‘தளபதி 65’ பட சாங் சூட்டிங் அப்டேட் கொடுத்த மாஸ்டர்

‘தளபதி 65’ பட சாங் சூட்டிங் அப்டேட் கொடுத்த மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன்.

இந்த படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார் நெல்சன்.

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறவுள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ள நிலையில் இயக்குனர் நெல்சன், படப்பிடிப்புக்காக லொகேஷன் தேட ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இப்பட டான்ஸ் மாஸ்டர் ஜானி என்பவர் தன் சமூக வலைதள பக்கத்தில் அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

அதில்…

All excited to join #Thalapathy65 team

ThanQ #Thalapathy @actorvijay Sir @Nelsondilpkumar Sir for believing in me .

will surely make the opportunity totally worth it

Rehearsals for a Super crazy song begins on 24th April & shoot to commence from May 3rd-9th
@sunpictures https://t.co/tPBv9H79zI

என ஜானி பதிவிட்டுள்ளார்.

Choreographer Jani gets on board for Thalapathy 65

தல அடுத்த படத்திலும் ‘வலிமை’ கூட்டணி..; நொந்து கொள்வதா? கடந்து செல்வதா? அஜித் ரசிகர்கள் அப்செட்

தல அடுத்த படத்திலும் ‘வலிமை’ கூட்டணி..; நொந்து கொள்வதா? கடந்து செல்வதா? அஜித் ரசிகர்கள் அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ‘வலிமை’ படத்திலும் அதே கூட்டணியே தொடர்கிறது.

அதாவது நடிகர் அஜித் + டைரக்டர் வினோத் + தயாரிப்பாளர் போனிகபூர் என இந்த கூட்டணி தொடர்கிறது.

வலிமை படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘வலிமை’ பட First லுக் வரும் மே 1ல் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது.

“ச்சும்மா செய்றோம்.”. என வலிமை இசை குறித்து யுவன் கூறியிருந்தார்.

வலிமை படம் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து தல 61 படத்தையும் எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க வாய்ப்புள்ளதாம்.

இதற்கு முன் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை தொடர்ந்து சிவா இயக்கி வந்தார்.

அப்போதே வேறு இயக்குனர்களே கிடைக்கவில்லையா? தல… ஒரே இயக்குனர் என்றால் போராடிக்காதா? என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

தற்போது தொடர்ந்து அஜித்தின் 3 படங்களையும் வினோத் இயக்க வாய்ப்பிருப்பதால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? என தெரியாமல் தவிக்கின்றனர்.

ஆனால் இந்த கூட்டணி உறுதியாகுமா? எனத் தெரியவில்லை.

Valimai team to reunite for Thala 61 ?

ajith boney kapoor (2)

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட சூப்பர் அப்டேட்

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Buffoonரஜினியின் ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இதன் பின்னர் அடுத்ததாக விக்ரம், துருவ், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இது விக்ரமின் 60-வது படம்.

இந்த நிலையில் தன் சொந்த பேனர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் சார்பாக ஒரு படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அசோக் வீரப்பன் இயக்கும் இப்படத்துக்கு ‘பபூன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

வைபவ் நாயகனாக நடிக்க கதாநாயகியாக அனகா நடிக்கிறார்.

இசை – சந்தோஷ் நாராயணன்.

கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர்.

இந்த ‘பபூன்’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Director Karthik Subbaraj next film announced

டைரக்டராகிறார் ‘அட்டகத்தி’ தினேஷ்..; தெலுங்கு பட ஸ்டைலில் அதிரடி தலைப்பு

டைரக்டராகிறார் ‘அட்டகத்தி’ தினேஷ்..; தெலுங்கு பட ஸ்டைலில் அதிரடி தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vayirudaரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் மூலம் நாயகன் ஆனார் தினேஷ்.

திருடன் போலீஸ், குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஜினியுடன் ‘கபாலி’ படத்திலும் நடித்திருந்தார்.

தினேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘நானும் சிங்கிள் தான்’.

இந்நிலையில் “வயிறுடா” என்கிற படத்தை இயக்குகிறார் தினேஷ்.

இப்படம் தொடர்பான போஸ்டர்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தினேஷ்.

அந்த போஸ்டரில் ‘வயிறுடா என்கிற படத்தலைப்பும், அதற்கு கீழ் Director V.R.Dinesh என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது.

பொதுவாக தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்தால் டா என்ற வார்த்தை அதிகம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Attakathi Dinesh turns director ?

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளருடன் இணையும் ‘காடன்’ ஒளிப்பதிவாளர் & திண்டுக்கல் லியோனி மகன்

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளருடன் இணையும் ‘காடன்’ ஒளிப்பதிவாளர் & திண்டுக்கல் லியோனி மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinematographer Ashokபிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார்.

முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது.

விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

இப்படங்களில் அசோக்குமாரின் திறமையை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன், காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

இப்படம் குறித்து ஏ.ஆர்.அசோக்குமார் கூறும்போது, என்னை நம்பி காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றிகள்.

முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி. நான் அறிமுக ஒளிப்பதிவாளர் என்று பார்க்காமல், நடிகர்கள் ராணா மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் என்னுடன் நட்பாக பழகியது என்னை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.

காடன் படத்திற்காக தாய்லாந்து, புனே, கேரளா வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. முழு படத்தையும் பார்த்த படக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் என்னை பாராட்டியது சந்தோஷமாக இருந்தது.

குறிப்பாக ராணா, விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் ஆகியோர் பாராட்டில் மெய் சிலிர்த்து போனேன். இவர்களின் பாராட்டு இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தற்போது, சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சீனு ராமசாமி சகோதரர் இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தில் பணியாற்றி வருகிறேன்” என்றார் அசோக்.

Kaadan cinematographer joins Master producer’s next film

‘துருவங்கள் 16’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் யார்.?

‘துருவங்கள் 16’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் ‘துருவங்கள் பதினாறு’.

இதில் ரகுமான், யாஷிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து நரகாசூரன், மாஃபியா படங்களை இயக்கினார் கார்த்திக் நரேன்.

தற்போது தனுஷின் ‘D43’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ‘துருவங்கள் பதினாறு’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம்.

ரகுமான் கேரக்டரில் வருண் தவான் நடிக்க ப்ரினிதி சோப்ரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..

Actor Varun Dhawan to reprise Rahman’s role in the Hindi remake

varun dhawan parineeti chopra

More Articles
Follows