிலர்’ டைட்டிலை மாற்றக் கோரிக்கை.; ரஜினிக்கு வந்த திடீர் பிரச்சனை.!

‘ஜெயிலர்’ டைட்டிலை மாற்றக் கோரிக்கை.; ரஜினிக்கு வந்த திடீர் பிரச்சனை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் நேற்று வெளியானது.

‘ஜெயிலர்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்படுத்தும் விதமாக தலைப்பை மாற்றக்கோரி கேரளாவில் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த படத்தின் கதைக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.

மேலும், அங்கு ‘ஜெயிலர்’ என்ற பெயரிலேயே புதிய மலையாள படமொன்று தயாராகி உள்ளது.

அதில் தியான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆனாலும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்றும், எனவே கேரளாவில் மட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்பை மாற்றி வேறு பெயரில் வெளியிடுமாறும் வற்புறுத்தி உள்ளனர்.

ஆனால் தலைப்பை மாற்ற ரஜினியின் ‘ஜெயிலர்’ பட குழுவினர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Rajini’s ‘Jailer’ releasing with a different name in Kerala

நடிகை மீனாவின் வாழ்க்கையை சினிமாவாக்கும் ரஜினி – கமல் – விஜய் பட காஸ்ட்யூமர்

நடிகை மீனாவின் வாழ்க்கையை சினிமாவாக்கும் ரஜினி – கமல் – விஜய் பட காஸ்ட்யூமர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1960-களில் பழம்பெரும் ஹிந்தி நடிகை மீனா குமாரி. (1 August 1933 — 31 March 1972)

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் ஒரு கட்டத்தில் ஹிந்தி சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

இவரே படங்களில் பாடல்களை எழுதி பாடியும் இருக்கிறார். 1939இல் நடிக்க தொடங்கி 1972 வரை படங்களில் நடித்தார்.

சுமார் 88+ படங்களுக்கு மேல் நடித்த அவர் தனது 38 வயதில் மது போதைக்கு அடிமையாகி உடல் நலக்குறைவால் காலமானார்.

மீனா குமாரி

தற்போது மீனாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக்க இருக்கிறார் பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா. இவர் இந்த படத்தை இயக்கி இயக்குநராக மாறவிருக்கிறார்.

மீனா குமாரியின் வாழ்க்கைக் கதையில் கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை பூஷன்குமார் தயாரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களில், ஆடை வடிவமைப்பாளராகபணியாற்றியவர் தான் மனீஷ் மல்ஹோத்ரா.

இவர் தமிழில், ‘இந்தியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘புலி’ ஆகிய படங்களில் காஸ்ட்யூமராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனா குமாரி

Actress Meena Kumaris Biopic will be directed by Manish Malhotra

பிரபாஸ் – கமல் இணையும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் தீபிகா லுக் வெளியீடு

பிரபாஸ் – கமல் இணையும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் தீபிகா லுக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’ (Project K).

இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

மேலும், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

இந்நிலையில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், ‘புராஜெக்ட் கே’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ராஜெக்ட் கே

Deepika Padukone’s look from Project K released

ஒரு பக்கம் அலப்பறை.: மறுபக்கம் கடற்கரை.; வைரலாகும் ரீல் & ரியல் ரஜினி ஸ்டில்ஸ்

ஒரு பக்கம் அலப்பறை.: மறுபக்கம் கடற்கரை.; வைரலாகும் ரீல் & ரியல் ரஜினி ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் ரஜினிகாந்த் தன் பட சூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வெடுக்க இமயமலை செல்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக படங்களை முடித்துவிட்டு இமயமலை செல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்.

தற்போது ‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘காவாலா மற்றும் ஹூக்கும்… ஆகிய பாடல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘டைகர் கா ஹூக்கும்…. தலைவர் அலப்பறை…’ என்ற பெயரில் நேற்று ஒரு பாடல் வெளியானது. இதில் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலிஷ் ஆக மாஸாக வருகிறார்.

எனவே அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ரஜினிகாந்த் தற்போது மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு ஓய்வெடுத்து வருகிறார். சிவப்பு டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து ரஜினிகாந்த் கூலாக கடற்கரையில் ஓய்வெடுக்கும் புகைப்படங்களை ரசிகர் ஒருவர் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் ரீல் ரஜினி.. ஒரு பக்கம் ரியல் ரஜினி என புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ரஜினிகாந்த்

Reel Rajinis Jailer & Real Rajini Maldives stills goes viral

More Articles
Follows