‘தளபதி 65’ பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா.; என்ன சொல்கிறார் பூஜா..?

‘தளபதி 65’ பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா.; என்ன சொல்கிறார் பூஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pooja hegdeமாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார்.

தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்தப் பட ஷூட்டிங்கிற்காக கடந்த சில தினங்களாக ஜார்ஜியாவில் இருந்தனர் படக்குழுவினர்.

இதில் நாயகிக்கான காட்சிகள் இல்லை என்பதால் அவர் ஜார்ஜியா செல்லவில்லை.

நேற்று விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நாயகி பூஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதி. எனவே வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

என்னை சமீபத்தில் சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நான் குணமாகி வருகிறேன்.

தயவு செய்து வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள் என அறிவுறுத்தி உள்ளார் பூஜா ஹெக்டே.

Thalapathy 65 heroine tests positive for COVID 19

விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek Vijay (2)‘சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் ஏப்ரல் 17 அதிகாலை 4.45 மணியளவில் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

அப்போது நடிகர்கள் நேரிலும் சிலர் ட்விட்டரிலிம் இரங்கல் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 பட படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி ஊர்வலத்திற்கு அவரால் வரமுடியவில்லை.

இந்த நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை சாலிக்கிராமத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

அவர்களிடம் துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மது தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay paid a condolence visit to late actor Vivek’s home.

BREAKING ஏப்.26 முதல் தியேட்டர்கள் & வழிபாட்டு தலங்கள் ஜிம் பார்கள் சலூன் மூடல்.; இ-பாஸ் கட்டாயம்.. தமிழக அரசு ஆர்டர்

BREAKING ஏப்.26 முதல் தியேட்டர்கள் & வழிபாட்டு தலங்கள் ஜிம் பார்கள் சலூன் மூடல்.; இ-பாஸ் கட்டாயம்.. தமிழக அரசு ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு.

உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.

ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை.

புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.

சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து.

கூடுதல் தகவல்..

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : மத்திய அரசு.

Worship places Theatres Bars Saloons to be closed from April 26

அஜித் பிறந்தநாளில் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் இல்லை.; அடித்துக் கொல்லும் தல ரசிகர்கள்.. என்னவாம்.?!

அஜித் பிறந்தநாளில் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் இல்லை.; அடித்துக் கொல்லும் தல ரசிகர்கள்.. என்னவாம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் தல அஜித்.

நாயகியாக ஹீமா குரேஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் வலிமை படம் சம்பந்தமான முக்கிய அறிக்கையை படத்தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

அதில் “எங்கள்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ நாங்கள்‌ கொடுத்த முந்தைய அறிக்கையில்‌…

“வருகின்ற மே 1ஆம்‌ தேதி அஜித்‌ குமார்‌ அவர்களின்‌ 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது நடிப்பில்‌ , வினோத்‌ இயக்கத்தில்‌ , எங்கள்‌ நிறுவனத்தின்‌ தயாரிப்பில்‌ உருவான ‘வலிமை’ படத்தின்‌ மே 1 அன்று வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்‌.

அந்த அறிவிப்பு வெளிவரும்‌ போது , கொரோனா நோயின்‌ இரண்டாவது அலை வரும்‌ என்றோ, அதன்‌ தாக்கம்‌ சுனாமி போல தாக்கும்‌ என்றோ சிறிதும்‌ எதிர்பார்க்கவில்லை.

