தமிழ்ல பெயர் தான் வைக்கல.. ஆனா இதை செய்ய கூடவா மனசில்ல தளபதி.?

தமிழ்ல பெயர் தான் வைக்கல.. ஆனா இதை செய்ய கூடவா மனசில்ல தளபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

beastசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.

இன்று விஜய்யின் பிறந்த நாள் (ஜூன் 22ஆம் தேதி) ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசானது.

தளபதி 65 படத்திற்கு BEAST என தலைப்பு வைத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.

இந்த இரண்டு போஸ்டர்களிலும் ஆங்கில எழுத்துக்களே இருந்தன.

தலைப்பு உட்பட எங்கேயும் தமிழையே காணவில்லை. இன்று வரையில் தமிழ் வடிவமைப்பில் எதுவும் வெளியாகவில்லை.

10-12 வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்தால் வரி விலக்கு கொடுத்தது தமிழக அரசு.

அப்போது ரோபோட் என பெயர் வைக்கப்பட்ட ரஜினி படம் கூட ‘எந்திரன்’ ஆனது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு வரி விலக்கு முறை விலக்கிக் கொள்ளப்பட்டது.

எனவே தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படவில்லை.

சமீபகாலமாக விஜய் படங்களுக்கும் மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் என வேற்று மொழி பெயர்களே வைக்கப்பட்டன.

இப்போதும் விஜய் படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் எழுத்துக்களில் எதுவும் வெளியாகவில்லை என்பதே வேதனை.

BEAST Title makes controversy among Vijay fans and kollywood

‘வலிமை’ அப்டேட்டுக்கு உதவிய சிம்பு-யுவன்.; தளபதி பிறந்தநாளில் தல ரசிகர்களும் குஷி

‘வலிமை’ அப்டேட்டுக்கு உதவிய சிம்பு-யுவன்.; தளபதி பிறந்தநாளில் தல ரசிகர்களும் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

நாயகியாக ‘காலா’ ஹீரோயின் ஹூமா குரேஷி நடிக்க வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டாலும் படத்தின் பர்ஸ்ட் லுக் இதுவரை வெளியாகவில்லை.

யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

இதனால் அப்செட்டான அஜித் ரசிகர்கள் அடிக்கடி வலிமை அப்டேட்டை கண்ட இடங்களில் எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இந்த நிலையில் ஜூன் 21 அன்று சிங்கிள் பாடலை வெளியிட்டு அன்று மாலையில் சிம்புவின் ‘மாநாடு’ படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது இசையமைப்பாளர் யுவன் பேசும்போது வலிமை அப்டேட் கொடுத்தார்.

ஓபனிங் சாங் கும்தா… பாடல் என்றும் அம்மா சென்டிமெண்ட் பாடல் ஒன்றும் இருப்பதாக தெரிவித்தார்.

இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் BEAST Modeல் இருக்க தற்போது அஜித் ரசிகர்களும் குஷியாக உள்ளனர்.

Yuvan gave mass update about Ajiths Valimai movie

புதுச்சேரி-காரைக்காலில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு.; தளர்வுகள் முழு தகவல் இதோ..

புதுச்சேரி-காரைக்காலில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு.; தளர்வுகள் முழு தகவல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரியில் தற்போதைய ஊரடங்கு ஜூன் 21 இன்றுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு…

மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி பூங்காக்கள் காலை 9 மணி வரை திறக்க அனுமதி.

சினிமா, டிவி சீரியல்களுக்கான படப்பிடிப்பு நடத்த அனுமதி; 100 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி.

அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி.

தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்துக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி.

சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

Puducherry Govt lockdown extended with major relaxations till June 30

Shops & establishments can operate without AC till 9 pm

Dining in Restaurants till 9pm

Public /private transport till 9pm

Marriage:100 guests allowed.
Parks open till 9am

Film/TV shooting with 100 ppl

JUST IN நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மா மரணம்

JUST IN நடிகர் ஹம்சவிர்தனின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய “பூமணி”படத்தில் இரண்டாவது நாயகியாகவும்,நடிகர் கார்த்திக் உடன் “கிழக்கு முகம்”என்கிற படத்தில் நாயகியாகவும் நடித்தார்.மேலும் சில படங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு நாளை மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Actor Hamsavardhans Wife Shanthi passed away

உலக இசைத் தினத்தில் ‘பிக்பாஸ்’ ஆரி வெளியிட்ட ‘தாய்நிலம்’ பாடல்

உலக இசைத் தினத்தில் ‘பிக்பாஸ்’ ஆரி வெளியிட்ட ‘தாய்நிலம்’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thai Nilamநேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப்போராட்டத்தைச் சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகியுள்ளது.

