தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிப்பாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி.
இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
எம்.ஜி.ஆரின் ரிக்க்ஷாகாரன் படத்தில் ‘பம்பை உடுக்கை கட்டி…’ என்ற பாடலுக்கும், அடிமைப்பெண் படத்தில் ‘காலத்தை வென்றவன் நீ, காவியம் ஆனவன் நீ…’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடியவர்தான் இந்த ஜோதி லட்சுமி.
மேலும் ரஜினியுடன் முத்து படத்திலும் விக்ரமுடன் சேது படத்திலும் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
தற்பொழுது சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் “வள்ளி” என்ற தொடரில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில் நள்ளிரவு திடீரென மரணம் அடைந்தார். இவருக்கு வயது 68.
இவரது தங்கை ஜெயமாலினியும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். இவரும் சினிமாவில் நடித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள ஜோதிலட்சுமியின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இறுதி சடங்கு இன்று மாலை சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.