96 தெலுங்கு டிரைலர் ரிலீஸ்; ரசிகர்கள் ரியாக்சன் – த்ரிஷா பெஸ்ட்; சமந்தா வேஸ்ட்

Tamil Cinema audience reaction for 96 remake Jaanu trailer ஒரு படம் ஹிட்டாகி அடுத்த மொழியில் வெளியானால் நிச்சயம் பழைய படத்துடன் அதை ஒப்பிட்டு பார்ப்பார்கள் ரசிகர்கள்.

த்ரிஷ்யம் பட மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதில் மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்திருந்தனர்.

தமிழில் பாபநாசம் பெயரில் அதே இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கினார். கமல் நடிப்பை பலரும் பாராட்டினாலும் கௌதமி நடிப்பு மீனா போல் இல்லை என்றனர்.

அதுபோல் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். மலையாளத்தில் மலர் டீச்சராக சாய் பல்லவி நடிக்க தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.

ஸ்ருதியை கிண்டல் செய்து பல மீம்ஸ்களை வெளியிட்டனர். முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் சூப்பர் ஹிட்டான 96 படத்தை தமிழில் இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்கியுள்ளார். தெலுங்கில் ஜானு என பெயரிட்டுள்ளார்.

தமிழில் விஜய்சேதுபதி த்ரிஷா நடித்திருந்தனர். தெலுங்கில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர்.

96 தெலுங்கு ரீமேக்.; என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என டைரக்டர் விளக்கம்

அதே இயக்குனர் தான் படத்தை இயக்கியிருந்தாலும் தெலுங்கு பட டிரைலரை தமிழக ரசிகர்கள் ரசிக்கவில்லை.

த்ரிஷா தான் பெஸ்ட், சமந்தா நடிப்பு எடுபடவில்லை. சமந்தா நல்ல நடிகை தான். ஆனால் இந்த கேரக்டருக்கு இவர் எடுபடவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

இந்த டிரைலர் வெளியான நிலையில் படத்தை பிப்ரவரி 7ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

தமிழில் இசையமைத்த கோவிந்த வசந்தாவே தெலுங்கிலும் இசையமைத்துள்ளார். தில் ராஜீ தயாரித்துள்ளார்.

Tamil Cinema audience reaction for 96 remake Jaanu trailer

https://www.youtube.com/watch?v=8sWRT2hGPcQ&feature=youtu.be

Overall Rating : Not available

Related News

பிரபலமான 66வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும்…
...Read More
கடந்த ஆண்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட…
...Read More

Latest Post