முருகதாஸ் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் மீண்டும் ‘சுறா’ ஜோடி..?

முருகதாஸ் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் மீண்டும் ‘சுறா’ ஜோடி..?

tamanna in thalapathy 65மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு தளபதி 65 படத்திற்காக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தர்பார் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் தமன் இசையமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய்யின் 50வது படமான ’சுறா’ என்ற படத்தில் விஜய் தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர்.

ஆனால் சுறா படம் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதியால் விறுவிறுப்பு.. மாஸ்டர் படம் பார்த்து வியந்த விஜய்

விஜய்சேதுபதியால் விறுவிறுப்பு.. மாஸ்டர் படம் பார்த்து வியந்த விஜய்

vijay vijay sethupathiலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர்.

கடந்தாண்டு 2019 ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய இப்பட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

இதனால் மாஸ்டர் படத்தில் சில திருத்தங்களை செய்திருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

எனவே இந்தப் பணிகளை முடித்துவிட்டு படக்குழுவினருக்கு படத்தை திரையிட்டுள்ளனர்.

இந்த படத்தை பார்த்த விஜய் ஒவ்வொரு காட்சியை ரசித்து பாராட்டினாராம்.

சில காட்சிகளில் ‘உண்மையில் இது நான்தானா ?’ எனவும் கேட்டாராம்.

வில்லன் விஜய்சேதுபதி தோன்றும் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பை கூட்டுவதாக தெரிவித்தாராம்.

வா மச்சி நம்பர் கேட்போம்..; திருமணமாகியும் அடங்காத சதீஷ்

வா மச்சி நம்பர் கேட்போம்..; திருமணமாகியும் அடங்காத சதீஷ்

sathishசின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினி ரம்யா. இவர் ’ஓகே கண்மணி’ மற்றும் ‘ஆடை’ உள்ளிட்ட ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரம்யா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தனது சின்ன வயது போட்டோவை பதிவு செய்து இவர் யாரென்று கண்டுபிடியுங்கள் என கேட்டிருந்தார்.

இந்த போட்டோவை பார்த்த நடிகர் சதீஷ், அவரின் நண்பருடன் உள்ள சின்ன வயது போட்டோவை போட்டு ’வா மச்சி நம்பர் கேட்டுப் பார்ப்போம்’ என கமெண்ட் அடித்துள்ளார்.

ட்விட்டரில் புளூ டிக்…: பெருந்தலைவர் பாணியில் சேரன் நெத்தியடி பதில்

ட்விட்டரில் புளூ டிக்…: பெருந்தலைவர் பாணியில் சேரன் நெத்தியடி பதில்

cheran twitter20 வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் என்ற சமூக வலைத்தளமே பிரபலமாக இருந்தது. அதில் அக்கௌண்ட் இல்லையென்றால் ஏதோ வங்கி கணக்கு இல்லாத போல சமூகம் பார்க்க தொடங்கியது.

அதன்பின்னர் ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களும் இந்தியாவில் பிரபலமாக தொடங்கியது.

இதில் தற்போது பல பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரபலங்கள் பெயரில் பலர் போலி அக்கௌண்ட் தொடங்குவதால் சம்பந்தப்பட்ட அக்கௌண்ட்டுக்கு மட்டும் புளு டிக் கொடுப்பது ட்விட்டர் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

அதுபோல் மீடியாக்கள் பெயரிலும் நிறுவனங்கள் பெயரில் நிறைய போலி அக்கௌண்ட்டுக்கள் உருவாவதால் இதை நடைமுறை தொடர்ந்து வருகிறது.

ஆனால் ஒரு சிலர் இதை வைத்து பெரியளவில் பிசினஸ் செய்து வருகின்றனர்.

முதலில் கஷ்டப்பட்டு நல்ல பெயரை சம்பாதிக்கும் அவர்கள் நாளடைவில் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய் பிரச்சாரங்களுக்கு துணை போகின்றனர்.

மேலும் சிலர் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்ஸ் போட்டு கூட சில்லரை பார்த்து வருகின்றனர். ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு என படத்தயாரிப்பாளர்களிடம் கறந்தும் வருகின்றனர்.

இது தெரியாமல் இவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி ரசிகர்கள் அதை பரப்பி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர் ட்விட்டரில் புளூ டிக் வைத்திருப்பார்கள். அதாவது VERIFIED ACCOUNT (அதிகாரப்பூர்வ அக்கௌண்ட்) என்ற பெயரில் இதை சிலர் அசால்லட்டாக செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புளூ டிக் குறித்து நடிகரும் இயக்குனருமான சேரன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..

