தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த உருவாகியுள்ள படம் ‘காபி வித் காதல்’.
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இந்த காதல் பட்டாளத்துடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் இணைந்துள்ளார்கள்.
இதன் தமிழக திரையங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் காபி வித் காதல் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகியுள்ளது
.
இந்த இசை விழா தற்போது சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த இசை விழாவில் இப்பட பாடல்களை எழுதிய சினேகன் மற்றும் பேரரசு மேடை ஏறி பேசினர்.
சினேகன் பேசும்போது..
“உள்ளத்தை அள்ளித்தா” படமும் சுந்தர்சியால் இயக்க முடியும். அருணாச்சலம் & அன்பே சிவம் உள்ளிட்ட படங்களையும் இயக்க முடியும் என நிரூபித்தவர்.
நான் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும்போது இந்த படத்திற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. யுவனுக்காக அந்த பாடல் எழுதினேன்” என கூறினார்.
சுந்தர் சி பேசும்போது…
“யுவன் இசை என்றாலே அது போதை தான். அந்த போதை எனக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் தான். இந்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடித்துள்ளனர். 6 நாயகிகள் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்” என பேசினார்.
இந்த விழாவில் ஸ்ரீகாந்த் மற்றும் யோகிபாபு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Coffee with Kadhal songs and Trailer launch live updates