ஜார்ஜியாவில் ‘தளபதி 65′..; வைரலாகும் விஐய் & நெல்சன் ஸ்டில்ஸ்

Thalapathy 65 (2)நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65′ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தளபதி 65′ என அழைத்து வருகின்றனர் படக்குழுவினர்.

விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ் முக்கியக் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்பட பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு படக்குழுவினர் ஜார்ஜியாவுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு 3 வாரங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஜார்ஜியா செல்வதற்கு முன் சென்னை ஏர்போர்டில் விஜய் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

தற்போது ஜார்ஜியாவில் தளபதி விஜய்யுடன் நெல்சன் நிற்கும் புகைப்படத்தை படக்குழுவினர் பகிர அதை இணையத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Thalapathy 65 shooting spot pic goes viral

Overall Rating : Not available

Latest Post