தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
VZ துரை இயக்கத்தில் சுந்தர் சி, ஆயிரா, தம்பி ராமையா, பாலக் லல்வாணி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 23ஆம் தேதி வெளியான படம் ‘தலைநகரம் 2’.
இன்று திங்கட்கிழமை ஜூன் 26 ஆம் தேதி இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆயிரா பேசியதாவது…
இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V Z துரை சாருக்கு நன்றி. நான் இந்த பர்வீன் கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா ? என பயந்தேன், ஆனால் துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர் சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
இணை தயாரிப்பாளர் மதுராஜ் பேசியதாவது…
நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப்படத்திற்காக 2,3 வருடம் உழைத்துள்ளோம்.
பிரபாகரன், விவேகானந்தன் சார், ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் உடனிருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளைத் தாண்டித் தான் வந்தது.
ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள் ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.
Actress Ayira open talk about Thalainagaram 2 character