விஜய்யின் ‘தளபதி 65’ படப்பூஜையில் கலந்து கொள்ளாத ஹீரோயின் விளக்கம்

விஜய்யின் ‘தளபதி 65’ படப்பூஜையில் கலந்து கொள்ளாத ஹீரோயின் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PoojaHegdeகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார்.

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில் இன்று இந்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றறது.

இதில் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

ஆனால் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்…

‘தளபதி 65’ பட பூஜையில் இன்று கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன்.

இந்த பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Reason behind Thalapathy 65 heroine not attend the movie pooja

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘கபாலி’ விஸ்வந்த்தின் பர்த் டே பார்ட்டி

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘கபாலி’ விஸ்வந்த்தின் பர்த் டே பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaatthe (2)எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ‘கபாலி’ விஸ்வாந்த், தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியிருப்பது வைரலாகி வருகிறது.

‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வந்த், ’அட்ட கத்தி’ படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, ‘கபாலி’ படத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டப்பட்டவர்.

தற்போது பல
படங்களில் கதையின் நாயகனாகவும், வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வரும் விஸ்வாந்த், பிறந்தநாளை
‘அண்ணாத்த’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை
விஸ்வாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், நடிகர்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா, நடிகர் விஸ்வாந்தை வைத்தும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான உடையில், வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விஸ்வாந்த் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் விஸ்வாந்த், சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்.

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் விஸ்வாந்த், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

மேலும், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பவர், இயக்குநர் சிவா உள்ளிட்ட அண்ணாத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ரஜினி சார், நயன்தாரா மேடம், பிரகாஷ்ராஜ் சார், சூரி சார், வேல ராமமூர்த்தி சார், ஆகியோருடன் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.

இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு காரணமாக இருந்த இயக்குநர் சிவா சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Kabali fame Viswanth celebrated his birthday at Annaatthe shoot

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருக்கு.. – பாஜக மேடையில் ராதாரவி ஓபன் டாக்

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருக்கு.. – பாஜக மேடையில் ராதாரவி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara udhayanidhi (2)ஏப்ரல் 6ஆம் தேதி் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கட்சி சார்பாக ராதாரவி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது…

நான் நயன்தாராவை பற்றி ஒன்றுமே பேசவில்லை.. ஆனால் என்னை திமுக வில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் ஸ்டாலின்.

எனவே நானே முழுமையாக விலகி வந்துவிட்டேன்.

திமுகவில் நயன்தாராவின் பங்கு என்ன? அவர் கட்சி உறுப்பினர்? இல்லை.

ஆனால் உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருக்கு. அதான்..” இவ்வாறு ராதாரவி பேசினார்.

கடந்த 2019ல் ‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் ஒருமுறை நயன்தாராவை நடவடிக்கை குறித்து இழிவுபடுத்தி பேசினார் ராதாரவி.

அப்போது திமுக-வில் இருந்தார் ராதாரவி.

எனவே திமுக தலைவரான ஸ்டாலின் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினார்.

இதனால் தானே அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi stalin and Nayanthara are in relation ship says Politician Radha Ravi

பொன்ராம் படத்தில் பொன்னான வாய்ப்பு.. சசிகுமார் தந்த பிறந்தநாள் பரிசு..; மகிழ்ச்சியில் முருகன் மந்திரம்!

பொன்ராம் படத்தில் பொன்னான வாய்ப்பு.. சசிகுமார் தந்த பிறந்தநாள் பரிசு..; மகிழ்ச்சியில் முருகன் மந்திரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasi Kumar MGR maganவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.

சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, “ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம” பாடலை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

இந்த பாடலை “எனக்குப் பிடித்த பாடல்” என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது…

‘பொன்ராம் சார் படத்துக்காக ஒரு பாட்டு எழுதணும்ணு அந்தோணிதாசன் அண்ணா சொல்லும்போதே மனசுக்குள்ள ஒரு கொண்டாட்டம்.

ஏன்னா பொன்ராம் சார் படத்தின் பாட்டெல்லாம் கண்டிப்பா பெரிய ஹிட் ஆகும். வேற லெவல்ல ரீச் ஆகும். கூடவே சசிகுமார் சார்… லவ் டூயட் …. கன்ஃபார்ம் படம் பெரிய ஹிட் ஆகும், பாடலாசிரியராக என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு போகும்ணு நம்பிக்கை வந்தது.