இந்த தருணத்தில்‌ தேசமெங்கும்‌ எண்ணற்றோர்‌ பொருளாதாரம்‌ இழந்து, உற்றார்‌ உறவினர்‌ உயிர்‌ இழந்து , நோய்‌ பற்றிய பீதியிலும்‌ அதிர்ச்சியிலும்‌ ஆழ்ந்து இருக்கின்றனர்‌.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில்‌ ஜீ ஸ்டுடியோஸ்‌, பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்‌, இப்படத்தில்‌ நடித்து உள்ள கலைஞர்கள்‌, பணியாற்றிய தொழில்‌ நுட்ப கலைஞர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து எடுத்து உள்ள முடிவின்‌ படி “வலிமை” படத்தின்‌ First Look வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து அனைவரின்‌ நலத்துக்காகவும்‌, பாதுகாப்புக்காகவும்‌ பிரார்த்திப்போம்‌” என்று கூறப்பட்டுள்ளது.

இதை பல ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சில அஜித் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘வலிமை’ பர்ஸ்ட் லுக் என்பது ஆன்லைனில் ரிலீசாகும் விஷயம். அதை வைத்து யாரும் வெளியே கொண்டாடப் போவதில்லை.

நிச்சயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத்தான் போகிறோம்.. அப்டேட் கேட்டு கேட்டு கிடைக்கும் என காத்திருந்த எங்களுக்கு ஏன் இந்த நிலைமை? என குமுறி வருகின்றனர்.

Valimai First look postponed Ajith fans upset

ரஜினி விலகியது விவேகமான முடிவு.. கொரோனாவுக்கு அரசியல்வாதிகளே காரணம்.; மரண விளிம்பில் இருந்த தமிழருவி மணியன் அறிக்கை

ரஜினி விலகியது விவேகமான முடிவு.. கொரோனாவுக்கு அரசியல்வாதிகளே காரணம்.; மரண விளிம்பில் இருந்த தமிழருவி மணியன் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன்
இருந்தேன்.

நிறைய நூல்களை வாசிப்பதில்
என் நேரம் பயனுள்ள
முறையில் செலவழிந்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாத முடிவில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்த நிலையில் ஈரோடு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றேன்.

கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டபோது ‘விதி பிடர் பிடித்து உந்த நின்றது’ என்பான் கம்பன். என்னையும் விதி ஈரோடு நோக்கிப் பிடர் பிடித்து இழுத்ததை அப்போது நான் அறியவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த அரங்கில் நான் பேசி முடித்ததும் பலர் என்னுடன் செல்ஃபி எடுத்தனர். நான் முகக் கவசமின்றிக் காட்சி தரவேண்டுமென்று வற்புறுத்தினர்.

மறுக்க முடியாத நிலையில் நான் அதற்கு மனமின்றி இணங்க நேர்ந்தது. அதற்காக நான் கொடுத்த விலை மிக அதிகம். வீடு திரும்பியதும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை உணர முடிந்தது.

இதய அறுவை சிகிச்சையும்
வால்வு மாற்றமும் செய்துகொண்ட என்
மனைவிக்கும் என்னால்
கொரோனா பாதிப்பு
ஏற்பட்டது.

பொருளாதார வசதியற்ற நாங்கள் ஓர் அரசு மருத்துவ மனையைத் தஞ்சமடைந்தோம்.

பரிசோதனைக்குப் பின்பு எங்களுக்கு ஆரம்ப நிலையில்தான்
பாதிப்பு என்று சொல்லி,
சில மாத்திரைகளை வழங்கி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

அவர்கள் பரிந்துரையை வேதமாக ஏற்றுப் பத்து நாட்கள் இருந்ததில் நோய் முற்றிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட சித்த மருத்துவர் வீரபாபு என்னை வீட்டிற்கு வந்து சந்தித்தார்.

அவருடைய உழைப்பாளி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றார். அரை மனதுடன் நான் என் மனைவியுடன் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு
இசைந்தேன்.

சி.டி. ஸ்கேன் எடுத்ததில் என் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது தெரிந்தது. நிமோனியா காய்ச்சல் என்னை மரணத்தின் விளிம்புவரை கொண்டு
சென்றது.

உடல் முழுவதும் வெப்பத்தால் பற்றி எரிந்தது. தலையில் நெருப்புச் சட்டியைச் சுமப்பதுபோல் இருந்தது. செவிமடல்களில் தாங்க முடியாத வெப்பம் வீசியது.

