விஜய்-செல்வராகவன் இணையும் படம்..; வேற மாரி ட்விஸ்ட் தரும் நெல்சன்.?

விஜய்-செல்வராகவன் இணையும் படம்..; வேற மாரி ட்விஸ்ட் தரும் நெல்சன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Selva Raghavanகோலிவுட்டில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

இவரும் பல முன்னணி இயக்குனர்களை போல கதையின் நாயகனாகி விட்டார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘சாணி காகிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க செல்வா
நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் தளபதி விஜய்யுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆனால் இயக்குனராக இல்லை. நடிகராக இணைகிறாராம்.

அதாவது… செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதில்லையாம்.

விஜய் நடிக்கும் படத்தில் செல்வராகவனும் நடிக்கிறாராம்.

நெல்சன் இயக்கும் விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Selva Raghavan is part of Thalapathy 65?

ராதா மோகன்-வைபவ்-வாணி போஜன் இணையும் ‘மலேஷியா டு அம்னீஷியா’

ராதா மோகன்-வைபவ்-வாணி போஜன் இணையும் ‘மலேஷியா டு அம்னீஷியா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav and Vani bhojanZEE5ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’.

ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.

மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.

பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன்
இசை – பிரேம்ஜி
கலை – கதிர்

Vaibhav and Vani bhojan joins for Malaysia to Amnesia

நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khan tamil actorவிஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள செய்தவர் மன்சூர் அலிகான்.

பல படங்களில் வில்லனாக நடித்த இவர் பின்னர் படங்களை தயாரித்தும் இயக்கியும் ஹீரோவாக நடித்தார்.

சமீப காலமாக காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரை பில்ரோத் மரு‌த்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் கிட்னியில் பெரிய சைஸ் கல் அடை‌ப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டுள்ளார்.

எனவே உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில், அவருக்கு ‘கொரோனா நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது!

இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு கிட்னி கல் அகற்றும் அறுவை சி‌கி‌ச்சை நடைபெற உள்ளது.

Actor Mansoor Ali Khan admitted in private hospital

‘தி நைட்’-டில் இணையும் ஜோடிகள் ‘பிக்பாஸ்’ சாக்‌ஷி அகர்வால் & பாலாஜி

‘தி நைட்’-டில் இணையும் ஜோடிகள் ‘பிக்பாஸ்’ சாக்‌ஷி அகர்வால் & பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The night“குட் ஹோப் பிக்சர்ஸ்” சார்பாக கோகுல கிருஷ்ணன்மற்றும் கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து
“தி நைட்” எனும் இப்படத்தை தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாரித்திருக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரங்கா புவனேஷ்வர்.

இவர் தமிழில் “ஆறாவது வனம்” மற்றும் மலையாளத்தில் வெளியான சில படங்களை R புவனேஷ் எனும் பெயரில் இயக்கியிருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில்….

இது தமிழில் இதுவரை சொல்ல மறந்த, சொல்லப்படவேண்டிய கதையுடன் கூடிய
திரைப்படம்.

இது காடுகள் சார்ந்த கதைக்களம் ப்ளஸ் கம்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த அனிமல் திரில்லர்.

கதை பல சுவாரஸ்யமான சம்பவங்களோடு யாரும் யோசிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது.

இத்திரைப்படத்தில் கதையின்
நாயகனாக விது என்கிற பாலாஜி
அறிமுகமாகிறார். இவர் இசையமைப்பாளரும் கூட!

நாயகியாக (பிக்பாஸ் புகழ்)
சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும் ஒரு புதுமையான வேடத்தில்
(நகைச்சுவை நடிகை)
மதுமிதா மிரட்டியிருக்கிறார்.

வில்லனாகபாலிவுட்டில் இருந்து
பிரபல நடிகர் ரன்வீர் குமார் அறிமுகமாகிறார்.

இவர்கள் தவிர பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

படத்தில் மிரட்டலான பின்னணி
இசையும், அருமையான பாடல்களையும் தந்து இசையமைப்பாளராக அன்வர் கான்டாரிக் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவில் பல சிரமங்களைக் கடந்து
காடுகளில் மிகச் சிறப்பாக
படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ்.G

அவரோடு பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.

கொரோனா காலகட்டத்திலும்
இக்கட்டான சூழ்நிலையில் கடுமையான குளிரில் பல போராட்டமான
நிகழ்வுகளோடு தொழில்நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களின் ஒத்துழைப்புடனும் இடைவிடாது 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி
முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு
செய்துள்ளனர்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர்.

Bigg Boss Sakshi Aggarwal and Balaji joins for The Night

நடிகர்கள் வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் காலமானார்..; சிம்பு உருக்கமான இரங்கல்

நடிகர்கள் வெங்கட் பிரபு-பிரேம்ஜியின் தாயார் காலமானார்..; சிம்பு உருக்கமான இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabhu motherஇசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.

இவர் இயக்குனர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்.

பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் தோன்றி இஇன்றைய தலைமுறையினரிடையே பிரபலமானவர்.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு, நடிகர் இயக்குனர் என திரையுலகில் பிலபலம்.

இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளர் நடிகர் என பிரபலமானவர்.

வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் இவரது தம்பி பிரேம்ஜி நிச்சயமாக இருப்பார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மே 9 இரவில் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..

இதோ அந்த அறிக்கை….

STR’s condolence message to VP mother
IMG-20210510-WA0047

நடிகரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தயாரிப்பாளருமான அந்தோணி சேவியர் மரணம்.; சுசீந்திரன் இரங்கல்

நடிகரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தயாரிப்பாளருமான அந்தோணி சேவியர் மரணம்.; சுசீந்திரன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக்யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்தவர் அந்தோணி சேவியர். இவருக்கு வயது 51.

சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தை தயாரித்தார்.

பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹார்ட் அட்டாக் ஆகி நேற்று மரணமடைந்தார்.

அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கிறார்கள். இன்று மதியம் நல்லடக்கம் நடைபெறுகிறது.

Lourdhu nagar 7th street, Alagar Kovil main road, K.Pudur, Tamil Nadu 625007.

இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வயதில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள் .

இவரது மறைவுக்கு சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Nenjil Thunivirundhaal producer Anthony Xavier passed away

IMG-20210510-WA0046

More Articles
Follows