பொன்ராம் சார், பாடல் வரிகள் பற்றி கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசுனாங்க, “ஏன்டா நீயும் பார்க்கும் போது, சட்டை வேர்க்குது”, “வீச்சருவா போல ஓன் நெனைப்பு கீற”… இதுபோல பாடலில் வரும் விஷயங்களை நீங்க என்ன அர்த்தத்தில் எழுதி இருக்கீங்கன்னு கேட்டாங்க. என் விளக்கத்தைக் கேட்டுட்டு சில இடங்களில் மட்டும் வேற வார்த்தை போடலாம்னு சொன்னாங்க. பாடல் வரிகளுக்காக முழுசா கதையை சொல்லி, படத்தில் பாடல் வரும் இடத்தையும் சூழலையும் சொன்னாங்க.

ரொம்ப அன்பான மனிதர். அழகான ஒரு பாடல் எழுத வாய்ப்பு தந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.

படப்பிடிப்பு தளத்தில் சசிகுமார் சாரை சந்தித்தோம். அப்பவே பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். “தெக்குதெச காத்தே… போடி என்னை சேர்த்தே” வரிகளை பாடி சந்தோஷப்படுத்தினார்.

உலகம் முழுவதும் திரும்ப திரும்ப பேசப்பட்டுக் கொண்டே இருக்கும், சுப்பிரமணியபுரம் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நண்பர்களின் நண்பர் சசிகுமார் சாரின் பாராட்டு எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

படப்பிடிப்பில் என்னிடம் நேரில் சொன்னதை இப்போது மக்களிடம் சொல்லி என்னை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார். உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார். (மார்ச் 30) என் பிறந்தநாள்.

உங்களுடைய வாழ்த்தும் பாராட்டும் இந்தப் பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பெரிய பரிசா நெனைக்கிறேன். மீண்டும் நன்றி சார்.

மிக முக்கியமாக இந்த வாய்ப்புக்கு முதல் காரணமான அந்தோணிதாசன் அண்ணாவுக்கு பெரிய நன்றி.

நடனம் அமைத்திருக்கும் பிருந்தா மாஸ்டர், சத்யராஜ் சார், சமுத்திரக்கனி சார், கதாநாயகி மிர்ணாளினி, தயாரித்திருக்கும் ஸ்கிரீன் ஸீன் நிறுவனம், சோனி மியூசிக் நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Lyricist Murugan Manthiram talks about MGR Magan song

‘உழைக்கும் கரங்கள்’ டைட்டிலை உல்டா செய்து நடிக்கும் ரீல் எம்ஜிஆர்

‘உழைக்கும் கரங்கள்’ டைட்டிலை உல்டா செய்து நடிக்கும் ரீல் எம்ஜிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

uzhaikkum kaigal (2)“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்….
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்…” என அழியாத புகழோடு என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருபவர் எம்ஜிஆர்.

தமிழக அரசியலையும் சினிமாவையும் இவர் பெயரின்றி பிரித்து பார்க்க முடியாது.

உழைக்கும் கரங்கள் என்ற படத்தில் விவசாயியாக நடித்தார் எம்.ஜி.ஆர்.

அதே படப்பெயரை கொஞ்சம் உல்டா செய்து ‘உழைக்கும் கைகள்’ என்ற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது.

இதில் எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடைகளில் தோன்றும் நாமக்கல் எம்.ஜி.ஆர் என்பவர் நாயகனாக நடிக்கிறார்.

கிரண்மயி நாயகியாக நடிக்கிறார்.

மேலும் டைரக்டர் செந்தில்நாதன், ஜாகுவார் தங்கம், தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்க தலைவர் பிரேம்நாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

தென்காசி, குற்றாலம், நாமக்கல், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

எம்.ஜி.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் நாட்டில் நிலவி வரும் விவசாயிகள் பிரச்சினைகளை எப்படி கையாண்டிருப்பார் ? என்பது தான் படத்தின் கதையாம்.

Reel MGR’s film titled Uzhaikkum Kaigal

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் விதி மீறல்..; 2வது முறையும் அபராதம் விதித்தது சுகாதாரத்துறை

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் விதி மீறல்..; 2வது முறையும் அபராதம் விதித்தது சுகாதாரத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi (1)நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படப்பிடிப்பு பழனி அருகே காரமடை தோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதனையறிந்த ஏராளமான பொதுமக்கள் விஜய்சேதுபதியை காண அங்கே குவிந்தனர்.

அப்போது நடிகர் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவேளை பின்பற்றவில்லை எனவும் முகக்கவசம் அணியவில்லை எனவும் சுகாதாரத்துறை தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்பொழுது படப்பிடிப்புத் தளத்தில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என ரூபாய் 1500 அபராதம் விதித்து உள்ளனர்.

இதே படக்குழுவினர் தான் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டில் சூட்டிங் நடத்தியபோது அபராதம் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Fine for not wearing face shield in the shooting of Vijay Sethupathi’s movie

More Articles
Follows