மூக்கில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில் 13 நாட்கள் மரணத்தோடு போராடினேன். நோயில் விழுந்து பாயில் படுத்துச் சாவில் முடிவதுதான் எனக்கான விதி என்றுணர்ந்தேன்.
மரணம் என் கண் முன்னால் நிதர்சனமாக நிழலாடியது.

யாரையும் களப் பலியாக்க விரும்பாமல் தேர்தல் களத்திலிருந்து ரஜினி
விலகி நின்றது எவ்வளவு
விவேகமான முடிவு என்பது தெளிவாகப் புரிந்தது.

அவர் மீது அன்றுவரை எனக்கிருந்த ஆழ்ந்த
வருத்தமும் அகன்றது.
நான் பிழைக்கமுடியும்
என்ற நம்பிக்கையை
முற்றாக இழந்துவிட்டேன்.

என் மனைவிக்குக் கொரோனா ஆரம்ப
நிலையில் இருந்ததால்
நான்கு நாட்களில் பூரண நலமடைந்து வீடு
திரும்பிவிட்டது ஓரளவு
ஆறுதலாய் அமைந்தது.

நான் நிச்சயம் கொரோனாவின் கொடிய பிடியிலிருந்து
மீண்டுவிடுவேன் என்று
நம்பிக்கையளித்த மருத்துவர் வீரபாபு இரவு பகல் பாராமல் எனக்கு உரிய சிகிச்சையை வழங்கி வந்தார்.

அவருக்கு வாய்த்த செவிலியர்
அனைவரும் அற்புதமானவர்கள். நோயுற்ற குழந்தையை ஒரு தாய் பராமரிப்பது போல் என்னை அவர்கள் பராமரித்தனர்.

மருத்துவர் வீரபாபுவும், திருமதி வசந்தாவின்
தலைமையில் இயங்கும்
செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவையால் இரண்டு வாரங்களுக்குப் பின்பு நிமோனியா காய்ச்சல்
தணிந்தது.

அதற்குப்பின் தொடர்ந்த சிகிச்சையால் நான் பூரணமாக நலம் பெற்றேன். என்னைச் சாவின் கொடிய பிடியிலிருந்து
காப்பாற்றிக் கரை சேர்த்தது சித்த மருத்துவம்தான்.

ஆனால் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றிற்கு அரசின்
ஒத்துழைப்பு இல்லை
என்பதுதான் அவலம்.

சென்ற ஆண்டு ஆங்கில மருத்துவத்துடன் சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி
மருத்துவத்தையும் கொடிய கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்த முயன்ற சுகாதாரத் துறை இப்போது வெறும் அலோபதியை மட்டுமே நம்பியிருப்பது
ஏன் என்ற கேள்வி எழுகிறது.

என்னைப் போன்ற வலிமையான
பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து இலட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டியழுவதற்கு இயலுமா?

அரசு மருத்துவமனைகளை
விட்டால் வேறு போக்கிடம் இல்லாத
என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரம் போல் வாய்த்திருப்பதுதான்
வீரபாபு போன்றவர்களின் மருத்துவமனைகள்.

என் மனைவிக்கும் மகளுக்கும் நான்கு நாட்களும், எனக்கு ஒரு மாதமும் சிகிச்சையளித்ததுடன்

மூன்று வேளையும் தரமான உணவும் வழங்கிய வீரபாபு என்னிடமிருந்து ஒரேயொரு ரூபாயையும் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். நான் மிகவும் வற்புறுத்தி அற்பமான தொகையை
அவரது மேசை மீது வைத்துவிட்டு வீடு திரும்பினேன்.

எனக்கு ஏற்படும் இழப்புகளையும் வலிகளையும் பிறரிடம்
எப்போதும் நான் வெளிப்படுத்துவதில்லை.