இங்கே பதில் வருவதற்கும் லைக் வாங்குவதற்கும் ரீடுவீட்டுக்கும் புளூ டிக் தேவையென சிலர் எனக்கு அறிவுரை சொன்னார்கள்… அப்படி ஒரு டிக்கே வேணாம்ன்றேன்…. எனக்கு ரசிகர்கள் மக்களிடம் இருந்து கிடைக்கும் டிக் போதும்ன்றேன்….

இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சேரன்.

வேணாம்ன்றேன்…. போதும்ன்றேன்…. என்ற வார்த்தைகளை மறைந்த தமிழக முதல்வர் காமராஜர் கூறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை என ரஜினி சொன்னாரா.? தேவையே இல்லாமல் ஆணி புடுங்கும் கறுப்பு ஆடுகள்

annamalai cm rajiniகர்நாடகா போலீஸ் சிங்கம் என அழைக்கப்பட்ட அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து தற்சார்பு விவசாயம் செய்ய போவதாக அறிவித்தார்.

எனவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையில் அவர் ரஜினி கட்சியில் இணைய போகிறார். அவரை தான் ரஜினி தன் கட்சி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்போகிறார் என இவர்களே (சில மீடியாக்கள்) செய்திகளை பரப்பிவிட்டனர்.

ஆனால் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் அண்ணாமலை அவர்கள் பாஜக.வில் இணைந்தார். மோடிக்கு ஆதரவாக பேசினார்.

இது செய்தியை பல்வேறு இணையத்தள மீடியாக்கள் திரித்து செய்தியாக வெளியிட்டனர்.

அதாவது.. ரஜினிக்கு அண்ணாமலை கல்தா… ரஜினி வேட்பாளர் பாஜக.வில் இணைந்தார்… ரஜினியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை எஸ்கேப் என பல்வேறு தலைப்புகளில் செய்தியாக வெளியிட்டனர்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் குறித்து ரஜினி எதுவுமே பேசாத நிலையில் இவர்களே ஒரு கட்டுக்கதை தொடங்கி அந்த பொய்கதையை இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் தெரியவில்லை.

இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்…

ஒரு முறை சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளினி கேள்வி கேட்டார்.

அதாவது உங்களுகு பிடித்த உணவகம் எது? என்றார்.

அதற்கு சிவகார்த்திகேயனோ… தன் சொந்த ஊர் திருச்சியில் உள்ள ஒரு சிறிய உணவகத்தை பெயரை சொன்னார்.

அதற்கு தொகுப்பாளினியோ.. என்ன சார்? நீங்க சென்னையிலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் (லீ மெரிடியன், சோழா.. பார்க்) பெயர்களை சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன் என்றார்.

அதற்கு சிவாவோ… நீங்களே ஒரு பதிலை எதிர்பார்த்து அதை நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? என கேட்டார்.

அதுபோல்தான்.. இவர்களே ரஜினியை பற்றி ஒரு யூகத்தை வைத்துக் கொள்வார்கள். அது நடக்கவில்லை என்றாலும் அதை மீண்டும் மீண்டும் சொல்லி மக்களை குழப்ப பார்க்கிறார்கள்.

ரஜினி சொன்னது போல.. மீடியாக்கள் நடுநிலையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

 

 

Fake medias spreading Rajini Political Partys CM Candidate

அரியர் மாணவர்களின் அரசனே… எடப்பாடியாரை வாழ்த்திய மாணவர்கள்

அரியர் மாணவர்களின் அரசனே… எடப்பாடியாரை வாழ்த்திய மாணவர்கள்

arrear students cmகொரோனா வைரஸ் பரவலால் உலகமே திணறி வருகிறது.

ஆனால் பள்ளி பயிலும் மாணவர்கள் மட்டும் ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டம் தான் எனலாம்.

ஏனென்றால் பள்ளித் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையடுத்து காலேஜ் மாணவர்களும் தங்களை ஆல் பாஸ் ஆக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

ட்விட்டர் தளங்களில் ட்ரெண்ட்டிங்கிலும் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையடுத்து அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்.

அரியர் மாணவர்களின் அரசனே என வாசகங்களை டிசைன் செய்துள்ளனர்.

More Articles
Follows