விஜய்யை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியாகும் ‘தளபதி 65’ ஹீரோயின்.?

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கும் ஜோடியாகும் ‘தளபதி 65’ ஹீரோயின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 65’.

அனிருத் இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இந்தப் படத்தில் தான் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Pooja hegde to romance Suriya ?

Suriya

மாற்றுத் திறனாளி வீரர்கள் துபாய் செல்ல உதவிய கமல்..; அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.?

மாற்றுத் திறனாளி வீரர்கள் துபாய் செல்ல உதவிய கமல்..; அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan (2)மாற்றுத் திறனாளிகளுக்காக துபாய் நாட்டில் நடைபெற்ற DPL போட்டிக்கு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களை 31.03.2021 அன்று நேரில் சந்தித்தனர்.

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் போட்டியாளர்கள் துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா கிடைத்திட உடனடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் உதவினார்.

துபாய் சென்று போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர்.

துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய வீரர்கள் கோப்பையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

Chennai stars cricket team met MNM leader Kamal Haasan

இரவு நேர ஊரடங்கு..: பகல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு & தனியார் நிறுவனங்கள் திட்டம்

இரவு நேர ஊரடங்கு..: பகல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு & தனியார் நிறுவனங்கள் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Setc (2)நாளை ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளனர்.

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை முதல் பகல் நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

மேலும் கோயம்பேட்டில் இருந்து பகல் நேரங்களில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

Govt and private buses from chennai to south districts increased

‘கர்ணன்’ மெகா ஹிட்.: படக்குழுவை தேடிச் சென்று பாராட்டிய பிரசாந்த் & விக்ரம்

‘கர்ணன்’ மெகா ஹிட்.: படக்குழுவை தேடிச் சென்று பாராட்டிய பிரசாந்த் & விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnan Dhanush (3)மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’.

விமர்சகர்கள் மத்தியிலும் வசூலிலும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது ‘கர்ணன்’.

திரையுலக பிரபலங்களும் இப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து பாராட்டி வருகின்றனர்.

தங்கள் ட்விட்டரில் நடிகர் விஜய் சேதுபதி, உதயநிதி ஆகியோரும் பாராட்டியிருந்தனர்.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜை அவரது வீட்டிற்கே சென்ற பாராட்டியிருந்தார் நடிகர் விக்ரம்.

இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தை பார்த்து அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ‌பிரஷாந்த்.

Actors Prashanth and Vikram met Karnan team and congratulated them for huge success

கொரோனா இரவு ஊரடங்கு.: சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ பட ரிலீஸ் ஒத்தி வைப்பு

கொரோனா இரவு ஊரடங்கு.: சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ பட ரிலீஸ் ஒத்தி வைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR Maganபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருளாளிணி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எம்ஜிஆர் மகன்’.

இப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

ஆனால், தமிழக அரசின் நேற்றைய கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு இப்படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அடைப்பு எனவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இப்பட ரிலீசை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.

’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மற்றும் வினியோகஸ்தர் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகிஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sasi Kumar’s MGR Magan release has been postponed

தமிழக முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் பழனிச்சாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyசென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இதன்பின்னர் ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனையிலேயே சில தினங்கள் ஓய்வெடுக்க உள்ளாராம் முதல்வர்.

TN CM Edappadi Palaniswami admitted in Chennai hospital

More Articles
Follows