இந்தப் படத்தை மூத்த இயக்குநர் தம்பி கண்ணாந்தானம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அபிலாஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய “தலைவாரி பூச்சூடி” என்கிற கவிதை, பாடலாக இடம் பெற்றுள்ளது.

இன்று உலக இசைத் தினத்தை முன்னிட்டு இந்தப்பாடலை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.

பாடலை நடிகர் ஆரி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடுகிறார்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இதை வெளியிடுகின்றனர்.

இந்த பாடல் குறித்தும், இன்றைய தினம் அது வெளியிடப்பட்டது குறித்தும் இயக்குநர் அபிலாஷ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

“தந்தை-மகள் பாசத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தாலும் பெண் கல்வியின் அவசியம் குறித்தும் இந்தப்படம் வலியுறுத்துகிறது.

எனவே அந்த சூழலுக்கு ஏற்றவிதமாக ஒரு பாடலை எழுதி தருமாறு கவிஞர் பழனிபாரதியிடம் கேட்டோம். அதற்கு அவர் இந்த சூழலுக்கு, அதுவும் பெண் கல்வியை மையப்படுத்தும் இந்தக் கதைக்கு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘தலைவாரிப் பூச்சூடி’ பாடலைத் தவிர வேறு ஒரு பாடல் பொருத்தமாக அமையாது.

எனவே அவரது கவிதையையே நாம் பயன்படுத்துவோம் எனக் கூறினார். அதையடுத்தே பாவேந்தரின் கவிதை வரிகளை பாடலாக மாற்றினோம்.

மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் “தாய் நிலம்” படத்துக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப்பாடலுக்கு அருமையான இசையை வழங்கியிருக்கிறார்..

ஒவ்வொரு வருடமும் உலக இசைத் தினத்தை முன்னிட்டு ஒரு படத்தின் சிறந்த பாடலை சரிகம நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த “தலைவாரிப் பூச்சூடி” என்கிற பாடலைக் கேட்டவுடன், இதையே இந்த வருடத்திய பாடலாக வெளியிடலாம் எனக் கூறினார்கள்..

அந்தவகையில் இந்த பாடலை இசைத் தினத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரெட்டைச்சுழி படத்தில் நடித்த சமயத்தில் இருந்தே ஆரி எனது நீண்டகால நண்பர். அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் பற்றி உருவாகியுள்ள இந்தப்படத்தின் பாடலை அவர் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரிடம் கூறினேன்.

இதைவிட வேறு என்ன எனக்கு முக்கியமான வேலை எனக் கூறி சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

மேலும், இந்தப்படத்தின் துவக்கத்தில் பார்வையாளர்களிடம் கதை பற்றி அறிமுகப்படுத்துவதற்கு, ஈழத்தமிழர்கள் பற்றி நன்கு அறிந்த, அவர்களது உணர்வுகளையும் வலிகளையும் தெரிந்த ஒரு குரல் தேவைப்பட்டது.

ஆரி அர்ஜுனன் ஈழத்தமிழ் உணர்வாளர் என்பதுடன் ஈழத்தமிழ் பெண்ணையே திருமணமும் செய்துகொண்டவர். அந்தவகையில் அதற்கும் ஆரி அர்ஜுனனே குரல் கொடுத்துள்ளார்.

அதே போல மலையாள திரையுலகில் எனது குருநாதர் தம்பி கண்ணாந்தானம் மீது அபிமானம் கொண்ட இளம் நடிகர்களான பஹத் பாசில், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி, டொவினோ தாமஸ், இயக்குநர் லால்ஜோஸ், பின்னணிப் பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த பாடலை வெளியிடுகின்றனர்” எனக் கூறினார் இயக்குநர் அபிலாஷ்..

Bigg Boss Aari released Thai Nilam song

JUST IN ‘தளபதி 65’ மாஸ் போஸ்டர் ரிலீஸ்.; வேற லெவல் டைட்டில் வைத்த நெல்சன்

JUST IN ‘தளபதி 65’ மாஸ் போஸ்டர் ரிலீஸ்.; வேற லெவல் டைட்டில் வைத்த நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.

இப்பட முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் கொரோனா லாக்டவுன் பிரச்சினையால் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

விஜய்யின் பிறந்த நாள் நாளை ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று 21ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தளபதி 65 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசாகவுள்ளது என்பதை அறிவித்து இருந்தனர்.

அதன்படி BEAST என தலைப்பு வைத்து அறிவித்துவிட்டனர்.

BEAST treat for Vijay fans on Thalapathy Birthday

New Project

More Articles
Follows