அதனால்தான் நான்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம்வரை சென்று
திரும்பியதைச் செய்தியாக்கவில்லை.

இப்போது ஒரு சமூக
நோக்கத்திற்காகவே எனக்கு நேர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன்.

இன்று காட்டுத்தீயைப் போல் கொரோனா பரவிவரும் நிலையில் அரசு மருத்துவமனைகளிலும்
தனியார் மருத்துவமனைகளிலும்
போதிய இடமில்லாத சூழலில் நம் மண் சார்ந்த சிகிச்சைகளின்
பக்கம் அரசு முகம் திருப்பவேண்டும்.

இனி
வருங்காலங்களில் சித்த, ஆயுர்வேத மருத்துவம் பல்கிப் பெருக அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி உடனடியாக சித்த மருத்துவமனைகளின்
சேவையைப் பெருமளவில் பயன்படுத்த முன் வரவேண்டும்.

என் உயிரை மீட்டுத் தந்த வீரபாபுவின் சித்த மருத்துவமனைதான்
அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகராக விளங்கிய மக்கள் நீதி மையத் துணைத் தலைவர் பொன்ராஜ் அவர்களின்
உயிரையும் காப்பாற்றியது.

நிறைவாக நான் கூற
விரும்புவது…. ஆரம்ப
நிலையில் கவனிக்கத்
தவறினால் கொரோனா
நம்மைக் கொன்றுவிடும்.

வீடு திரும்பி ஒரு மாதமாகியும் நான் இன்னும் பழைய உடல்
நிலையைப் பெறவில்லை. தளர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லை. வருமுன் காப்பதே விவேகம்.

தடுப்பூசியைப்
பயன்படுத்தத் தயங்காதீர்கள். முகக்
கவசம் அணியாமல் எங்கும் போகாதீர்கள்.
சமூக இடைவெளி மிகவும் முக்கியம்.

யாரோடும் செல்ஃபி எடுக்க முயலாதீர்கள்.
ஒவ்வொரு நாளும் வீட்டில் ஆவி பிடிக்கத்
தவறாதீர்கள். அவசியமின்றி வெளியில் செல்லாதீர்கள்.

இன்று கொரோனா இவ்வளவு
வேகமாகப் பரவியதற்கு
அரசியல்வாதிகள் நடத்திய தேர்தல் பரப்புரைகளே முக்கிய
காரணம் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.

மக்கள் நலனுக்காக எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும் இல்லை என்பதைத் தெளிவாகத்
தெரிவித்திருக்கிறது
கொரோனா.

நமக்கு
நாமின்றி நல்ல துணை
யாருமில்லை.

– தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian statement about his corona affected health

‘ஜகமே தந்திரம்’ ஜுனில் ரிலீஸ்..; அரை டஜன் படங்களை அசால்ட்டாக வைத்திருக்கும் தனுஷ்

‘ஜகமே தந்திரம்’ ஜுனில் ரிலீஸ்..; அரை டஜன் படங்களை அசால்ட்டாக வைத்திருக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jagame Thandhiram (2)‘அசுரன்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய படங்களின் வெற்றியாலும் பாராட்டுக்களாலும் தனுஷ் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஜுன் மாதம் 11ல் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் தற்போது ‘அத்ராங்கி ரே’ என்ற ஹிந்திப் படத்தில் அக்சய்குமாருடன் நடித்து முடித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

அங்கு நடித்துக் கொண்டிருக்கும் போதே ‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைகிறேன் என இன்று ட்விட்டரில் அறிவித்தார் தனுஷ்.

அந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இத்துடன் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படம், பாலாஜி மோகன் இயக்கத்திலும் ஒரு புதிய படம்.

செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற ஒரு படம்.

2024ம் ஆண்டில் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம். அதாவது ‘ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2’ படத்தில் நடிக்கிறார்.

Jagame Thandiram gearing up for a global release on NETFLIX, June 2nd week

More Articles
Follows